முறுக்கு மீசையுடன், கம்பீரமாக நிற்கிறாரே.. இவர்தான் 4 வயசு 
குழந்தையை நாசம் செய்து பாத்ரூம் பக்கெட்டில் பிணமாக போட்டவர்.. பலியான 
குழந்தையின் பெரியப்பா..
அதிலும் இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது 
வெட்கக்கேடு!
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்த தம்பதி 
ராஜேந்திரன் - செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு கார்முகிலன் என்ற 7 வயது 
மகனும் ,ஷன்மதி என்ற 4 வயது மகளும் உள்ளனர். 
 கார்முகிலன் 2-ம் கிளாஸ் படிக்கிறான். அவனை டியூஷனில் விடுவதற்காக 
செந்தமிழ்ச்செல்வி நேற்று கிளம்பி சென்றுள்ளார். வீட்டில் ஷன்மதியை தனியாக 
இருந்தாள். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து பார்த்தால் ஷன்மதியை காணவில்லை.
பாத்ரூம் பக்கெட்  
 பதறியடித்து கொண்டு எல்லா இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. 
அதனால் திருமுல்லைவாயில் போலீசில் புகார் கொடுக்க ஓடினார். திரும்பவும் 
வந்து அக்கம்பக்கம் வீடுகளில் நுழைந்து தேடினார். அவருடன் பொதுமக்களும் 
சேர்ந்து தேடினார்கள். 
ஒருசிலர் செந்தமிழ்செல்வி வீட்டுக்கே இன்னொரு முறை 
வந்து தேடி பார்க்கலாம் என்று பார்த்தபோதுதான, ஷன்மதி, வீட்டின் பாத்ரூமில்
 உள்ள பக்கெட்டில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணமாக 
கிடந்தாள்.
பிறப்பு உறுப்பு
தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது குழந்தைக்கு பிறப்பு 
உறுப்பில் காயம் இருந்தது. முதல் சந்தேகமே பக்கத்து வீட்டுக்காரர் மீதுதான்
 விழுந்தது. அவர் செந்தமிழ்செல்வியின் சொந்தக்காரர்தானாம். பெயர் மீனாட்சி 
சுந்தரம், ஓய்வுபெற்ற ராணுவ வீரர். வயசு 60!
கம்மல், தலைமுடி
முதலில் சந்தேகத்தின்பேரில்தான் அவரது வீட்டுக்குள் சென்று போலீசார் 
சோதனையிட்டனர். அப்போது படுக்கை அறையில் குழந்தையின் உடைந்த கம்மல், 
தலைமுடி கிடந்தது. அதேபோல மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை 
இருந்தது. 
அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் வந்தது. இப்போது 
போலீசார் தங்கள் பாணியில் வேலையை காட்டினர். கடைசியில் குழந்தையை பாலியல் 
வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார்.
வா.. விளையாடலாம்
போலீசாரிடம் சொல்லும்போது, "வீட்டில் குழந்தை தனியாக இருந்தது. வா.. 
விளையாடலாம் என்று என் வீட்டிற்கு கூட்டி சென்றேன். என் படுக்கை அறையில் 
வைத்து மூர்க்கத்தனமாக பலாத்காரம் செய்தேன். இதில் குழந்தை இறந்துவிட்டாள்.
 பயந்து போன நான், குழந்தையின் சடலத்தை பாத்ரூமுக்கு எடுத்துச்சென்று 
கோணிப்பையில் கட்டி வைத்தேன்" என்றார்.
 
தாத்தா.. தாத்தா 
இதனை அடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் 
அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட கொடுமை, இந்த 
மீனாட்சி சுந்தரம் பெரியப்பா முறை என்றாலும், எப்பவுமே தாத்தா, தாத்தா 
என்றுதான் கூப்பிட்டு கொண்டு ஆசை ஆசையாக ஓடிவருவாளாம் குழந்தை!
 

No comments:
Post a Comment