வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரியோ ராஜை ஹீரோவாக்கிய சிவகார்த்திகேயன்: தனுஷ் வழியில் செல்கிறாரா?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 30, 2018

ரியோ ராஜை ஹீரோவாக்கிய சிவகார்த்திகேயன்: தனுஷ் வழியில் செல்கிறாரா?டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜை ஹீரோவாக வைத்து தான் தயாரிக்கும் படத்திற்கு பூஜை போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். நண்பன் அருண்ராஜா காமராஜுக்காக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன்.


தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் கனா படத்தை தயாரித்துள்ளார். அந்த படம் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்தை தயாரிக்கிறார் அவர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

சிவகார்த்திகேயன்  
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். கார்த்திக் வேணு இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் ஷிரின் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மகிழ்ச்சி 
ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.


மகிழ்ச்சி 
தான் ஹீரோவாகியுள்ள மகிழ்ச்சியை ரியோ ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த புதிய பயணத்தில் அனைவரின் ஆசியும், ஆதரவும் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் 
சின்னத்திரை பிரபலமான தீனாவை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். இந்நிலையில் அவர் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் ரியோ ராஜை ஹீரோவாக்கியுள்ளார். தனுஷ் போன்றே சிவாவும் பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்து புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

.

No comments:

Post a Comment