வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 17, 2021

ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம்.!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


இந்த நிலையில், ஜனவரி 3-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. 


பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட 21 பொருட்கள் அடங்கிய சிறப்புத்தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment