வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது- தமிழக அரசு முடிவு



மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயணத்துக்காக கடந்த 2006-ம் ஆண்டு நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

“பெல் 412 இ.பி.” என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் கொண்டது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டங்களில் பல தடவை அந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி உள்ளார். அவர் மரணத்துக்கு பிறகும் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.


கடைசியாக அந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டது. பிறகு பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என்று தெரிகிறது. ஹெலிகாப்டரை விற்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சென்னை விமான நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment