Run World Media: ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. 15 ஆண்கள்.. ஆசை காட்டி.. நகை, பணம் மோசடி.. பலே பெண் மகாலட்சுமி

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, February 2, 2019

ஒன்னுல்ல.. ரெண்டுல்ல.. 15 ஆண்கள்.. ஆசை காட்டி.. நகை, பணம் மோசடி.. பலே பெண் மகாலட்சுமி

ஒன்னுல்ல, ரெண்டுல்ல, 15 ஆண்களை கல்யாணம் செய்து ஏமாற்றி நகை, பணத்தை வாரி சுருட்டி உள்ளார் மகாலட்சுமி என்ற பெண்! மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார். 


சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி டைவர்சும் ஆகிவிட்டது. அதனால் 2-வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மேட்டர்மோனி மூலமாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். அவர் திருச்சியை சேர்ந்தவர். இவர்களுக்கு 2017-ம் வருடம் திருமணம் நடைபெற்றது.
(தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


கர்ப்பமாக இருக்கிறேன் 

கொஞ்ச நாள் புதுமண தம்பதி சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டினர். பிறகு வேலை விஷயமாக உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். ஒருநாள் தான் கர்ப்பமாக இருப்பதாக போனில் மகாலட்சுமி சொன்னார். அப்பாவாக போகிற சந்தோஷத்தில் உதயகுமார் சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு வந்துவிட்டார்.


வாரி சுருட்டல்  

மகாலட்சுமிக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக எதுவுமே சொல்லாமல் திடீரென வீட்டுக்கு வந்தார். ஆனால் அங்கே அவருக்கு அதைவிட பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது. மகாலட்சுமி வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. அதனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் வாரி சுருட்டி கொண்டு மகாலட்சுமி எப்போதோ கிளம்பி போய் விட்டதாக சொன்னார்கள்.


ஃபேஸ்புக் பதிவுகள் 

செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார், எங்கெங்கோ மகாலட்சுமியை தேடினார், பிறகு போலீசில் மனைவியை காணோம் என்று புகார் கொடுத்தார். இந்நிலையில், ஒருநாள் மகாலட்சுமியின் ஃபேஸ்புக் பார்த்தபோது, ஏராளமான ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்பது தெரியவந்தது.


ஜோடி ஜோடியாய் போட்டோ  

நிறைய பேரிடம் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என சொல்லியதுடன், ஆபாசமான வார்த்தைகளையும் பதிவிட்டு இருப்பதை கண்டு உதயகுமார் உறைந்து நின்றார். அது மட்டும் இல்லை, மகாலட்சுமிக்கு ஏற்கனவே 15 பேருடன் கல்யாணம் ஆகி உள்ளது, 6 மாசத்துக்கு ஒரு கல்யாணம், கருவுற்று அதனை கலைத்தும் உள்ளது, ஜோடி ஜோடியாய் வேறு வேறு ஆண்களுடன் இருக்கும் போட்டோக்களை பார்த்து தலை சுற்றிப் போய் கிடக்கிறார் உதயகுமார்.


நகை, பணம்  

இந்நிலையில், உதயகுமார் எட்டி உதைத்து கருவை கலைத்துவிட்டதாக திருச்சி போலீசில் புகார் வந்ததால் மேலும் அதிர்ச்சியடைந்தார். இதனால் தன்னை போலவே 15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும், அவரிடமிருந்து தனது பணம், நகைகளை மீட்டு தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளதற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் உதயகுமார்.தற்கொலை மிரட்டல்  

திருச்சியில் நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார் "அப்பா இல்லைன்னு சொன்னாள். அதனால ரொம்ப அக்கறை காட்டினேன். முதல் புருஷன் கர்ப்பத்தை காலால் எட்டி உதைத்து கலைத்ததாக புகார் கூறி, விவாகரத்தும், பணமும் கறந்துள்ளார். இப்படியே 15 பேரை ஏமாற்றி இருக்கிறார், கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்வதாக சொல்லியே நகை, பணத்தை அபேஸ் செய்துள்ளார். என்மேலயும்இப்போ புகார் சொல்லி இருக்கிறார்.


ஆந்திராவில் மகாலட்சுமி  

இது சம்பந்தமாக நான் கோர்ட்டுக்கு போக போறேன். 15 பேரை ஏமாற்றியதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு. இப்போ ஆந்திரா பக்கம் போயிருக்கிறாள். அங்க எத்தனை பேரை ஏமாற்ற போகிறாளோ தெரியவில்லை. யாரோ பெரிய பணக்காரர் மகாலட்சுமிகிட்ட சிக்கி இருக்கிறதா கேள்விப்பட்டேன். இனிமே அவளிடம் யாரும் ஏமாற கூடாதுன்றதுக்காக இதை சொல்றேன், போலீசார் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கணும்னு கேட்டுக்கறேன்" என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்