Run World Media: 06/20/20

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 20, 2020

கொரோனா மருந்து ரெடி | Vil Ambu News|

முதல் முறையாக இந்தியா கொரோனா சிகிச்சைக்குத் தனியார் மருந்தை அனுமதிக்கச் சோதனை தொடக்கம்...
நாட்டில் மத்திய அரசு அனுமதி பெற்ற ஃபேபிஃபுளு என்ற மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக நாட்டில் அங்கிகாரம் பெற்ற முதல் மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ளன்மார்க் பார்மெசிட்டிகள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஃபேபிபிராவிர் என்ற மருந்தை ஃபேபிஃபுளு என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தைக் கொண்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகிக் குறைந்த அறிகுறிகளோடு காணப்படுபவர்களைக் குணப்படுத்தி விடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே இந்த மருந்தை நாட்டில் தயாரிக்கவும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க இந்த நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தளபதியிடம் அனுமதி பெற்றது.


குறிப்பிட்ட நிறுவனத்தின் முதன்மை அதிகாரி க்ளென் சாலதான்ஹா நிருபர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்து வரும் இந்த சூழலில் எங்கள் நிறுவனம் இந்த மருந்தை விநியோகிக்க அனுமதி கிடைத்துள்ளது. இப்போதைய நிலை நாட்டின் சுகாதார கட்டமைப்பைக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நேரத்தில் எங்கள் மருந்து நிச்சயம் ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிக்கும்என்றார்.

மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஃபேபிபிராவிர் மருந்துக்கான நேரடி சோதனைக்கு அரசிடம் அனுமதி கிடைத்துள்ளது. முதற்கட்டமாக கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டு லேசான அறிகுறிகளோடு காணப்படுவார்களுக்கு இந்த மருந்தைக் குறிப்பிட்ட அளவில் கொடுத்து சோதனை தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளது.


முதற்கட்டமாக நாட்டில் உள்ள 11 மாநிலங்களில் உள்ள தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தலா 150 நோயாளிகளைத் தேர்வு செய்து 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

[அரசு வேலை] ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா? | Ration Shop Job 2020 | Vil Ambu News|

கிருஷ்ணகிரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : நியாய விலைக் கடை மேலாண்மை : தமிழக அரசு பணியிடம் : கிருஷ்ணகிரி பணி : விற்பனையாளர் மொத்த காலிப் பணியிடம் : 65 கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.மொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncsc.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை,
 
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

சீன கம்பெனியே தேவையில்லை | அதிரடி முடிவு எடுத்த ஐ.பி.எல் | Vil Ambu News

இந்தியா - சீனா எல்லை மோதல் காரணமாக இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்களுக்கு எதிராக மக்கள் பேசத் துவங்கி உள்ளனர். சீனப் பொருட்களை இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என்ற கருத்தும் வலுப் பெற்று வருகிறது. அது ஐபிஎல் தொடருக்கும் பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. அது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற உள்ளது.இந்தியா சீனா எல்லை மோதல் இந்தியா சீனா எல்லையில் கடந்த வாரம் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன வீரர்கள் சுமார் 40 பேரும் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது முதல் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.


மக்கள் கோபம் இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் சீன பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனக் கூறி தங்கள் எதிர்ப்புகளை பல்வேறு வழிகளில் காட்டி வருகின்றனர். சீன பொருட்களை எந்த வகையிலும் இந்தியாவில் ஆதரிக்கக் கூடாது என எதிர்த்து வருகின்றனர்.


சிக்கலில் ஐபிஎல் இது ஐபிஎல் தொடருக்கு ஒரு வகையில் சிக்கலாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் பிராண்ட் ஸ்பான்சராக இருக்கும் "விவோ" எனும் மொபைல் நிறுவனம் சீனாவை சேர்ந்ததாகும். அந்த நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்வதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது 2020 ஐபிஎல் தொடர் ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயன்று வருகிறது. அப்போது விவோ நிறுவனத்தை ஸ்பான்சராக தொடர்ந்தால் ரசிகர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும், ஆதரவு கிடைக்காது.


விரைவில் கூட்டம் இந்த நிலையில், இது பற்றி விவாதிக்க அடுத்த வாரம் ஐபிஎல் கூட்டம் நடைபெற உள்ளது. அது பற்றி ஐபிஎல் நிர்வாகம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஐபிஎல்'இன் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.


விளம்பரதாரர் குறித்து முடிவு விவோ மட்டுமின்றி, பேடிஎம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பேடிஎம் நிறுவனத்தில் சீனாவின் பெரிய நிறுவனமான அலிபாபா முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவோ மூலம் 440 கோடி வருவாய் கிடைக்கும் நிலையில், அந்த வாய்ப்பை ஐபிஎல் விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.


பொருளாளர் கருத்து முன்னதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில், உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால், சீன நிறுவனத்தின் பொருட்களை விற்க விளம்பரம் செய்தாலும், அவர்கள் அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை விளம்பரமாக பிசிசிஐ-க்கு அளிக்கிறார்கள். அதில் 42 சதவீதம் இந்திய அரசுக்கு வரியாக அளிக்கப்படுகிறது என்றார்.


வேறு வழியில்லை விளம்பர வாய்ப்புகளை விட பிசிசிஐ விரும்பாவிட்டாலும், ஐபிஎல் தொடர் நடக்கும் போது ஐபிஎல்-லுக்கு எதிராக ரசிகர்கள் திரண்டால் அது மேலும் சிக்கலாகி விடும். அதனால், விளம்பர ஒப்பந்தந்தை மாற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர SPD உத்தரவு | Vil Ambu News

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும்.ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு.

சமாக்ரிக்ஷாவில், பகுதி நேர பயிற்றுநர்கள் (பி.டி.ஐ.எஸ்) தற்போது அரசு மேல்நிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகளை மீண்டும் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. 


எனவே, பி.டி.ஐ.எஸ் தங்கள் கடமைக்கு அறிக்கை செய்யக்கூடிய நிலையில் இல்லை.  இது சம்பந்தமாக, பகுதிநேர பயிற்றுனர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக 2020 ஜூன் மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் முழுமையாக செயல்பட்டு செயல்படும்போது பள்ளிகளுக்கு வருவதன் மூலம் அவர்கள் வேலை செய்யாத நாட்களை ஈடுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்