வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Anna Arivalayam News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Anna Arivalayam News. Show all posts
Showing posts with label Anna Arivalayam News. Show all posts

Monday, March 15, 2021

இன்னும் 48 நாட்களில் உதிக்கும் சூரியன்.. அண்ணா அறிவாலயத்தில் திமுக கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! | DMK Countdown start for 48 days | Vil Ambu News

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்ட்டில் வரும் மே 2ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வரும் என்பதை குறிக்கும் கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. கடந்த 2011 -ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக வென்றது. இதையடுத்து 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலாவது ஆட்சிக்கு வரும் என கூறப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக அதிமுகவே வென்றது.

இந்த நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி உயிரோடு இல்லாத நிலையில் இந்த தேர்தலில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பதை பார்க்க அனைத்து கட்சிகளும் கவனமாக செயல்பட்டு வருகிறார்கள்.

கருத்துக் கணிப்பு 
கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என சொல்கின்றன. இந்த 10 ஆண்டு கால ஆட்சி மக்கள் விரோத திட்டங்களை அதிமுக அரசு ஆதரித்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் விடியலை நோக்கி தமிழகம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
குறை தீர் கூட்டம் 
234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கிய ஸ்டாலின் அங்கு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுவாக பெற்று கொண்டார். அவ்வாறு பெற்ற மனுக்களுக்கு ஆட்சி அமைத்தவுடன் 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார். இன்னும் சில தொகுதிகளில் மட்டுமே அந்த திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.
ஸ்டாலின்தான் வாராரு 
அது மட்டுமல்லாமல் அண்ணா அறிவாலயத்திலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் மக்கள் தங்கள் குறைகளை பெட்டிகளில் செலுத்தலாம். அங்கு ஒரு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப் போறாரு என எழுதப்பட்டிருந்தது.

மே 2 
மேலும் உதிக்கும் சூரியன் என குறிப்பிடப்பட்டு 48 நாட்கள், 20 மணி நேரம், 56 நிமிடங்கள், 26 நொடிகள் என இருந்தது. இது என்னவென பார்த்த போதுதான் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு உள்ள நாட்கள் என்பது தெரியவந்தது. இந்த தேர்தலில் திமுகதான் வெல்லும் என்பதற்கான கவுண்ட்டவுன் இப்போதே தொடங்கிவிட்டது.