வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Cinma Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Cinma Latest News. Show all posts
Showing posts with label Cinma Latest News. Show all posts

Monday, March 18, 2019

தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் மெழுகு சிலை

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.





இந்நிலையில் அவரது மெழுகுச்சிலையை திறந்து வைக்க, காதல் கணவர் ரன்வீர் சிங் மற்றும் தனது குடும்பத்தினருடன் லண்டன் பறந்து சென்றார்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதையடுத்து தனது குடும்பத்தினர் முன்னிலையில் தனது மெழுகுச்சிலையை தீபிகா படுகோனே திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.


வெள்ளை உடையில் அந்த அழகான மெழுகுச்சிலையை பார்த்து ரசித்த தீபிகா, இதனை உருவாக்கியவரிடம் நான் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா?” என்று கேட்டுள்ளார். அதற்கு, மீண்டும் அடுத்த முறை நீங்கள் வரும் வரை உங்கள் ஞாபகங்களாய் இந்த அழகு நிறைந்த மெழுகு சிலை இங்கே இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தீபிகா அருகில் அந்த சிலை நிற்பதை பார்த்து இரட்டை சகோதரிகள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பரவலாகி வருகிறது.

Wednesday, February 27, 2019

ஷாலினி அஜித் என்ன போன் வச்சிருக்கிறார் தெரியுமா?: தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

அஜித்தின் மனைவி ஷாலினி பயன்படுத்தும் செல்போனை பார்த்துவிட்டு வியக்காதவர்களே இல்லை. 
 

அஜித்தின் மனைவி ஷாலினி மகன்ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் வெளியே வரும்போது ரசிகர்கள் செல்ஃபி எடுக்க விரும்பினால் போஸ் கொடுக்கிறார். அப்படி அவர் அண்மையில் தனது மகனுடன் வெளியே வந்தபோது தல ரசிகர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளார்.


அந்த செல்ஃபியை பார்த்தவர்களுக்கும் வியப்பும், அதிர்ச்சியுமாக இருந்தது. காரணம் ஷாலினி நோக்கியா 3310 செல்போனை கையில் வைத்திருந்தார். 
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அந்த போனின் விலை ரூ. 3, 200 ஆகும். தற்போதுள்ள இளசுகளிடம் அந்த போனை கொடுத்தால் இதை எல்லாம் யார் பயன்படுத்துவார்கள் என்று தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் கோலிவுட்டின் முன்னணி நடிகரின் மனைவி அந்த போனை தான் பயன்படுத்துகிறார். அஜித்தை போன்றே ஷாலினியும் சிம்பிளானவர். அஜித்தும் சாதாரண போன் பயன்டுபடுத்துவதாக அவருன் நடித்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 07, 2019

செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.






இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார்.
  (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை கொண்டு வந்து அந்த நபர் நீட்டியபோது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையில் கடை திறப்பு விழாவிற்கு சென்றபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டதால் சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்த நபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, February 03, 2019

பேட்மிண்டனில் அசத்தும் விஜய் மகள்

விஜய்யின் மகள் பேட்மிண்டன் விளையாட்டில் அசத்தி வருகிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறும்படங்களை இயக்கி, நடித்து வருகிறார். 


தாத்தாவை போன்று இயக்குனராகவும், அப்பாவை போன்று ஹீரோவாகவும் ஆக திட்டமிட்டுள்ளாராம்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஷங்கர் இயக்கத்தில் ஜேசன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. ஜேசனின் தங்கை திவ்யா சாஷாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் ஈடுபாடு அதிகம். அவர் அதில் கவனம் செலுத்தி வருகிறார்.


சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிறார் அவர். பள்ளியின் பேட்மிண்டன் அணியில் திவ்யாவும் உள்ளார். பேட்மிண்டன் அணியின் புகைப்படங்களை அந்த பள்ளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பெருமையுடன் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களில் திவ்யா உள்ளார். அந்த குழு அண்மையில் நடந்த போட்டி ஒன்றில் 3வது இடம் பிடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

Friday, February 01, 2019

விஜய் சேதுபதியின் மாமனிதன் செட்டில் மயங்கி விழுந்து நடிகை மரணம்

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அவரிடம் பணம் வாங்கிய நடிகை மயங்கி விழுந்து உயிர் இழந்தார். 


சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். அந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆலப்புழாவில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஒரு மூதாட்டி வந்து மருந்து வாங்க பணம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


விஜய் சேதுபதி 

விஜய் சேதுபதி உடனே தனது மேனேஜரை அழைத்து தனது பர்ஸை எடுத்து வரச் சொல்லி அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்தார். அவர் பணம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


மருத்துவர்கள்

விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கிய மூதாட்டி செட்டில் இருந்து கிளம்பியபோது மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


மலையாள படங்கள்  

விஜய் சேதுபதியிடம் பணம் வாங்கியவர் மலையாள நடிகை கவலம் அச்சம்மா என்பதும் அவர் ஜெயராமின் ஞான் சல்பேரு ராமன்குட்டி உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்ததும் தெரிய வந்துள்ளது.


அதிர்ச்சி  

மருந்து வாங்க பணம் இல்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகை மயங்கி விழுந்து உயிர் இழந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Thursday, January 31, 2019

தன்னை விட 17 வயது சிறியவரான சயீஷாவை மணக்கும் ஆர்யா

ஆர்யா திருமணம் செய்யப் போகும் நடிகை சயீஷா அவரை விட 17 வயது சிறியவர் ஆவார்.




ஆர்யாவும், சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு சூர்யாவின் காப்பான் படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மார்ச் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஆர்யா சயீஷா ஆர்யாவை விட 17 வயது சிறியவர். படங்களில் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சயீஷா நிஜத்திலும் சீனியரை திருமணம் செய்கிறார். மனம் ஒத்துப் போனால் வயது முக்கியம் இல்லை என்பதை சயீஷா புரிந்து வைத்துள்ளார்.


நஸ்ரியா  

முன்னதாக மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தன்னை விட 12 வயது சிறியவரான நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்தபோது வயது வித்தியாசம் பற்றி பேச்சு கிளம்பியது. ஆனால் வயது முக்கியம் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.


சாய்ரா பானு  

பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் உறவுக்கார பெண் தான் சயீஷா. திலீப் குமாருக்கும் அவரின் மனைவி சாய்ரா பானுவுக்கும் இடையே 22 வயது வித்தியாசம் உள்ளது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மனமொத்த தம்பதியாக வாழ்ந்து வருகிறார்கள்.


திருமணம் 

ஆர்யா, சயீஷா காதலிப்பதாக பேச்சு கிளம்பிய போது இதுவும் கடந்து போகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள். வாழ்த்துக்கள் ஆர்யா, சயீஷா.

Thursday, January 24, 2019

ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?

சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்துகிறார் என்று கூறப்படுகிறது. 


2019ம் ஆண்டு நயன்தாராவுக்கு சிறப்பாக துவங்கியுள்ளது. அவர் அஜித்துடன் சேர்ந்து நடித்த விஸ்வாசம் படம் ஹிட்டாகியுள்ளது. அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான சயீரா நரசிம்ம ரெட்டி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


நயன்தாரா  

சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்க்கப் போகிறாராம்.


விளம்பரம் 

நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று கறாராக சொல்லிவிடுவார். இந்நிலையில் அவர் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ராம் சரண்

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரித்துள்ள நடிகர் ராம் சரண் நயன்தாராவை சந்தித்து தயவு செய்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தாராம். நயன் படத்தை விளம்பரப்படுத்தினால் அது பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என்று ராம் சரண் நம்புகிறார். அவருக்காக நயன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாராம்.


விஜய் சேதுபதி 

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, ஹூமா குரேஷி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம், நடிப்புக்கு முற்றுப்புள்ளியா? -நடிகை ரித்விகா ஆவேசம்

கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார்.






கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. ரஜினியின் காலா படத்திலும் நடித்தார். அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒரு நாள் கூத்து, இருமுகன், ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச்லைட் ஆகியவை ரித்விகா நடித்த முக்கிய படங்கள். சமீபத்தில் இணையதளத்தில் வெளியான சிகை படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் வந்தார்.

தற்போது எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நேத்ரா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன்-2விலும் வந்தார். இந்த நிலையில் ரித்விகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து உள்ளார் என்றும் தகவல்கள் பரவின.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து வருங்கால கணவர் முடிவு செய்வார் என்று ரித்விகா கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது திருமண செய்தியை ரித்விகா சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்பு உள்ளது என்றேன். அதை சரிவர அறியாமல் திருமணத்திற்கு பின் நான் நடிப்பை தொடரப்போவதில்லை என்று தகவல்கள் பரவியது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப்புள்ளியா? வருத்தம்” என்று கூறியுள்ளார்.

Tuesday, January 22, 2019

ஜித்து விளையாட்டு காட்டி மற்றவர்களை பயமுறுத்தி சிரிக்கும் விஜய் மகன்

ஜங்ஷனை அடுத்து விஜய்யின் மகன் இயக்கி நடித்துள்ள சிரி குறும்படம் தளபதி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


விஜய்யின் மகனுக்கு படங்களை இயக்குவதில் ஆர்வம் உள்ளது. அதன் முதல் கட்டமாக அவர் குறும்படங்களை இயக்கி நடித்தும் வருகிறார். அவர் இயக்கி நடித்த ஜங்ஷன் குறும்படம் வெளியானது. இந்நிலையில் சிரி என்கிற குறும்படம் வெளியாகியுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

ஜேசன் சஞ்சய் தனது போனை கையில் எடுத்து தான் 10 நிமிடங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க முடியுமா என்று ஜேசன் சிரியிடம்(Siri) கேட்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்குள் சென்றபோது அவர் யார் கண்ணுக்கும் தெரியவில்லை. அதனால் அவர் கதவை திறந்தபோது அதை பார்த்த சக மாணவர்கள் பேயோ என்று நினைத்து பயப்படுகிறார்கள்.


உருவம் 

சக மாணவர்கள் மிரள்வதை பார்த்து ஜேசனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர் கண்ணாடி முன்பு நின்றபோது தான் அவரின் உருவம் அதில் தெரியாததை பார்த்து அவர் அதிர்ச்சி அல்ல மகிழ்ச்சி அடைகிறார். அதன் பிறகு சக மாணவர்களை பயமுறுத்தி விளையாடுகிறார்.


ஆசிரியர்  

சக மாணவர்களை பயமுறுத்திக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா வந்து வகுப்பறைக்குள் சென்று விடைத்தாளில் மதிப்பெண்களை மாற்றுகிறார். அப்பொழுது அங்கு வரும் ஆசிரியரிடம் கையும் களவுமாக மாட்டுகிறார். அவர் சிரியிடம் கேட்ட 10 நிமிடங்கள் முடிந்ததை அவர் உணராமல் ஆசிரியரிடம் வசமாக மாட்டுகிறார்.


தமிழ் 

ஜங்ஷன் குறும்படத்தில் ஆங்கிலத்தில் அதிக அளவில் பேசினார்கள். சிரி குறும்படம் முழுக்க ஆங்கிலத்தில் தான் உள்ளது. ஜேசன் சர்வதேச அளவில் தனது குறும்படங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைத்து இப்படி செய்கிறார் போன்று. சிரி குறும்படம் ஜேசனை சுற்றியே நகர்கிறது.

Monday, January 14, 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் நடிகர்கள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நடிகர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





இந்தியாவில் 50-க்கும் மேற்பட்ட நடிகர்கள் அரசியலில் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது. இவர்களில் பலர் அமைச்சர்களாகவும் எம்.பி., எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகித்துள்ளனர். மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் முதல்-அமைச்சராகி ஆட்சி நடத்தி உள்ளனர்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இப்போது கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த கட்சி போட்டியிடுகிறது. ரஜினிகாந்தும் விரைவில் கட்சி தொடங்குகிறார். இந்த வருடம் புதிதாக மேலும் சில நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் வருகிற பராளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மத்திய தொகுதியில் அவர் நிற்கிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாராவதாக தகவல். பா.ஜனதா கட்சி அவருக்கு டிக்கெட் கொடுக்க ஆர்வமாக உள்ளது. நரேந்திர மோடியை மோகன்லால் சந்தித்து விட்டு வந்துள்ளார்.

ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்த அக்‌ஷய்குமாரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி அல்லது பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். நடிகை ஜெனிலியாவின் கணவரும் இந்தி நடிகருமான ரிதேஷ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் லத்தூர் தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார்.

Thursday, January 10, 2019

அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

நடிகர் அஜீத்தின் 60 அடி உயர கட் அவுட்டின் மேல் உட்கார்ந்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அஜீத்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


மாலைகள்  

இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். எப்போதுமே அஜீத் படம் வெளியானால் அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து, சூடம் காட்டுவார்கள்.


60 அடி உயரம் 

அப்படித்தான் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் விஸ்வாசம் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜீத்தின் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.


பாலாபிஷேகம்  

இதற்கு பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் பலர் கூடினர். அதில் ஒருசிலர் கட் அவுட் மீது ஏறி மாலை அணிவித்தனர். பிறகு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் சில ரசிகர்களும் அதே கட் அவுட்டில் ஏற ஆரம்பித்தார்கள். அப்போது இதனால் பாரம் தாங்காமல் அஜீத் கட் அவுட் அப்படியே சரிந்து விழுந்தது.


6 பேர் படுகாயம் 

அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கட் அவுட் சரிய சரிய ஒவ்வொருவராக கீழே குதிக்க ஆரம்பித்தார்கள். இதனால் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.