வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, May 17, 2019

ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரம்: கூலிப்படையை ஏவி மூத்த மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம்!

திண்டிவனம் அருகே ஏசி விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் கூலிப்படையை வைத்து மூத்த மகனே குடும்பத்தை தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் 60 வயதான ராஜி. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர். கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். கோவர்த்தனனுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ரத்தக்கறை 
14ம் தேதி இரவு கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், ராஜி தனது மனைவி மற்றும் 2வது மகனுடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். மறுநாள் அதிகாலையில் ஏ.சி. எந்திரம் வெடித்து தீப்பிடித்ததால் கலைச்செல்வியும், கவுதமும் அறையில் உடல் கருகி இறந்ததாக கூறப்பட்டது. ராஜி, வீட்டின் வராண்டா பகுதியில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது.


மூத்த மகன் 
இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோவர்த்தனன் போலீசாரிடம் கூறுகையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாததால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து இருக்கலாம் என்று கூறினார்.


கிடுக்கிப்பிடி விசாரணை  
ஆனால் ஏ.சி. எந்திரம் வெடித்த அறையில் கிடந்த 2 மண்எண்ணெய் கேன், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவர்த்தனனை கைது செய்த போலீசார் தனி அறையில் வைத்து நேற்று இரவு முதல் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.


செல்போன் ஆய்வு  
மேலும் கோவர்த்தன் மற்றும் அவரது மனைவி தீபாகாயத்ரியிடம் செல்போனில் பேசியவர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தும் போலீசார் விசாரித்து வந்தனர். அதுமட்டுமல்லாது, கொலை தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
குடும்பத்தை தீர்த்துக்கட்டிய மகன் 
விசாரணையில் 3 பேர் உயிரிழந்தது, திட்டமிடப்பட்ட கொலையே என முதலில் போலீசார் உறுதிபடுத்தினர். இந்நிலையில் மூத்த மகனே சொத்துக்காக கூலிப்படையை வரவழைத்து தாய், தந்தை மற்றும் தம்பியை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment