Run World Media: 01/02/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 2, 2019

என் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்!

"என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்கல" என்று பெற்றோர் கதறிய பின்னர்தான், மாணவியின் மரணம் வெளியே தெரியவந்தது. 


ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி. 25 வயதாகிறது. இவர் சென்னை ஐஐடியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படிப்பதால், தினமும் தன் அம்மா- அப்பாவுடன் ரஞ்சனா குமாரி பேசுவது வழக்கம். ஆனால் 2 நாளாக மகளிடமிருந்து எந்த போனும் அவர்களுக்கு வரவில்லை.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


போன் எடுக்கவில்லை

நியூ இயர் வாழ்த்து சொல்லவும் மகள் கூப்பிடவில்லை. போன் செய்தாலும் மாணவி எடுக்கவில்லை. இதனால் குழப்பமும், பயமும் அடைந்த பெற்றோர், உடனடியாக ஐஐடி ஹாஸ்டல் வார்டனுக்கு போன் செய்து, தகவலை சொன்னார்கள்.


அதிர்ச்சி 

"என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல? ஏன் போன் எடுக்கல" என்று கேட்டு கதறி அழுதார்கள். இதையடுத்து, ஊழியர்கள் மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.


கதவை உடைத்தனர்

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்கள். எதற்காக மாணவி தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.


செல்போன் ஆய்வு 

காதல் விவகாரம் ஏதாவது இருக்குமா? அல்லது வேறு ஏதாவது விஷயமா என்றும் தெரியவில்லை. "ரூமுக்கு போய் தூங்குகிறேன்" என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டுதான் அறைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதற்கு பிறகு அவர் வெளியே வரவே இல்லையாம். இதனால் போலீசார் ரஞ்சனா குமாரியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்... சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரை

அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார். 


ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-


எளிமையான வாழ்க்கை வாழுங்கள், அது ஊழலை அகற்றிவிடும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும். திருவாரூரில் தேர்தல் நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் பரிசு திட்டம் இல்லை.

ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற பரிசு பொருட்கள் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 மற்ற மாநில வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் விரைவில் மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை விளங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவன் கண் எதிரில் மனைவிக்கு பாலியல் சீண்டல்..

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, கணவரோடு இருந்த பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் எம்ஜிரோடு பகுதியில் நள்ளிரவில் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்களும், பெண்களும் என பல ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவில் எம்ஜி ரோடு பகுதியில் கூடி நின்று, புத்தாண்டை வரவேற்பார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆனால் சமீப காலமாக இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி காமுகர்கள், அங்கு வரும் பெண்களின் உடலில் கண்ட இடங்களையும் தொடுவது, சீண்டுவது அதிகரித்துள்ளது. கடந்த வருடம், மற்றும் அதற்கு முந்தைய வருடம் இதேபோன்ற புகார் காவல் நிலையத்தில் பதிவான நிலையில், இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்திலும் அத்துமீறல் அரங்கேறியுள்ளது. 

ஜெயநகரை சேர்ந்த கணவரும், மனைவியும், எம்ஜிரோடு பகுதிக்கு சென்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் நிறைவடைந்து நள்ளிரவு 1 மணியளவில், அவர்கள் அருகேயுள்ள ரிச்மண்ட் சர்க்கிள் பகுதிக்கு வந்தபோது, மூன்று குடிகாரர்கள், வழிமறித்து, அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். தட்டிக்கேட்ட கணவரை தாக்கி, அவரின் பர்ஸ், செல்போன் போன்றவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

2019 ஆண்டில் பெரிய பெரிய அதிர்ஷ்டங்களை அனுபவிக்கப் போகும் 5 ராசிகள் யார் தெரியுமா?

2019 சில இராசிக்காரர்களுக்கு நிகழ்ச்சி மயமான மற்றும் வாழ்க்கையையே மாற்றும் ஆண்டாக இருக்கப் போகிறது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் . 


நட்சத்திரங்கள் தீவிரமாக ஆதரவளிக்கும் அந்த சில அதிர்ஷ்டசாலி இராசிகளின் மத்தியில் உங்கள் இராசி இருக்கிறதா என அறிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறதா?. இருக்கும். இந்த ஆண்டில் அதிர்ஷ்டம் வழங்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி இராசிகளின் பட்டியல் இதோ உங்களுக்காக,
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இந்த ஐந்து ராசிகளும் 2019-ல் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் 2019 -ல் உங்களுடைய வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்தும் ஐந்து அதிர்ஷ்டசாலி இராசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்,ரிஷபம்  

2018-ம் ஆண்டில் உங்கள் வழக்கமான வாழ்க்கையில் சலிப்பை மட்டுமே உணர்ந்திருந்தால், அந்த வாழ்க்கைக்கு நீங்கள் விடைகொடுக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கை இப்போது மாற்றத்தை சந்திக்கப்போகிறது மற்றும் உங்கள் உலகத்தில் உங்கள் ஆளுமை மற்றும் இருப்பின் ஒரு புதிய பக்கத்தை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். உங்கள் நம்பிக்கை மற்றும் தைரியமான தன்மை அனைவராலும் பாராட்டப்படும். உங்கள் காதல் வழி இந்த வருடம் அதிகம் பலனளிக்கும். உங்கள் உணர்வு மற்றும் ஆற்றல், முன்னணியில் வந்து உங்களை வெற்றியை நோக்கித் தள்ளும்.


சிம்மம் 

லியோஸ் 2019 ஆம் ஆண்டில் மிகவும் நேர்மறையான மாற்றத்தைப் பெறுவார்கள், அது அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு ஆதிக்க வரம்பையும் மாற்றியமைக்கும். உங்கள் கனவுகளை அடைய இந்த ஆண்டில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எந்த நபரின் வாழ்க்கையும் இந்த உலகத்தில் ஒரு சுமூகமான வழியில் மட்டுமே செல்லும்படி இருக்க முடியாது. எனவே, யாருக்கெல்லாம் சவாலான வாழ்க்கை இருக்கிறதோ, அவர்களுக்கு அதைச் சமாளிக்க இந்த ஆண்டு மிகவும் எளிதாக இருக்கும். உங்கள் வாழ்வில் சில அதிர்ஷ்டமான விஷயங்களைத் தவிர, இந்த ஆண்டில் உங்கள் உண்மையான அன்பையும் காண்பீர்கள்.


கன்னி  

கன்னி இராசிக்காரர்கள் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்கள். எனினும் 2019, உங்கள் உண்மையான திறன்களை இந்த பரந்த உலகில் நிரூபிக்க உங்களை மூடிய ஓடுகளைத் துளைத்து வெளியே வரும் வருடமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் முழுமையான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள், மேலும் சூழ்நிலைகளை இன்னும் திறம்பட மற்றும் வெற்றிகரமாக எப்படி சமாளிக்க வேண்டுமென்பதும் தெரியும். நீங்கள் நீண்ட காலமாக கனவு கண்டிருந்த ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க இந்த ஆண்டு மிகவும் சாதகமானதாக இருக்கலாம். நீங்கள் யாரையாவது காதலிப்பதை நிறுத்தியிருந்தால், இந்த ஆண்டைச் சிறப்பாக்க அவர்களைத் தவிர்த்து விடுவீர்கள். நீங்கள் இந்த ஆண்டு ஒரு புகழ்பெற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்வீர்கள்.


மகரம் 

மகர இராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் தைரியமானது. நீங்கள் ஒரு வெல்ல முடியாத ஆளுமையாக இருப்பீர்கள். இந்த ஆண்டு உங்களை எதுவும் பயமுறுத்த முடியாது. காதல் மற்றும் தொழில்முறை களம் இரண்டிலும், இந்த ஆண்டு ஒரு நம்பிக்கையான அணுகுமுறையை நீங்கள் நிரப்பிக் கொள்வீர்கள். நீண்ட காலமாக ஓநாய் போல தனிமையில் காத்திருந்த நீங்கள், இப்போது உங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தேடுவீர்கள். யாரோ ஒரு விசேஷமான நபருக்காக இந்த வருடத்தில் உங்கள் இதயத்தை திறக்க பயப்படவோ அல்லது தயங்கவோ மாட்டீர்கள்.


மீனம்  

உள்ளுணர்வு கொண்ட மீன இராசிக்காரர்கள், இந்த ஆண்டு தங்கள் வாழ்வின் ஒவ்வொரு எல்லையிலும் நிறைய மாற்றங்களைப் பெறுவதைக் காண்பார்கள். அவர்கள் தங்கள் சந்தேகங்களை ஒதுக்கி வைத்து தங்கள் கனவுகளுடன் முன்னேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு உங்கள் மேல் யாரோ நடப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது. சில நேரங்களில், உங்களை உற்சாகப்படுத்தவும், உங்களைச் சுரண்ட முயற்சிக்கிறவர்களிடமிருந்து உங்கள் நலன்களைப் பாதுகாக்கவும் உங்கள் வலிமையைப் பயன்படுத்த நீங்கள் தயாராக இருப்பீர்கள். எனவே வேறு எதையும் விட, தைரியத்தையே பரிசாக 2019 -ம் ஆண்டு உங்களுக்கு கொடுக்கப்போகிறது.

தாய்மை உணர்வு.. அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்போலீஸ்..

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் நகரில் அரசு மருத்துவமனை அருகே அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண்போலீஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அப்சல்கஞ்ச் பகுதியில் மிகவும் பழமையான ஒஸ்மானியா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையின் முன்பு நின்றிருந்த இர்பான் என்ற இளைஞரிடம் அவ்வழியாக வந்த பெண் குழந்தையை கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக சென்றுள்ளார்.
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

குழந்தையை விட்டுச் சென்ற பெண் குடிப்போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால், இரண்டுமாத பெண் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது. இதனையடுத்து, அருகில் இருந்த வீட்டில் புட்டிப்பால் எடுத்து வந்து குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும், குழந்தையின் அழுகை நிற்கவில்லை.


காவலர் மனைவி வந்தார்  

இந்தநிலையில், அப்சல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு குழந்தையை இர்பான் கொண்டுச் சென்று நடந்ததை கூறினார். பசியால் கதறிதுடித்த குழந்தை சோர்வாக காணப்பட்டது. அப்போது பணியில் இருந்த தலைமை காவலர் ரவீந்திரன், மகப்பேறு விடுமுறையில் உள்ள தனது மனைவி பிரியங்காவிற்கு போன் செய்துள்ளார்.


காவல்நிலையத்தில் கலகலப்பு  

பேகம்பேட் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றும் பிரியங்கா, உடனடியாக வாடகை கார் பிடித்து காவல்நிலையம் வந்து குழந்தையின் பசியை தீர்த்தார். குழந்தை சிறிது நேரத்தில் சிரிக்க தொடங்கியது. காவல்நிலையமே கலகலப்பானது.


போலீஸ் கமிஷனர் பாராட்டு  

இதுகுறித்து, தகவல் அறிந்த ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அஞ்சானி குமார், தலைமை காவலர் ரவீந்திரனின் கடமை உணர்வையும், பெண் போலீஸ் பிரியங்காவின் தாய்மை உணர்வையும் மனதார பாராட்டினார்.


குழந்தை ஒப்படைப்பு  

இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, தக்க நேரத்தில் வந்து தாய்மை உணர்வை காட்டிய பெண் போலீஸ் பிரியங்கவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், தெருக்களில் குப்பைகளை சேகரிக்கும் அந்த பெண் குழந்தையின் தாயை போலீசார் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.

வெளியானது விஜய் மகன் இயக்கிய குறும்படம்: சும்மா சொல்லக்கூடாது...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ஜங்ஷன் குறும்படம் வெளியாகியுள்ளது. 


விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்படுகிறார். அதாவது தாத்தா எஸ்.ஏ.சி. போன்று இயக்குனராக விரும்புகிறார் அவர். இந்நிலையில் அவர் ஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


ஜேசன் சஞ்சய் 

சஸ்பென்ஸாக போகும் அந்த குறும்படத்தில் தன்னை ராகிங் செய்யும் ரோஹித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன். ரோஹித்திற்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோஹித் மீது அந்த வழியாக வந்த கார் மோதவே ஜேசன் அதிர்ச்சி அடைகிறார்.


விபத்து  

காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை. ரோஹித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார். அந்த நபர் கிளம்பிய பிறகு ரோஹித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார்.


குறும்படம்  

ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்டம் முடிகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சஸ்பென்ஸை நன்றாக மெயின்டெய்ன் செய்துள்ளார் சஞ்சய்.


ஆங்கிலம் 

குறும்படத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாக பேசுகிறார்கள். அதுவும் ஆக்சென்ட் போட்டு பேசுகிறார்கள். எஃப் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அந்த குறும்பட லிங்கை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ஜேசன் சஞ்சய் படங்களை இயக்கிக் கொண்டே நடித்தால் நன்றாக இருக்கும் என்பது விஜய் ரசிகர்களின் விருப்பம்.

16 வயது சிறுமியை தனிமையில் சந்தித்த இளைஞர்.. விளைவு ஆட்டோவில் குழந்தை பெற்ற அவலம்..

கடலூரில் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவருக்கு கணவர் இல்லை. இரு மகள்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்றுவதற்காக இருவரையும் ஊரிலேயே தங்க வைத்துவிட்டு திருப்பூரில் கூலி வேலை செய்து வருகிறார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இவருடைய 16 வயது மகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கும் விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.


தனிமையில் சந்திப்பு  

இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் சென்று காதலை வளர்த்துக் கொண்டனர். இதன் விளைவு அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து ராகுலிடம் சொன்னபோது மீண்டும் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பலமுறை தனிமையில் சந்தித்துள்ளார்.


மருத்துவமனையில் 

கடந்த 30-ஆம் தேதி அந்த மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதாக அவரது உறவினரிடம் கூறியுள்ளார். அப்போது உடனே ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அப்போதே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதனை தொடர்ந்து தாயும், சேயும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பொய் கூறிய இளைஞர்  

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாய் சம்பவ இடத்துக்கு வந்தார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் ராகுலை அழைத்து விசாரித்தபோது அந்த சிறுமிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.


சிறைக்கு சென்ற இளைஞர் 

ராகுல் பொய் கூறுகிறார் என்பதை அறிந்த போலீஸார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டியதுதான் என மிரட்டினர். அதற்கு ராகுல், அந்த மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே நான் சிறைக்கே செல்கிறேன் என கூறினார்.


எதிர்பார்ப்பு 

16 வயது மாணவியுடன் தனிமையில் இருந்து விட்டு தற்போது பிரச்சினை என வந்தவுடன் ஜாதியை இழுக்கும் இந்த ராகுல்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்