வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 28, 2019

குடும்ப பிரச்னைக்கு தற்கொலை முயற்சி: வாலிபரை காப்பாற்றிய செல்பி.!

செல்பியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாம் கேள்விபட்டியிருக்கின்றோம். செல்போன் வழியாக எமன் நுழைந்து பல உயிர்களை பாச கயிறு போல செல்பியை வீசி (எடுக்க வைத்து) பலரின் உயிரை பிரித்து விட்டதாக கூறியுள்ளனர்.






பலரின் வாழ்கையே ஒரு செல்பியால், அடுத்த நெடியே பரிதாமாக பறிபேனானதும் உண்டு. நாம் எதார்த்தமாக வாழ்கையில் புகைப்படங்களை நின்று ரசிக்கும் வகையில் எடுத்த போது, அடுத்த நெடியே கூற்றுவன் கூவி வந்து அவனையும் தூக்கி சென்றுள்ளான்.
 குடும்ப பிரச்னையால் தன் உயிரை மாய்த்துக் கொள்ளவதாக செல்பி எடுத்து அனுப்பினார். இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் இவர் காப்பாற்றப்பட்ட விசிஷயம் தான் தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.



செல்பியால் பல உயிர்பறிபோனது: 
 பலர் செல்பி எடுக்க மலையேற்றங்களில் நின்று எடுத்தனர். அப்போது, எதிர்பாரதவிதமாக தடுக்க விழுந்து இறந்ததும் உண்டும். மேலும், சிலர் தண்டவாளத்தின் அருகேவும் ரயில் செல்லும் முன் செல்பி எடுக்க முயன்ற போது, அவர்களின் உயிர் அடுத்த நொடியே பஸ்பம் ஆனதும் பார்த்து இருப்போம். பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், செல்பியால் குடும்ப உயிரிழந்து சோகத்தில் முழ்கியதையும் பார்த்து இருக்கின்றோம்.



உயிரை காப்பாற்றிய செல்பி:
ஓரே ஒரு செல்பியால் பல்வேறு சம்பவங்களில் பலரின் உயிர்கள் பரிபோனதும் உண்டு என்பது இருக்கட்டும். தற்போது குடும் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ள சென்ற ஒருவர் எடுத்த செல்பி உயிரை காப்பாற்றியும் உள்ளது. இது பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்துள்ளது கேரளாவில் தான்.




கேரளாவை சேர்ந்த வாலிபர்:
கேரள மாநிலம் சங்கனாச்சேரியை சேர்ந்த வாலிபர் மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வெறுத்து போன மணி, தன் வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். நேராக சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகே வந்தார்.














தற்கொலைக்கு முன் செல்பி: 
 யாருமற்ற இடத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு, வாழ்கையே ரொம்ப வெப்பா இருக்கு நண்பர்களே. வாழ்ந்தது போதும், அதனால் தற்கொலை பண்ணப்போறேன் என்று பேசியபடி செல்பி எடுத்தார். அதை தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட தண்டவாளத்தில் படுத்துவிட்டார்.
செல்பி வாட்ஸ் ஆப் குரூப்களில் சேரானது: 
 இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணி எங்கு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். அதற்காக செல்பியை உடனடியாக பல வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட குரூப்களில் சேர் செய்தனர். அப்போது அவர் எடுத்த செல்பியில் ஒரு மைல் கல் காணப்பட்டது.



82 என்ற தண்டவாள எண்:
அப்போது அவர் எடுத்த செல்பியில் 82 என்ற எண் தெரிந்தது. அதை வைத்து ரயில்வே அதிகாரிகளை கொண்டு விசாரித்தனர். அது சங்கனாச்சேரி ரயில்வே கேட் அருகில் உள்ள இடம் என தெரியவந்தது. உடனடியாக அங்கியிருந்த கேட் கீப்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியை சேந்த சிலரை அழைத்துக் கொண்டு சிலர் சென்றனர்.




போலீசார் அறிவுரை:
ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக் கொண்டிருந்த மணியை போலீசார் மீட்டனர். குடும்ப பிரச்னைக்கு தற்கொலை தீர்வாக என்று போலீசார் நீண்ட நேரம் கவுன்சிலிங் கொடுத்து வழக்குபதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

Read more at: https://tamil.gizbot.com/news/selfie-helps-thwart-kerala-youth-suicide-family-issue/articlecontent-pf160143-022367.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

No comments:

Post a Comment