வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 8 - 13/10/2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 8 - 13/10/2018

தினம் ஒரு திரிகடுகம் :திரிகடுகம் - 8:
தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.

அர்த்தம் :
பழமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் அவையில் நல்ல குடிப்பிறப்பும், பலவகை நூலோர் கூடியிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவும், போர்க்களத்தில் வேந்தன் மகிழ பகைவரை கொன்று பெற்ற வெற்றியும், தானாகத் தெரிய வேண்டுமே தவிர, தாமே தம்மைக் குறித்து புகழ்ந்து பேசக்கூடாது.அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment