வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

தொழில் அதிபரை மறுமணம் செய்யும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம். ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். அவர்கள் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சவுந்தர்யா தனது மகனுடன் தந்தையின் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார்.சவுந்தர்யா  
சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் அண்மையில் சென்னையில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ஜனவரி மாதம் திருமணம் நடக்க உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இது குறித்து யாரும் உறுதி செய்யவில்லை.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

விசாகன் 
விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமண செய்தியை அடுத்து நெட்டிசன்கள் விசாகனின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தேடிப் பிடித்து பார்த்து வருகிறார்கள்.


சென்னை
விசாகன் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்தவர். சென்னையில் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 600 கோடி என்று கூறப்படுகிறது. குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் பத்திரிகையாளராக விசாகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஐபி  
சவுந்தர்யா படம் இயக்குவது, தயாரிப்பது என்று பிசியாக உள்ளார். அவர் தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கினார். விஐபி 3 படம் வரும் என்று தெரிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு விஐபி 3 படம் துவங்கப்படும் என்றார் தனுஷ். ஆனால் இன்னும் அந்த பட வேலைகள் துவங்கவில்லை.

வணங்காமுடி 
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ரஜினிகாந்தின் வருங்கால மருமகனான விசாகனின் தந்தை வணங்காமுடியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment