வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சசிகலாவ ஏமாத்தன அதே ஸ்கெட்ச மோடிக்கும் போட நினைக்கிறாரா இ.பி.எஸ்..? பாஜக வேட்பாளர் பிரசாரத்துல மோடி போட்டோ எங்கே.. நம்பளே போடலனா எப்படி.. ஏமாற்றத்தில் பாஜகவினர்.. முழிக்கும் அதிமுக.. ஆனா மேட்டரே வேறயாம்... | ADMK BJP Confusions | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, March 27, 2021

சசிகலாவ ஏமாத்தன அதே ஸ்கெட்ச மோடிக்கும் போட நினைக்கிறாரா இ.பி.எஸ்..? பாஜக வேட்பாளர் பிரசாரத்துல மோடி போட்டோ எங்கே.. நம்பளே போடலனா எப்படி.. ஏமாற்றத்தில் பாஜகவினர்.. முழிக்கும் அதிமுக.. ஆனா மேட்டரே வேறயாம்... | ADMK BJP Confusions | Vil Ambu News

பிரதமர் மோடியின் போட்டோ இல்லாமல், அவர் பெயரைகூட உச்சரிக்காமல் பரவலாக தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. 

தேர்தல் களம் சூடாகி உள்ளது.. கட்சி தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. அந்த வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது..

பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான அதிருப்தி அதிமுக மீது மக்களுக்கு இந்த முறையும் வந்துள்ளது.. அதிமுகவுக்கு ஓட்டுப் போட ரெடி.. ஆனால் கூட பாஜக இருக்கே.. என்று பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. 

முதல்வர்

இந்த 4 வருடம் எடப்பாடியார் தந்த நல்லாட்சியை மட்டுமே சொல்லி ஓட்டுக் கேட்க முடிகிறதே தவிர, மத்திய அரசை மருந்துக்குகூட சாதனைகளாக சொல்லி ஓட்டு கேட்க முடியாத நிலை, அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழக பாஜகவுக்கும் உள்ளது என்பதே கள யதார்த்தம்.

உதயநிதி ஸ்டாலின்

உதாரணத்துக்கு மதுரை தொகுதியில் எங்கே போனாலும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்னாச்சு? என்ற கேள்விகள் வேட்பாளர்களிடம் முன்னிறுத்தப்பட்டு வருகிறது. அதைத்தான் முதல் கேள்வியாக மதுரை மக்கள் கேட்கிறார்களாம். 

இதையே இப்போது உதயநிதியும் கையில் எடுத்துக் கொண்டு செங்கல்லோடு பிரசாரங்களை அனல் பறக்க வைக்கிறார். பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு பற்றி கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர் பொதுமக்கள்.. ஆனால், இதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், மறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் பரிதாப நிலைமைக்கு அதிமுக இன்று தள்ளப்பட்டுள்ளது. 

வாடை

அதாவது பாஜக வாடையே வராமல், கவனத்துடன் பிரச்சாரங்கள் நடந்து வருகிறதாம்.. பிரச்சாரம் மட்டுமல்ல, பாஜக தலைவர்களின் போட்டோக்கள், பெயர்கள் என எதையுமே காணோம்.. தப்பித்தவறி மோடியின் பெயரைகூட எங்குமே சொல்லாமல் கவனத்துடன் பிரச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள் அதிமுகவினர். 

எம்ஜிஆர்

என்னதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் கைக்குள் போட்டுக் கொண்ட நினைப்பில் பாஜக இருந்தாலும், இந்த நிமிடம் வரை, இறந்துபோன எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் அதிமுகவுக்கு உயிர் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது.. ஜெயலலிதாவைக் காட்டித்தான் பாஜகவுக்கே வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்ட்டுள்ளதாம். நடிகை குஷ்பு கூட தனது பிரசார விளம்பரத்தில் ஜெயலலிதா படத்தைத்தான் போட்டுள்ளார். மோடி படம் இடம் பெறவில்லை.

பாஜக தலைவர்கள்

வாக்காளர்களை கவருவதற்காக அதிமுக தலைமை இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்திருந்தாலும், இது பாஜகவுக்கு ஒரு சரியான சவுக்கடி என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

அதிமுகவை கடந்த பல மாதமாக, விரட்டியும் அழுத்தம் தந்தும் கூட்டணி வைக்க தெரிந்த பாஜகவுக்கு, இதே கூட்டணிக்காக பலமுறை தமிழகத்துக்கு படையெடுத்து வந்த பாஜக தலைவர்களுக்கு, இப்போது ஏன் இங்கு வந்து பிரச்சாரத்தை கையில் எடுக்க தோணவில்லை? 

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அத்தனை முறை இங்கு வந்தாரே, அவர் கூட்டணி குறித்தா பேசினார்? அது சம்பந்தமாக அறிவாலயம் பக்கம் அவர் சென்றிருப்பரா? கிடையாது.. மக்களை வந்து சந்தித்தார்.. மக்களிடம் நேரடியாக நெருங்கினார்.. கூட்டத்தோடு கூட்டமாக அவர்களை அரவணைத்தார்.. "அண்ணா" என்ற அடைமொழியை அனைத்து சகோதரிகளுக்கும் தந்துவிட்டு சென்றார்..

அதிமுக

மதுரையில் ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்டுள்ள கோயிலில் பிரதமர் மோடி படம் இருக்கிறதாம்.. அப்படி என்றால், அதிமுகவின் இலவச திட்ட அறிக்கைகளில் ஏன் அவரது படம் பொறிக்கப்படவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.. அன்று அமித்ஷா சென்னை வந்தபோது, அவரை வரவேற்க வந்த கூட்டத்தில் பாஜகவினரைவிட அதிமுகவினரே அதிகமாக தென்பட்டார்களே, எப்படி? 

முத்தலாக்

அன்றும் இப்படித்தான், முத்தலாக் சட்ட விவகாரம் உச்சத்தில் இருந்தபோது இடைத்தேர்தலை அதிமுக சந்திக்க நேர்ந்தது.. வேலூர் தொகுதி எங்குமே பாஜகவின் நிழல்கூட படியாமல் கவனத்துடன் பார்த்து கொண்டது.. எந்த தலைவர்களின் பெயரையும் தவறிகூட உச்சரிக்காமல் பிரச்சாரத்தை நாசூக்காக முடித்தது.. அப்படி இருந்தும் தோல்வியைத்தான் பெற முடிந்தது.. 

ஓட்டு வேட்டை

இப்போதும் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.. பிரதமர் பெயரை பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பும் என்பதால் பாஜகவினரே மோடியை தவிர்ப்பதாகவும் தெரிகிறது.. இப்போதைக்கு ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் வைத்து மட்டுமே அதிமுக கூட்டணியினர் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment