வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கயிற்று கட்டில் மேல் தூங்கிய குழந்தை மாயம்.. கிணற்றில் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 25, 2019

கயிற்று கட்டில் மேல் தூங்கிய குழந்தை மாயம்.. கிணற்றில் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி

கயித்து கட்டில்மேல தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி மாயமானதோ தெரியவில்லை.. வீட்டின் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கனகராஜ் - காஞ்சனா. கனகராஜ், ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை.. பெயர் அம்ருதா! விளாங்குறிச்சியில் தோட்டத்துப் பகுதியில் காஞ்சனாவின் பெற்றோர் வீடு உள்ளது. 

இங்கு நேற்றிரவு இவர்கள் தங்கி இருந்தனர். இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு, படுக்க போனார்கள்.


தூங்க சென்றனர் 
 தம்பதி இருவரும் குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே தூங்கினார்கள். வந்திருந்த சொந்தக்காரர்களில் சிலர் வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலில் தூங்கியுள்ளனர். இன்று அதிகாலை இரண்டரை மணிக்கு, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்க வைத்துள்ளார் காஞ்சனா.

காணவில்லை
காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தையை காணோம். எங்காவது விளையாடி கொண்டிருப்பாளோ என்று வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால், அங்கும் இல்லை. இதனால் அந்த தெரு உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் குழந்தையை தேடி அலைந்தனர்.


பாழடைந்த கிணறு 
அதேபோல, வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கருவேலங்காட்டுப் பகுதியில் வந்தும் தேடினார்கள். அப்போது, பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு கதறி துடித்தனர். 

கயிறு கட்டி குழந்தையை தூக்கினார்கள். அம்ருதா கண்ணே திறக்கவில்லை.. இதனால் மயங்கி இருக்கிறாள் என்று ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர்.

விசாரணை ஆரம்பம் 
 வீட்டுக்கு உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி இருந்தது? ஒருவேளை விளையாட வந்திருந்தாலும், இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? அல்லது குழந்தையை யாராவது கிணற்றில் வீசி விட்டார்களா? அல்லது குடும்ப தகராறா? என்ன காரணம்? என்றெல்லாம் இதுவரை தெரியவில்லை.

 ஆனால் துருதுருன்னு விளையாடிட்டு இருந்த குழந்தை, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பீளமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


No comments:

Post a Comment