வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2 பேருடன் ஸ்பேஸுக்கு சென்ற ரஷ்ய ராக்கெட்.. நடுவானில் வெடித்தது.. எப்படி தப்பித்தனர் பாருங்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

2 பேருடன் ஸ்பேஸுக்கு சென்ற ரஷ்ய ராக்கெட்.. நடுவானில் வெடித்தது.. எப்படி தப்பித்தனர் பாருங்கள்!நடுவானில் வெடித்த ஸ்பேஸ் கிரேப்ட், தப்பித்த வீரர்கள்

ரஷ்யாவை சேர்ந்த ராக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும்போது நடுவானில் வெடித்து சிதறி உள்ளது. நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு இப்போதெல்லாம் சொந்த ராக்கெட்டை பயன்படுத்துவது கிடையாது. அதற்கு பதிலாக ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் போன்ற தனியார் நிறுவனங்களை நம்பி இருக்கிறது.
 ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோமோஸ் (Roscosmos) விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தையும் அவ்வப்போது நாசா நம்பி உள்ளது. ஒரு காலத்தில் நாசாவும், ராஸ்கோமோஸும் பரம எதிரிகள் என்பது வேறு கதை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

மேலே அனுப்பினார்கள்
இந்த நிலையில் நிக் ஹாக் என்ற அமெரிக்கரையும், அலெக்சி ஒவ்சினின் என்ற ரஷ்யரையும் சுமந்து கொண்டு, விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நோக்கி சென்றது ரஷ்ய ராக்கெட். ரஷ்யாவின் சோயுஸ்  ஏஃப்ஜி ராக்கெட்டின் உதவியுடன் இந்த இருவரும் விண்ணை நோக்கி அனுப்பப்பட்டனர். கஜகஸ்தானில் உள்ள சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இவர்கள் அனுப்பப்பட்டனர்.


நடுவானில் வெடித்தது
இந்த நிலையில் நேற்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 50 கிலோ மீட்டர் தூரம் சென்ற சமயத்தில் பாதியில் வெடித்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் ராக்கெட் வேகமாக பூமியை நோக்கி விழுந்துள்ளது.

கேப்ஸ்யூல் வந்தது 
 ஆனால் ராக்கெட் வெடித்தவுடன், அதற்குள் இருந்த கேப்ஸ்யூல் வெளியானது. இந்த கேப்ஸ்யூலில்தான் இரண்டு வீரர்களும் இருந்தனர். இவர்கள் இதற்குள் பாதுகாப்பாக இருந்தனர். இதையடுத்து கேப்ஸ்யூல் வேகமாக பூமியை நோக்கி வந்தது. இது அனைத்து விதமான சேதங்களையும் தாங்குமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.


திறமை 
 இதையடுத்து பூமிக்கு அருகில் வந்தவுடன் இந்த கேப்ஸ்யூலின் பாராசூட் திறந்தது. இதனால் இந்த கேப்ஸ்யூலின் வேகம் குறைந்தது. இதனால் அந்த கேப்ஸ்யூல் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருவரும் தற்போது மருத்துவ பரிசோதனை முடிந்து நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது 
 இது ரஷ்யாவிற்கு பேரிடியாக முடிந்து இருக்கிறது. இதனால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோயுஸ் ராக்கெட்டுகளை கைவிட ரஷ்யா முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால் அமெரிக்கா ரஷ்யா உறவில் இன்னும் கொஞ்சம் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment