வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகாதமிழ் சினிமாவில் மீண்டும் பிசியாகி இருக்கும் ஹன்சிகா, அஜித்தை பிடிக்கும் என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.

நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஒரே குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான். இதுபற்றி கூறும்போது ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.
 
காரணம் அந்த கதாபாத்திரத்தில் நெகட்டிவான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று கூறியுள்ளார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment