வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-11-17
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 22, 2019

ஆபாச வீடியோ டவுன்லோடு செய்ய வலியுறுத்தி அசிங்கமாக நடந்து கொண்ட பாதிரியார் | Paster Forcing the girls for abuse videos

செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதுடன், அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் என்று மாணவிகளை வற்புறுத்திய பாதிரியார் & பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை காந்திபுரத்தில் செயல்பட்டு வருகிறது புனித மரியன்னை உயர்நிலை பள்ளி.4 00க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன் தாளாளராக உள்ளவர் பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ். 55 வயதாகிறது.. 
 
காமம் தலைக்கேறிய நபராக இருந்திருக்கிறார் இவர். அந்த பள்ளியில் 9, 10-ம் வகுப்புக்கு பிள்ளைகளுக்கு இவர்தான் பாடம் நடத்துவது வழக்கம். அப்படிதான் நேற்று முன்தினம் பாடம் நடத்தி உள்ளார்.



டவுன்லோடு 
அதில் 5 மாணவிகளிடம் தன் செல்போனை தந்து, ஒரு புது ஆப் இருக்கு.. அதை பாருங்க.. அது உங்களுக்கு பிடிச்சிருந்தா, வீட்டுக்கு எடுத்துட்டு போய், உங்க செல்போனிலும் டவுன்லோடு செய்து கொள்ளுங்க" என்று சொல்லி உள்ளார். இதனால் மாணவிகளும் ஆர்வத்துடன் அது என்ன என்று வாங்கி பார்த்தனர்.. அப்போது அதில் ஆபாச படம் இருந்தது.

முற்றுகை 
இதை பார்த்து அதிர்ந்து போன மாணவிகள், எதுவும் பேசாமல், அந்த செல்போனை பாதிரியாரிடமே திருப்பி தந்துவிட்டனர். பின்னர் இதை பற்றி மாணவிகள் அவரவர் வீட்டில் சென்று பெற்றோரிடம் சொல்லி உள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமும், அதிர்ச்சியும், கோபமும் நிறைந்த பெற்றோர்கள், பள்ளி முன்பு திரண்டு விட்டனர்.



புகார் 
"படிக்கிற குழந்தைகளுக்கு எப்படி அவர் ஆபாச வீடியோ காட்டலாம், அவர் மீது நடவடிக்கை எடுங்க" என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி சொன்னார்கள். பின்னர், இந்த சம்பவம் குறித்து கோவை மகளிர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.



ஆபாச படம் 
இதன்பேரில் போலீசார், மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படத்தை காட்டி, பாலியல் உணர்வை தூண்டியதாக பாதிரியார் மரிய ஆன்டனி தாஸ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மாணவிகளுக்கு பாதிரியார் ஆபாச படம் காட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Monday, November 18, 2019

[வேலைவாய்ப்பு] தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் வேலை! Children Protection Assistant Job Dharmapuri District

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் (Child Protection Unit) இருந்து வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


தருமபுரியில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நவம்பர் 12 ஆம் தேதி புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தற்காலிக பணியாகும். 1 வருடம் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து வரக்கூடிய வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம், விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடும். 

எனவே, தற்காலிக பணி என்று பாராமல், அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், DCA எனப்படும் கம்ப்யூட்டர் பயன்பாட்டு கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்குவதில் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. அதிகபட்சமாக விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

 
மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப்படிவம் தயாரித்து, அதனை பூர்த்தி செய்து, நவம்பர் 27 ஆம் தேதிக்குள் சம்ர்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி.


இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:
Dharmapuri Child Welfare Recruitment 2019