வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓசூர் கிராமத்தில் வீட்டு மனையை திருடி விற்ற கிராம நிர்வாக அலுவலர் - Osur Village VAO harassment
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 14, 2019

ஓசூர் கிராமத்தில் வீட்டு மனையை திருடி விற்ற கிராம நிர்வாக அலுவலர் - Osur Village VAO harassment



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் ஓசூர் மேல் காலனியை சேர்ந்த உபகாரம் க/பெ சவுரியப்பன் இவர்களுக்கு 2000-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது.


வீடு எதுவுமே கட்டாமல் இருந்ததால், இந்த வீட்டு மனையை எப்படியாவது நாம் பெறவேண்டும் என்ற நோக்கில் அதே ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தார். பிறகு பேசிய ஒப்பந்தப்படி ₹1,00,000/- (ஒரு லட்சம்) பெற்றுக் கொண்டு நில ஆவணத்தில் திருத்தம் செய்து (VAO) மோசடி செய்துள்ளார்.



மேலும் மோசடியை பற்றி தெரிந்த உபகாரம் கி.நி.அலுவவரிடம் கேட்ட போது நான் அப்படி ஏதும் செய்ய வில்லை என்றும் மீறி எதாவது பேசினால் உங்களை தடம் தெரியாமல் செய்து  விடுவேன் என்றும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார்.


ஆழ்ந்து விசாரித்த போது இதில் வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளரும் சேர்ந்து மோசடி செய்துள்ளார்கள். ஆகையால் இவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு புகார் செய்யப்படும்.
















No comments:

Post a Comment