வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கோடு போடாத போலீஸ் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்! | Salam Police News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

கோடு போடாத போலீஸ் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்! | Salam Police News

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் தனித்திருப்பதோடு, பொதுவெளிகளில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 1 மீ. இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 


இருமல், தும்மலின்போது தெறிக்கும் உமிழ்நீர் மூலமாக கரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவக்கூடும் என்பதால் எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வெளியிடங்களுக்குச் செல்லக்கூடாது எனக் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. 

பொதுவெளியில் வாகன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சேலத்தில் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வாகனங்கள் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சாலைகளில் வரும் வாகனங்களில் பதிவெண் பலகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்களில் காவல்துறையினர் கோடிட்டு அடையாளப்படுத்துகின்றனர்.

இந்த உத்தரவைக் காவல்துறையினர் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றனரா என மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். 


இந்நிலையில், துணை ஆணையர் செந்தில், திருவாக்கவுண்டனூர் புறவழிச்சாலையில் ரோந்து சென்றபோது அந்தப் பகுதியில் வாகனங்கள் எச்சரிக்கைக் கோடுகள் இல்லாமல் சென்று வருவது தெரிய வந்தது. அந்தப் பகுதியில் பணியில் இருந்த எஸ்எஸ்ஐ செந்தில்குமார், தலைமைக் காவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாகனங்களில் எச்சரிக்கை கோடுகள் போடாமல் மெத்தனமாகச் சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, பணியின்போது அலட்சியமாகச் செயல்பட்டதாக அவர்கள் இருவரையும் உடனடியாகச் சேலம் மாநகர ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டார். இச்சம்பவம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment