வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பென்ஸ், பிஎம்டபிள்யூ-வை அடித்து துவம்சம் செய்து விட்டு கெத்தாக முன்னேறும் வால்வோ.. பதுங்கி கொண்ட ஆடி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

பென்ஸ், பிஎம்டபிள்யூ-வை அடித்து துவம்சம் செய்து விட்டு கெத்தாக முன்னேறும் வால்வோ.. பதுங்கி கொண்ட ஆடி



லக்ஸரி கார் நிறுவனங்களில், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவை காட்டிலும், வால்வோ நிறுவனம் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுவீடன் நாட்டை சேர்ந்த லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனம் வால்வோ. வால்வோ நிறுவனத்தின் கார்களில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனால் இந்தியாவில் வால்வோ கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
2017ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான 9 மாத கால கட்டத்தில் வால்வோ நிறுவனம் இந்தியாவில், 1,413 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது, 2018ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்தில், 1,896ஆக அதிகரித்துள்ளது.



இதன்மூலம் 2017ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்தில், இந்தியாவில் வால்வோ கார்களின் விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் வால்வோ நிறுவனம் 28 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது. அந்த வளர்ச்சி விகிதம் 2018ம் ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. வால்வோ நிறுவனம் இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன.


அதே நேரத்தில் ஜெர்மனியை சேர்ந்த மற்றொரு முன்னணி லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், விற்பனையில் சற்றே சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் 11,869 கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்தில் 11,789ஆக சற்றே சரிவை சந்தித்து இருக்கிறது. அதே நேரத்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மற்றொரு லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ வளர்ச்சியை சந்தித்துள்ளது.


2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 7,915 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனங்களில் வால்வோ 34 சதவீத வளர்ச்சியையும், பிஎம்டபிள்யூ 11 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ள நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் மட்டும் சிறிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது.



ஆனால் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மற்றொரு முன்னணி லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆடி, 2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் மாதம் வரையிலான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை இன்னும் வெளியிடவில்லை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment