வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது? | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, July 04, 2019

ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது? | Run World Media

இது உண்மையிலேயே வினோதமான சம்பவம்தான். ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.



ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரயில்கள்தான் இயங்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தியிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?



கடந்த மாதம் 30-ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப்பட்டது. 

பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றுதான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.



இரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். பழுது பார்த்தபோது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்; எலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்புதான் தெரிந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment