Run World Media: 01/04/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, January 4, 2019

ரேஷன் கார்டு இருக்கா... பொங்கல் பரிசா நாளைக்கு உங்களுக்கு ரூ.1000 தரப்போறாங்க

பொங்கல் பரிசாக தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 

கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படாததால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். 

ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த அறிவிப்பின் வழியாக, 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருட்களுடன் பொங்கல் பை  

பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.


ரூ.1000 ரொக்கம் 

பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து நியாய விலை கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி  

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். முதல்வர் தொடங்கி வைத்தவுடன், அந்தந்த மாவட்ட அமைச்சா்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் கிடைக்கும் வகையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.


300 குடும்ப அட்டைதாரர்கள்  

நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப் பட்டுள்ளது. எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து நியாயவிலைக் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கூடுதல் செலவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

5 ஆண்டுகளாக அடித்து உதைத்த காதலர்

தோழிகள் முன்பு தன்னை காதலன் தாக்கியதாக தொலைக்காட்சி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. உத்தரன் சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர். அவர் தனது காதல், கடந்த காலம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


5 ஆண்டுகள் 

நான் சினிமா துறையை சேராத ஒருவரை காதலித்தேன். 5 ஆண்டுகளாக அவரை சின்சியராக காதலித்தேன். நண்பர்கள் மூலம் சந்தித்து காதலர்கள் ஆனோம். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் காயப்படுத்தினார்.


நண்பர்கள்  

என் நண்பர்கள் முன்பு கூட அவர் என்னை அடித்திருக்கிறார். இருப்பினும் நான் பொறுத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுபவள் நான் அல்ல. ஆனால் இது பேச வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன். இனியும் அமைதியாக இருக்க முடியாது.


பிரிவு  

நம் காதலர் தானே என்று அவர் என்னை எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டேன். ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு அவரை பிரிந்துவிட்டேன். நான் காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் கடவுள் என் வாழ்க்கையில் காதலை அனுப்பவில்லை. நான் சினிமா துறையை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய விரும்பவில்லை.


திருமணம்  

சினிமா துறையை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு நிலைத்து நிற்காது. அப்படி சினிமா துறையை சேர்ந்தவர்களின் திருமணம் நாசமாக போனதை நான் பார்த்திருக்கிறேன். நான் மிகவும் இளம் வயதிலேயே வெற்றியை பார்த்துவிட்டேன் என்று டீனா தெரிவித்துள்ளார்.

பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை: கொலையா?

ஒடிஷாவில் பிரபல நடிகை சிம்ரன் சிங் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சிம்ரன் சிங். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். 

சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன். செல்ஃபி பெபோ, ரிக்ஷாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரெண்ட்- 2, தில் கா ராஸா, டிஜே பாபு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஆல்பங்களில் அவர் தோன்றியுள்ளார்.
இந்நிலையில் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்ரா மாதா அருகே இருக்கும் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் சிம்ரன் பிணமாகக் கிடந்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிம்ரனின் தலை மற்றும் முகம் முழுக்க காயங்களாக இருந்தது. அவரின் உடலுக்கு அருகே ஒரு பை கிடந்தது. இதற்கிடையே சிம்ரனை அவரின் கணவர் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு மாணவி... ஒரே ஒரு ஆசிரியர்... அடடே அரசுப் பள்ளி

கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். அனைத்து வசதிகளும் இருந்தும் இந்த அவலம் நீடிக்கிறது. 

தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளியை புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, தலைமை ஆசிரியர் ரேகா மற்றும் மாணவி ஸ்ரீ லேகா மட்டுமே உள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


அனைத்து வசதிகளும் உள்ளன  

பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன. குறிப்பாக இரண்டு வகுப்பறைகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மைதானம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. தங்கள் நிலையை ஊரில் உள்ள மற்றவர் முன்னிலையில் உயர்த்தி காட்டிக் கொள்ளவே தனியார் பள்ளியை நாடி செல்வதாக கிராமமக்கள் சிலர் கூறுகின்றனர்.


சவால் விடும் மாணவர்கள்  

ஆனால் 5-ம் வகுப்புக்கு பின்னர் தனியார் பள்ளியில் பணம் கட்ட முடியாமல் மீண்டும் அரசு பள்ளியிலேயே சேர்க்கும் நிலையும் உள்ளதாக தெரிகிறது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்துவிட்டுச் சென்ற மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளனர். அதே நேரம், கல்வியை விலை போன பிறகு தரமான கல்வியை தங்களது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காவே அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.


உயர் பதவி  

1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெருமைமிக்க பள்ளியில் படித்த பல மாணவர்கள் தற்போது கிராம நிர்வாக அலுவலர், மருத்துவர்கள் என பல்வேறு உயர்ந்த பணிகளில் உள்ளனர். சில மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர்.


புதிதாக கட்டிடம் 

பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் புதிதாக இரண்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்படிப்பட்ட சிறப்பான பள்ளியில்கூட, குழந்தைகளை கல்வி கற்க பெற்றவர்கள் சேர்க்கவில்லை என்பது, மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு தனியார் பள்ளி குறித்த மோகம் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இப்படி ஒரு மோகம் நம்மிடம் உள்ளபோது, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக அரசையும், பள்ளி நிர்வாகங்களையும் குறை கூறி என்ன பலன்? சொல்லுங்க பார்க்கலாம்!

சீனாவை தூக்கி சாப்பிட்டு விட்டது இந்தியா.. எதில் தெரியுமா?

சீனாவையே தூக்கி சாப்பிட்டுவிட்டது இந்தியா!! எதில் தெரியுமா? வேற எதில? குழந்தை பிறக்கிறதுலதான்!! வருஷா வருஷம் புத்தாண்டு அன்று அதிகமாக குழந்தைகள் பிறக்கும் நாடு எது என்பதை யூனிசெப் அறிவிக்கும்.

யூனிசெப் என்பது ஐநாவில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக உள்ள அமைப்பு ஆகும். இந்த அமைப்புதான், இந்த வருடமும் தனது கருத்து கணிப்பை தெரிவித்துள்ளது. அதன்படி புத்தாண்டில் அதிகமான குழந்தைகள் பிறந்த வகையில் இந்தியாதான் என்று கூறியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!


இந்தியா முதலிடம் 

புத்தாண்டு அன்று அதிகமாக குழந்தைகள் பிறந்த நாடு இந்தியாதான் என்று போன வருஷம் யூனிசெப் தெரிவித்திருந்தது. இந்த வருஷமும் இந்தியா அதே முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறதாம். 2019-ம் ஆண்டு துவங்கிய அன்றைய தினம், அதாவது நியூ இயர் அன்றைக்கு இந்தியாவில் மட்டும் 69,944 குழந்தைகள் பிறந்திருப்பதாக யுனிசெப் அறிவித்துள்ளது.


சீனா இரண்டாவது

அன்றைய தினம், உலக அளவில் 3,95,000 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதற்கு அடுத்துதான், உலக மக்கள் தொகை அதிகம் என சொல்லப்படும் சீனாவே வருகிறது. சீனாவில் 44,940 குழந்தைகள் பிறந்திருக்கிறதாம். நைஜீரியாவில் 25,685 குழந்தைகளும், பாகிஸ்தானில் 15,112 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13,256, அமெரிக்காவில் 11,860, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகளும் பிறந்துள்ளன.


நியூயார்க் 317 குழந்தைகள்  

சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. இதேபோல, டோக்கியாவில் 310 குழந்தைகள், பெய்ஜிங்கில் 605 குழந்தைகள், நியூயார்க்கில் 317 குழந்தைகள் பிறந்துள்ளன.


உலகின் முதல் குழந்தை  

ஆனால் புத்தாண்டு பிறந்தவுடன் சரியாக 12 மணி அடித்தவுடன் உலகிலேயே முதல் குழந்தை பசிபிக்கில் உள்ள பிஜி நகரில் பிறந்தது என்று யூனிசெப் தெரிவித்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சரியாக 12 மணி அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துவிட்டனவாம்!


இறப்பு விகிதம் 

யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் சார்லோட்டி பெட்ரி கோரிநிட்கா இதை பற்றி சொல்லும்போது, "உலகில் எத்தனையோ நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முதல் நாளை நிறைவு செய்யமுடியாமல் கூட இறந்துவிடுகின்றன. போன வருஷம் உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் பிறந்த நாள் அன்றே இறந்துவிட்டன. 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாசத்தில் இறந்துவிட்டன.


சுகாதார பணியாளர்கள்  

இப்படி குழந்தைகள் இறக்க முக்கிய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால், குறைபிரசவங்களும், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், தொற்றுக்கள்தான். அதனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்கு சரியான டிரெயினிங் தருவதற்கு நாம் முதலீடு செய்தால் பல லட்சம் குழந்தைகளின் உயிர்களை நாம் காப்பாற்றலாம்" என்றார். எப்படியோ இந்த வருஷமும் குழந்தைகள் பிறப்பில் இந்தியா முதலிடம் பெற்றுவிட்டது.. ஏதோ நம்மால முடிஞ்சது!!

பாத்ரூமில் அலறிய நபர்.. பதறிப் போய் ஓடி வந்த போலீஸ் ஷாக்!

பாத்ரூமில் இருந்த சிலந்தியை போலீஸ் உதவியுடன் கொன்றுள்ளார் ஆஸ்திரேலிய நபர் ஒருவர்.


புத்தாண்டு தினத்தன்று மேற்கு ஆஸ்திரேலிய போலீசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், பெர்த் புறநகர் பகுதியில் குறிப்பிட்ட முகவரியைத் தெரிவித்து அந்த சாலை வழியே வந்து கொண்டிருந்த போது, 'நீ ஏன் சாகக்கூடாது?’ என கொலைவெறியுடன் ஒருவர் கத்திக் கொண்டிருந்ததைக் கேட்டதாக புகார் அளித்தார்.
(தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

அதனைத் தொடர்ந்து கொலை அல்லது தாக்குதல் போன்ற அசம்பாவிதத்தை எதிர்பார்த்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்தனர். ஆனால், அங்கு சென்று சேர்ந்ததும் தான் தெரிந்தது, பாத்ரூமில் கத்திய நபர், சிலந்தி ஒன்றைக் கொல்லத் தான் அப்படி கத்தியுள்ளார் என்பது. 

இந்த சம்பவத்தில் சிலந்தியைத் தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தங்களது டிவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட சிலந்தி, எந்த வகையைச் சேர்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் உள்ளன. அவற்றில், ரெட்பேக், ஃப்யூனெல் வெப் உட்பட பெரும்பாலான வகைகள் கடும் நச்சுத்தன்மை கொண்டவை. இருந்தபோதிலும் 1981ஆம் ஆண்டில் இருந்து சிலந்திக் கடியால் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவைட் முதலுதவி அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா குடும்பம்

உலகிலேயே மிகப் பெரிய குடும்பம் உக்ரைன் நாட்டில் இருக்கிறது.


டோப்ரஸ்லாவ் கிராமத்தில் வசிக்கும் 87 வயது பாவெல் செமன்யுக் குடும்பம்தான் இந்தப் பெருமைக்குரியது. 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இவருக்கு 13 குழந்தைகள். 127 பேரன், பேத்திகள். 203 கொள்ளுப் பேரன், பேத்திகள். 3 எள்ளுப் பேரன், பேத்திகள் என மொத்தம் 346 பேர் இந்தக் குடும்பத்தில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 
“எங்கள் குழந்தைகள், பேரன், பேத்திகள்வரை பெயர்களை நினைவில் வைத்திருக்கிறேன். மற்றவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. நாங்கள் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம்.

எங்கள் குடும்பம் பெருகப் பெருக, இந்தக் கிராமத்திலேயே வீடுகளைக் கட்டி விடுவோம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் ஒன்று கூடிவிடுவோம். பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுகள் தயார் செய்ய வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட ஆண்டு முழுவதுமே கொண்டாட்டமாகத்தான் இருக்கும். 
எங்கள் குடும்பத்திலிருந்து மட்டும் 30 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இவர்களுக்கே ஒரு பேருந்து தேவைப்படுகிறது. சமீபத்தில் தான் உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய குடும்பமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது கின்னஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறோம்” என்கிறார் பாவெல் செமன்யுக். 

தற்போது 192 பேர் அடங்கிய மிகப் பெரிய இந்தியக் குடும்பம், உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற கின்னஸ் சாதனையை தக்க வைத்திருக்கிறது. நிச்சயம் பாவெல் இதை முறியடித்து விடுவார்.

கையெழுத்தாக மாறிய பொம்மை

பெரு நாட்டைச் சேர்ந்த 31 வயது ஜுவான் கார்லோஸ் வாரில்லாஸின், தன்னுடைய கையெழுத்தை சமூகவலைத் தளங்களில் வெளியிட்ட ஐந்தாவது நிமிடத்தில் பிரபலமாகி விட்டார்.

கையெழுத்துக்குப் பதிலாக ஒரு பொம்மையை வரைந்து, அதைத்தான் கையெழுத்தாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார். 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்கு பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார். 
சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜுவானையும் அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது. 

கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்தது. பிறகுதான் அவர்கள் இட்ட கையெழுத்துகளில் ஒன்று படமாக இருந்ததைக் கண்டனர். 
ஜுவானை அழைத்து காரணம் கேட்டனர். கிட்டி என்ற பொம்மையை தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், 16 வயதிலிருந்து அடையாள அட்டையில் பயன்படுத்த ஆரம்பித்து, அதையே கையெழுத்தாகத் தொடர்ந்து வருவதாகச் சொன்னார். இனிமேல் இப்படிப் படம் போடக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள்.

இனிமே ஸ்கூலில் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது… ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்


பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.


அந்த கல்வி உரிமை சட்டமானது இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 
 (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

கட்டாயத் தேர்ச்சி என்ற திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தோல்வியடைய வைக்காமல் அடுத்தடுத்து வகுப்புக்கு தேர்ச்சியடைய செய்ய வேண்டும். அதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையிலான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.மசோதா தாக்கல்

அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக, அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.


இரு அவைகளிலும் ஒப்புதல்  

இரு அவைகளின் ஒப்புதலையும் இந்த மசோதா பெற்று விட்டது. அவையில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.மறு தேர்வு நடத்த வேண்டும்  

அப்போது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடத்த வேண்டும். அதிலும் தோல்வியடைந்தால் அவர்களை அதே வகுப்பில் மீண்டும் பயிலச் செய்ய வேண்டும் அல்லது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள கட்டாய தேர்ச்சி திட்டத்தையே ரத்து செய்துவிடலாம்.


கல்வி கற்கும் மாணவர்கள்  

இதில் எந்த முடிவானாலும் உறுப்பினர்களே முடிவு செய்யட்டும். கட்டாயத் தேர்ச்சி என்ற திட்டத்தால் மாணவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கல்வியான ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து வருகிறது.மசோதா மீது விவாதம்  

இந்த மசோதா குறித்த விவாதம் ராஜ்யசபாவியில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதன்பின் இந்த சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்புக்கு அனுப்பப்பட்டது" என்றார்.


நிறைவேறியது மசோதா 

அதன்பின் பேசிய ராஜ்யசபா சபாநாயகர் வெங்கையா நாயுடு, இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படவுள்ளதாகவும் அறிவித்தார். இம்மசோதா மூலம் அமலில் இருந்த கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படவுள்ளது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்