வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கலாம் கனவு காணச் சொன்னார்.. இங்கு ஒரு "குடிமகன்".. கால்வாயில் அதை கண்டு கொண்டுள்ளார்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, August 06, 2019

கலாம் கனவு காணச் சொன்னார்.. இங்கு ஒரு "குடிமகன்".. கால்வாயில் அதை கண்டு கொண்டுள்ளார்!

மதுபோதையின் உச்சத்தில் பாதாள சாக்கடையில் சொகுசாக உறங்கிய இளைஞரால் மக்கள் வேதனை அடைந்தனர். 
 

ஒரு சினிமாவில் வசனம் வரும். படிக்காதவனைக் கூட பார்க்காமல் இருக்கலாம். ஆனால் குடிக்காவனை பார்க்காமல் இருக்கவே முடியாது என்று. அந்த அளவுக்கு அரசு ஆதரவுடன் குடிப் பழக்கம் அமோகமாக மேலோங்கி வளர்ந்து தழைத்துக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் அழிந்து நாசமாகி சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வயது வித்தியாசமின்றி மது பழக்கத்திற்கு ஆளாகி பெரும்பாலானோர் அடிமையாகி வருகின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சமூகத்தில் மரியாதை இழந்து நிற்கும் அவலங்களோடு எண்ணத்தகாத செயல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

போதை அவலம் 
மதுபோதைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உச்சகட்ட அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதற்கு சான்றாக தான் மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான்நகர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள அரசு மதுபான கடை ஒன்றில் 30வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் மது அருந்தியுள்ளார்.

தள்ளாடி தள்ளாடி
போதை தலைக்கேறியது. ஏறிய போதையில் அப்படியே தள்ளாடித் தள்ளாடி நடந்தார். பின்னர் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் நிம்மதியாக படுத்துக் கொண்டார். சாக்கடை வாசம் சென்ட் போல மணந்ததா என்று தெரியவில்லை.. அப்படியே சுகமாக தூங்க ஆரம்பித்து விட்டார். அவர் சாக்கடையில் உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாக்கடையில் ஓய்வு 
போதையில் தடுமாறி உள்ளே விழுந்த இளைஞர் தான் எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் சாக்கடை நீரில் மிதந்தபடி தூங்குகிறார். இதனை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். நாட்டின் தூண்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர் சமுதாயம் இது போன்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதன் சாட்சியாக அமைந்துள்ளது இந் காட்சி.

வருங்கால இந்தியா
இதைப் பார்த்த சில இளைஞர்கள் கருமம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு, போதை இளைஞரை தூக்கி போதையை தெளியவைத்து அனுப்பி வைத்தனர். இளைஞர் மது போதையில் பாதாள சாக்கடையில் ஸ்டைலாக உறங்கும் காட்சி நெட்டிசன்களிடையே வேகமாக பரவி வருகிறது. வருங்கால இந்தியா.. அல்ல அல்ல.. தற்கால இந்தியாவின் இளைஞர் சமுதாயம் இப்படி குடித்துக் கெட்டுப் போய்க் கொண்டிருப்பது நிச்சயம் நாட்டுக்கு நல்லதல்ல.

No comments:

Post a Comment