வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Chennai Trending News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chennai Trending News. Show all posts
Showing posts with label Chennai Trending News. Show all posts

Monday, July 22, 2019

அதிர்ச்சி வீடியோ... சுல்தானை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்.. தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்! Read more at: https://tam

சுல்தானை ஓட ஓட விரட்டி சென்று 2 பேர் தாக்கியதை கண்டு பொமக்கள் ஓடவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சென்னை பாரிமுனையில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது சுல்தான். இவர் பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஆட்டோவில் 2 பேர் உட்கார்ந்து, கஞ்சா புகைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சுல்தான், பக்கத்தில் நின்றிருந்த டிராபிக் போலீசாரிடம் புகார் சொல்லி உள்ளார். 
 சுல்தான் தங்களை பற்றி போலீசில் போட்டு கொடுத்ததை கண்ட கஞ்சா பிடித்து கொண்டிருந்த அந்த 2 பேரும், ஆத்திரம் அடைந்தனர். அதனால் சுல்தானை நோக்கி கொலை வெறியுடன் ஓடிவந்தனர்.

இதை பார்த்ததும், சுல்தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அவர்கள் 2 பேரும் விடவே இல்லை. சுல்தானை துரத்தி துரத்தி அடித்தார்கள். சாலை முழுக்க மக்கள் தலைகளும், வாகனங்களும் நெருக்கி கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது.
பொதுமக்கள் முன்னிலையில் இப்படி விரட்டி தாக்குகிறோமே என்ற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல், சுல்தானை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தனர் அந்த 2 பேரும்.


இதை பார்த்து அதிர்ச்சியான பொதுமக்களால், இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமராவில் பதிவாகி, அது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா பிடித்த நபர்களை கைது செய்து, 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயர் ராபர்ட் மற்றும் தீனா என்று தெரியவந்துள்ளது.