வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆபீஸ் போற பெண்களா நீங்க? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 22, 2019

ஆபீஸ் போற பெண்களா நீங்க? அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

ஒரு அலுவலகத்தில் எத்தனை பேர் வேலை செய்தாலும் ஒரு குழுவிற்கான தலைவராக இருப்பது எப்பவுமே தனிச் சிறப்பு தான். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. ஏனெனில், ஒரு குழுவை, அதுவும் மாறுபட்ட மனநிலைக் கொண்ட பணியாளர்களை சரிவர இணைத்து இயக்கும் தலைமைப் பண்பு என்பது கூடுதல் திறனே.

அதிலும், குறிப்பாக நங்கள் ஒரு பெண் பணியாளராக இருந்தால் உங்களின் மீதான ஆதிக்கமும், எதிர்பார்ப்புகளும் இன்னும் கூடுதலாகவே இருக்கும். அலுவலக சூழலில் கூட்டத்தில் ஒருவராக இருந்து தனியே தலைவராக உருவெடுக்கும் பெண் பணியாளர்களுக்கான சில சிறந்த வழிமுறைகள் இதோ.

சுய மதீப்பீடு!

உங்களுக்கான தனி மதிப்பீட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை செயல்படுத்திக் காட்டுங்கள். குறிப்பாக, உங்களது மேலாளர் உங்களுக்கு என நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக அமைத்து செயல்படுங்கள்.
 உங்களது குழுவையும் செயல்படுத்த ஊக்குவியுங்கள். இதனை நீங்கள் அடையும் போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும்.

புதிய உத்திகள்!

பிற பணியாளர்கள் செய்வதைப் போலவே தொடர்ந்து செய்து கொண்டிருக்காமல் ஏதேனும் புதிய திட்டத்தை செயல்படுத்துங்கள். அணித் தலைவர் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செயல்படுத்தி அதில் தனித்து காட்ட வேண்டும். இதையே உங்களது குழுவும் விரும்பும்.

முடிவெடுப்பதில் முன்னுரிமை!

ஏதேனும் ஓர் விசயத்தை செய்யும் முன் முடிவெடுப்பதை முன்னுரிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது உயரதிகாரிக்காத காத்திருப்பதைக் காட்டிலும் நீங்கள் எடுத்த முடிவை உயரதிகாரி ஏற்கும் வகையில் செயல்படுத்துங்கள்.
 ஒரு வேலை உங்களது உயர் அதிகாரி எடுக்கும் முடிவு தறவாக இருந்தால் தயங்காமல் அதனை தெரிவித்து விடுங்கள். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும். உங்களது தலைமைப் பண்பையும் இது ஊக்கத்தோடு காட்டும்.

திறன் மேம்பாடு! 

ஒரு வேலை ஒதுக்கியுள்ளார்கள், அதனை சிறப்பாக செய்து கொண்டே இருக்கிறேன் என்று இல்லாமல் அடுத்த வேலையை நோக்கி நகருங்கள். அல்லது உங்களது வேலையிலேயே கூடுதல் திறனை இணையுங்கள். புதிதுபுதிதாக கற்றுக் கொண்டே இருங்கள். 
அவற்றை சக பணியாளர்களிடமும் வெளிப்படுத்துங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் உங்களை விட கற்ற ஒருவரால் நீங்கள் பின்தள்ளப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புடன் செயல்படுங்கள்!

எனக்குறிய வேலையை முடிப்பது மட்டும் தான் வேலை என்று இல்லாமல் உங்களைச் சுற்றியுள்ள, உங்களது அணியில் உள்ள பிற பணியாளர்களின் வேலையையும் முடிக்க உதவுங்கள். 
செய்த வேலைக்கு ஊதியம் என்று இல்லாமல் இது என் நிறுவனம் என்ற மனநிலையை ஏற்படுத்துங்கள். இங்கே ஏற்படும் லாபத்திலும், நஷ்டத்திலும் எனக்கும் பங்குண்டு என உணர்ந்தால் மட்டுமே ஒரு அலுவலகத்தை வயர்ச்சியை நோக்கிநகர்த்த முடியும்.

கற்றுக்கொள்ளுங்கள்!

 அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்கிறேன், பணி முடிந்தவுடன் வீடு திரும்புகிறேன் என்று இல்லாமல் வேலை நேரத்திலேயே புதிது புதிதான விசயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 உங்களது பணிக்கு தொடர்புடைய அல்லது அலுவலகத்தில் பணியாற்றும் வேற்று துறையினர், வேறு குழு உறுப்பினர்களிடமும் நட்புடன் பழகுங்கள். அவர்களது பணி குறித்தும் கற்றுக் கொள்ளுங்கள்.

எதற்கும் தயங்காதீர்கள்! 

 இது அலுவலகங்களில் பொதுவாக நடக்கும் ஒன்றுதான். ஏதேனும் புதிதாக செய்து தவறாகிவிட்டால் மேல் அதிகாரி திட்டுவார், வேலைக்கு குந்தகம் ஏற்பட்டு விடும் என்று பயந்தே புதிய வேலையை செய்யாமல் இருப்போம். அவ்வாறு இல்லாமல் தைரியத்துடன் உங்களது பணியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துங்கள். எடுத்த புதிய காரியத்தில் வெற்றியை நிலைநாட்டுங்கள். இது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும்.


No comments:

Post a Comment