வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா? திடுக்கிடும் அறிக்கை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 21, 2019

சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா? திடுக்கிடும் அறிக்கை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா, சசிகலா பெங்களூரில் சிறையில் சொகுசாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். 
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது என்றும், சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதும் அவர் குற்றம்சாட்டினார். இதன்பின் இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தாக்கல் செய்ய அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.


புகார் உண்மை  

அதன்படி புகார் கூறிய டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு சிறையில் கூடுதல் வசதிகள் அளிக்கப்பட்டது உண்மைதான். ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் நிறைய விதிகள் மீறப்பட்டுள்ளது. முக்கியமாக அடிக்கடி நிறைய பார்வையாளர்கள் வந்து சென்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


விளக்கம்  

அதேபோல் சிறையில் சசிகலா, இளவரசி இருவரும் சாதாரண உடையில் இருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சியில் இருப்பது போல இவர்கள் வெளியே சென்று வந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கையில் இருக்கும் பையை வைத்து இவர்கள் வெளியே சென்று இருக்கிறார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சிறைத்துறை விளக்கம்  

இதற்கு சிறைத்துறை அளித்த விளக்கமும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறைத்துறையின் கூற்றுப்படி, சசிகலா தன்னை சந்திக்க வந்தவர்களை பார்க்கவே சென்றார். அதுதான் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அவர்கள் கொடுத்த உணவுதான் கையில் உள்ள பை என்றுள்ளனர்.


என்ன பதில்

இந்த நிலையில் இதை விசாரணை ஆணையம் மறுத்துள்ளது. பார்வையாளர் சந்தித்த நேரமும், சிசிடிவி வீடியோ நேரமும் ஒரே நேரம் கிடையாது என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது. இவர்கள் அந்த நேரத்தில் பார்வையாளர்களை சந்திக்கவில்லை என்றும் விசாரணை குழு தெரிவித்துள்ளது, இதனால் சசிகலா ஷாப்பிங் சென்று இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment