வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து - மு.க.ஸ்டாலின் | MK Stalin Announcement Today | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, September 04, 2021

பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து - மு.க.ஸ்டாலின் | MK Stalin Announcement Today | Vil Ambu News

வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று , நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment