வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Chennai Latest Bike Accident to take selfie with driving
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chennai Latest Bike Accident to take selfie with driving. Show all posts
Showing posts with label Chennai Latest Bike Accident to take selfie with driving. Show all posts

Monday, July 22, 2019

ஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ!

பசங்கள பார்த்தால் நம்ம ஊர் போல இல்லை.. பைக் ஓட்டிக் கொண்டே செல்பி எடுத்தார்கள்.. அடுத்த நிமிஷம் உயிருக்கு போராடி மண்ணில் அசைவற்று கிடக்கிறார்கள். ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. எந்த ஊர் என்று சரியாக தெரியவில்லை. 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள்.




ஒருத்தர் தலையிலும் ஹெல்மட் இல்லை. 3 பேருமே சின்ன வயசு பிள்ளைகள்தான். வடநாட்டு சாயல் உள்ளது. செல்போனில் ஹிந்தி பாட்டு பின்னணியில் கேட்க முடிகிறது.


நெடுஞ்சாலையில் வேகமாக போய் கொண்டே இருக்கும்போது, பைக்கின் நடுவில் உட்கார்ந்திருந்தவர் செல்பி எடுக்கிறார். வண்டி ஓட்டுபவரும், பின்னாடி உட்கார்ந்திருந்தவரும் காமிராவையே அடிக்கடி பார்த்து வருகிறார்கள். போஸ் கொடுக்கிறார்கள்.. 


சிரிக்கிறார்கள்! எதிரே எந்த வண்டி வந்ததோ தெரியவில்லை.. எதிரே வந்த வண்டி மோதியதா, அல்லது இவர்கள் போய் எந்த வண்டியிலாவது மோதி கொண்டார்களா தெரியவில்லை.. 


அடுத்த செகண்ட் தரையில் விழுந்து கிடக்கிறார்கள். 2 பேருக்கு அசைவே இல்லை.. ஒருவர் மட்டும் மெதுவாக கண்களை திறக்கிறார். 3 பேருமே ரத்தத்தில் புரண்டு கிடக்கிறார்கள். இந்த பிள்ளைகளுக்கு இப்போது என்ன ஆச்சு என்றும் தெரியவில்லை.


யாராவது இவர்களை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார்களா? நல்லா இருக்கிறார்களா என்ற தகவலும் இல்லை. ஆனால் செல்பி எடுத்து கொண்டே பைக் ஓட்டி வந்த விபரீதம் மட்டும் வீடியோ மூலம் விளங்குகிறது!