வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, January 31, 2019

அரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், 


பீரோ, இருக்கைகள், மின் விசிறிகள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்களே இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக மேள தாளங்கள் முழங்க பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு 150 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினார்கள்.


பெற்றோர்கள் அளித்த அனைத்து பொருட்களும் ஊர் சமுதாய நல கூடத்திற்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர். தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment