வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால், விஹாரிக்கு இடமில்லை: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால், விஹாரிக்கு இடமில்லை: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு



ஹைதராபாத்தில் நாளை தொடங்க இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விளையாடிய 12 பேர் கொண்ட வீரர்களே 2-வது போட்டியிலும் மாற்றமில்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 272 ரன்கள் வித்திசாயத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வழக்கமாகப் போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன்புதான் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பே 12 வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் தொடங்க உள்ள நிலையில் 12 பேர் கொண்ட அணியில் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிவிப்பில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் 2-வது போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கி சதம் அடித்து அசத்திய பிரித்வி ஷா 2-வது டெஸ்ட் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.எல். ராகுல் முதலாவது டெஸ்ட் போட்டியில் டக்அவுட்டில் ஆட்டமிழந்திருந்தாலும், அவருக்கு 2-வது போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அஜின்கயே ராஹனேயின் பேட்டிங் ஃபார்ம் குறித்து சமீபத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் போட்டியில் 41 ரன்கள் மட்டுமே சேர்த்த ரஹானே, 11 டெஸ்ட் போட்டிகளில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment