வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?சிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது.
சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.நந்து. பாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது. இயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

’கெட்டவன்’ படத்தை சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஆனால் இப்போது இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறவே அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன். அதன் படி இயக்குனர் பூபதிபாண்டியனிடம் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். ஆனால் நான் தனுஷை நேரில் சந்தித்துப் பேசவேயில்லை.(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இதற்கிடையே சிம்பு நாமே இந்தப்படம் பண்ணலாம் என மறுபடி கூறினார். எனவே அதற்கு தயாரானேன். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் கருதிக் கொண்டு சிம்பு என் மீது கோபப்பட்டார். அங்கிருந்து தான் இப்படத்திற்கான பிரச்சினை தொடங்கியது.

சிம்புவும் நயன்தாராவும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத்தெரிந்து ஒரு வி‌ஷயம், முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் ‘நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் முதல் -அமைச்சர் ஆகக்கூடிய வாய்ப்பு கூட இருக்கிறது’ என கூறினார்.
இதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்” இவ்வாறு இயக்குனர் நந்து கூறியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment