எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest Trending News. Show all posts
Showing posts with label Latest Trending News. Show all posts
உலகிற்கே இன்று பூஜ்ஜியத்தை கொடுத்த கொடுத்தவர் ராமானுஜர் இவரை நாம்
கணித மேதை என்று புகழ்கின்றோம். இவர் வாழ்ந்த மண்ணில் பிறந்த நமக்கும்
அவரின் அறிவும், சிந்தைனயும் ஜீனில் சாதாரணமாகவே கலந்திருக்கும்.
கால்குலேட்டரை விட அதிகவேகத்தில் கணித்து கூட்டல், பெருக்கல்,
வகுத்தல், வர்க்க மூலம் காணுதல் என்றால் நம்மால் முடியாது. நாம் இன்று
டிஜிட்டல் உலகில் இருப்பதால், நாம் பெரும்பாலும் கால்குலேட்டர், கணிணி
உதவியோடு தான் ஓரே நேரத்தில் இதுபோன்ற வேலையை செய்ய இயலும்.
கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை நாம் இந்த காலத்தில்
பார்த்திருக்க முடியாது. ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால்
கூfட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக
என்றால் சாத்தியம் தான் என்று நிருபித்துள்ளார் இவர்.
இவர் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கால்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில்
கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா? இவர் மலேசியாவில்
பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான்.
இவர் தமிழரா என்று
அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன்
கால்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார்.
யாஷ்வின் சரவணன்
இவரை மனித கால்குலேட்டர் அன்று அழைக்கப்படுகின்றார். வேகமான மனக்
கணக்கீடுகளுக்கு அவர் மிகவும் பிரபலமானவர். 15வயதான இவர். சாதனையின் உச்சம்
என்றே கூறாலம்.
கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார். ஆசியா காட் டேலண்ட் 2019ல் மேடையில் இவர்
நிழத்தியது சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது. மலேசியாவில் இருந்து சென்று
ரன்னர் பட்டத்தையும் வென்றுள்ளார்.
யாஷ்வின் சரவணன் பூர்வீகம்
யாஷ்வின் சரவணன் பூர்வீகம் கேரள மாநிலம். இவர் இந்தியாவிலுள்ள கேரள
மாநிலத்தில் பிறந்தவர். பிறகு, அவரது குடும்பம் மலேசியாவின்
கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்தது. அவரது வயது 15 வயது ( 20190-ன்படி
சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது).
யாஷ்வின் சரவணன் குடும்பம்
யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள்
பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.
யாஷ்வின் சரவணனின் குடும்பத்தினர் பெயர்கள் எதுவும் தெரியவில்லை. தந்தை,
தாய், சகோதாரர் என்று அவர்கள் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். மேலே
இருப்பது தான் குடும்ப புகைப்படம்.
7 வயதில் பட்டம் வென்றார்
7 வயதிலேயே வேகக் கணக்கீட்டைக் கற்கத் தொடங்கினார் யாஷ்வின் சரவணன். பல
வருட கடின நடைமுறைகளுக்குப் பிறகு, அவருக்கு மனித கால்குலேட்டர் என்ற
பட்டம் கிடைத்தது.
யாஷ்வின் கடந்த காலங்களில் பல பரிசுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இரவில் தூங்காதா யாஷ்வின்
கணிதத்தில் யாஷ்வின் ஆர்வம் தனது 7 வயதில் வகுப்புகளுக்குச் செல்லத்
தொடங்கியதும், கணிதத்தைக் கற்க அபாகஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
இறுதியில், அவர் அனைத்து நிலைகளையும் முடித்தபோது, வகுப்புகள்
பயனற்றதாகக் கண்டார்.
யாஷ்வின் தனது சொந்த பயிற்சியைத் தொடங்கிய நேரம் அது.
யாஷ்வின் ஒரு நேர்காணலில் நான் எண்களை மிகவும் விரும்புகிறேன். எல்லா
இடங்களிலும் ஒருவித தொடர்பைக் காண்கிறேன். நான் கார் எண் தகடுகளைப்
பார்த்தாலும் கூட. சில நேரங்களில் என்னால் இரவில் தூங்க முடியாது என்று
தெரிவித்தார்.
மிகவும் பிரபலமான யாஷ்வின்
யாஷ்வின் சரவணன் தான் வேகக் கணக்கீட்டு திறனுடன் பிறக்கவில்லை என்று
நம்புகிறார்,. ஆனால் அவர் தன் சொந்த முயற்சியால், 100%
வெற்றியடைந்துள்ளார்.
அவர் பரிசளிக்கப்பட்டவர் என்று மறுத்த போதிலும், யாஷ்வின் ஒவ்வொரு நாளும் 5
முதல் 10 நிமிடங்கள் மட்டுமே மன எண்கணிதத்தை பயிற்சி செய்கிறார்.
சில
சமயங்களில் அவர் பயிற்சி கூட செய்ய மாட்டார்.
இப்போதைக்கு, யாஷ்வின் மலேசியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலும் மிகவும்
பிரபலமாகிவிட்டார். மேலும் அவரது வேக கணக்கீட்டு வீடியோ 1.5
மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
திருச்சி, புத்தூர் நால் ரோடு பகுதியில் அரேபியன் தந்தூர் சாய்
(Tandoori Tea) என ஒரு டீ கடை போட்டிருக்கிறார் நம், மெக்கானிக்கல்
இன்ஜினியர் முகம்மது அஸ்லாம்.
"என்னைய்யா இன்ஜினியரிங் படிச்சிட்டு டீ கடை போட்டிருக்க, போய் ஆகற
வேலையைப் பாரு" எனச் சொல்லியவர்களை எல்லாம் அசால்டாக புறம் தள்ளிவிட்டு டீ
கடை போட்டு பல ஜீனியர்களுக்கு பார்ட் டைம் வேலை கொடுத்துக்
கொண்டிருக்கிறார்.
"படிச்ச படிப்புக்கு வேலை கிடச்சிருக்காது போல, அதான் டீ கடை
போட்டிருக்காரு" என இவரை ஏளனம் பேச வேண்டாம். இவர் திருச்சி BHEL-ல்
தற்காலிக வேலை பார்த்துவிட்டு, எதையாவது செய்ய வேண்டும் எனச் சொல்லி வெளியே
வந்தவர்.
திருச்சியில் முதன் முறையாக
பிசினஸ் என்றாலே எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற ஐடியா இருக்கும்.
ஆனால் என்ன செய்வது என தெரியாது. நம் அஸ்லாமுக்கு தெரிந்திருந்தது.
வட
இந்தியாவில் கொடூரமாக டிரெண்டாகிக் கொண்டிருக்கும் Tandoori Tea-ஐ கையில்
எடுத்தார். சென்னையில் இந்த ஸ்மோக்கி சுவை Tandoori Tea கிடைக்கிறது.
திருச்சியில் யாராவது இந்த Tandoori Tea-ஐப் போட்டிருக்கிறார்களா எனப்
பார்த்தால் "அட நாம தான் மொதல்ல" என புத்தூர் நால்ரோடு பகுதியில் கடை
போட்டுவிட்டார்
இரண்டு மாதம் தான்
இவர் கிறிஸ்து பிறப்பு முன் எல்லாம் கடை போடவில்லை. கடை போட்டு வெறும் 66
நாட்கள் தான் ஆகிறது. 01 ஏப்ரல் 2019-ல் தான் கடைக்கு பூஜை போட்டு முதல்
Tandoori Tea போட்டிருக்கிறார்.
இந்த இரண்டு மாதத்திலேயே பயங்கரமான ரீச்
கிடைக்க, பிசினஸும் நன்றாக வளர்ந்திருக்கிறதாம். முதலில் தயங்கிய
பெற்றோர்கள் 60 நாட்களில் கடை நடத்திய திறனைப் பார்த்து "என்னங்க பையன்
பொழச்சிக்குவான் போலருக்கே..!" என கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களாம்.
அதற்கு அஸ்லாமும் "அதான் நல்ல பேர் வாங்கிட்டோம்ல, அதான் நம்மள
கண்டுக்குறதில்ல" என கண் அடிக்கிறார்.
நண்பர்கள்
கடையில் எப்போதுமே ஒரு கலகல யூத் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.
காலேஜில் சீனியராக இருந்த அஸ்லம் கடையில், பார்ட் டைம் பார்க்கும்
ஜீனியர்களும் அதிகம் உண்டு. வெறும் 10 ரூபாய்க்கு ஒரு கப் Tandoori Tea
கொடுத்தே என்னால் இரண்டு மாதம் கடையை நடத்த முடிந்திருக்கிறது.
வேலை
பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுக்க முடிந்திருக்கிறது, இன்னும்
விரிவாக்கம் செய்யப் போகிறேன் என உற்சாகம் பீரிட பெருமைப் படுகிறார்
அஸ்லாம். ஆனால் லாப நஷ்டங்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக இவரால் ஒரு டீ கடையை
நடத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது மட்டும்
தெளிவாக புரிகிறது.
மெல்லிய சிரிப்பு
ஸ்ஸ்..ப்ப்ப்... தலைவா டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கே... இந்த டீய எப்புடி
பண்றாய்ங்க..? என முதல் முறை ஸ்மோக்கி சுவை கொண்ட Tandoori Tea குடிக்கும்
பலரும் கேள்வி கேட்பதுண்டு. ஆனால் அஸ்லாம் அதற்கு பதில் சொல்லாமல் செய்து
காட்டுகிறார். ஆக நாம் இணையத்தில் இந்த Tandoori Tea ரெசிப்பியை தேடிப்
பிடித்திருக்கிறோம்.
மண் குவளை
2019-ல் இருந்து தான் இந்த Tandoori Tea வட இந்தியாவில் பெரிய அளவில் பரவி
வருகிறது. ஆனால் தென்னிந்தியாவுக்கு இப்போது தான் எட்டிப் பார்க்கத்
தொடங்கி இருக்கிறது. இந்த Tandoori Tea-ன் சுவைக்கு குடிக்கும் டீயை விட,
மண் குவளை ரொம்ப முக்கியம். அந்த மண் குவளையால் தான் டீயின் டேஸ்ட் வேறு
லெவலைத் தொடுகிறது.
ரெகுலர் டீ
தயாரிப்பு
மறு பக்கம் டீ போட்டுக் கொண்டிருப்பார்கள். பிரியாணியை எப்படி
நூற்றுக்கணக்கான வழியில் தயாரிக்க முடியுமோ அப்படி டீ போடுவதற்கும் பல
ரெசிப்பிகள் இருக்கின்றன. பொதுவாக ஒரு பக்கம் தண்ணீரில் டீத் தூள் போட்டு
கொதிக்க வைத்து டீக்கான டிகாஷனை தயாரிப்பார்கள். மறு பக்கம் பாலை கொதிக்க
வைப்பார்கள். பால் உடன் சர்க்கரை டீ டிகாஷன் சேர்த்தால் டீ ரெடி..... ஆனால்
நம் Tandoori Tea-யை அப்படிப் போடுவதில்லை.
பொருட்கள்
Tandoori Tea-க்கு மிக ஏலக்காய் பொடி முதல் கரம் மசாலா வரை பலவற்றையும்
சேர்க்கிறார்கள். பொதுவாக இணையத்தில் கிடைக்கும் செய்திகளில் மசாலா டீக்கு
போடுவது போல ஏலக்காய், கிராம்பு, சுக்கு அல்லது இஞ்சி, பட்டை என லிஸ்ட்
நீள்கிறது. இவைகளை எல்லாம் அவர்களுக்கு உரிய ரகசிய அளவுகளில் நன்றாக
வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்கிறார்கள்.
டீ தயாரிப்பு
டீக்கு தேவையான விகிதத்தில் தண்ணீரை பாலுடன் ஏற்கனவே சேர்த்து
விடுகிறார்கள். இப்போது பாலை கொதிக்க வைக்கும் போதே, மேலே சொன்ன பொடியை
சேர்த்து விடுகிறார்கள். அதனால் பாலில் சுவையும் மணமும் நிறைந்து
விடுகிறது. அதன் பின் பாலிலேயே டீத் தூள் மற்றும் சர்க்கரை போட்டு கொதிக்க
வைத்து அடுத்த சில மணி நேரங்களுக்குத் தேவையான டீயை தயாரித்து கேனில்
சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.
Tandoori Tea
இப்போது கஸ்டமர் வந்து Tandoori Tea கேட்டால், இந்த தங்க நிறத்தில்
ஜொலிக்கும் மண் குவளையை எடுக்கிறார்கள். கேனில் சேமித்து வைத்திருக்கும்
டீயை இந்த ஜொலிக்கும் மண் குவளையில் ஊற்ற டீ மீண்டும் துள்ளிக்
குதிக்கிறது.
ஆகையால் வெப்பத்தில் ஜொலிக்கும் இந்த மண் குவளையை ஒரு பெரிய
பாத்திரத்தில் வைத்து டீயை ஊற்றுகிறார்கள். எனவே வெப்பத்தில் ஜொலிக்கும்
மண் குவளையின் முழு வெப்பத்தையும், டீ மீண்டும் எடுத்துக் கொள்கிறது. ஒரு
கட்டத்தில் ஜொலிக்கும் மண் குவளையின் சூடு குறைந்து விடுகிறது. மண்
குவளையின் ஸ்மோக்கி சுவை நிறைந்த அந்த தந்தூர் டீயின் ஆவி பறக்கிறது.
ஸ்பெஷல் Tandoori Tea ரெடி.
சுவை
ஏற்கனவே ஏலக்காய், க்ராம்பு, பட்டை, சுக்கு எல்லாம் போட்டு சுவை ஏத்தப்
பட்டு வைத்திருக்கும் டீயை மீண்டும் மண் பாணையில் சுட வைப்பதால், ஏதோ ஒரு
இனம் புரியாத சுவை கூடுகிறது. மண் பாண்டங்களில் சமைத்த உணவுகளை சுவை
பார்க்காத 90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்த Tandoori Tea வேறு ஒரு புது பரவசத்தைக்
கொடுக்கிறது. இவ்வளவு பெரிய பிராசஸ் கொண்ட டீயை வெறும் 10 ரூபாய்க்கு
அஸ்லாம் கண் முன் போட்டுக் கொடுத்தால் குடிக்காமல் என்ன செய்வோம்..?
வேறு என்ன..?
நம் அஸ்லாமின் அரேபியன் தந்தூர் சாய் கடையில்... பச்சை மிளகாய் போட்ட
குல்கி சர்பத், குல்கி பூஸ்ட், குல்கி ரோஸ்மில்ஸ் என வித்தியாசமான
ஐட்டங்களாக அள்ளி விடுகிறார். அதோடு "இன்ஜினியரிங் படித்த விஐபி-க்களுக்கு
வேலை இல்லையா... வாங்க சார்... வந்து கடைய போடுங்க பாத்துக்குவோம்" என
உளமாற அழைக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அஸ்லாம்.
மது பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
இந்தநிலையில், இஸ்ரேலின், 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய, மது வகையை அறிமுகம் செய்துள்ளது. ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது. அதில் கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்து, கூலிங் கிளாசுடன் இருப்பது போல காந்தியின் படம் உள்ளது.இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பிய, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங், ''இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தான் தயாரித்த மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்துள்ளது.
இதன் மூலம் தேசத் தந்தையான அவரை அவமானப்படுத்தி விட்டது.எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டிலில் உள்ள காந்தியின் உருவப்படத்தை உடனே நீக்கச் செய்ய வேண்டும் என்றார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருக்கு, துணை குடியரசுத் தலைவர், வெங்கையா நாயுடு கூறினார். இது தொடர்பாக, இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது.
அதைத் தொடர்ந்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவே தான், ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்தநிலையில், ஆசியாவின் மிகப்பெரிய மதுபானக் கடை, கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள காந்தி சிலை அருகே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
நான்கவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை மிகவும்
சமயோசிதமாக காப்பாற்றிய தாயக்கு இணையதளத்தில் தொடர்ந்து பாராட்டுகள்
குவிந்த வண்ணம் உள்ளது.
அதன்படி கொலம்பியா மாகணத்தில் மெடலின் என்ற பகுதியில் லிப்டில்
இருந்து அம்மாவும் சிறுவனும் வந்தனர், நான்கவது மாடிக்கு வந்த சில
நொடிகளில் சிறுவன் பால்கனியில் உள்ள கம்பியின் பக்கம் சென்று விடுகிறான்.
பின்பு கம்பியை பிடித்தபடி பார்த்த சிறுவனம் தவறி விழ தாய் உடனடியாக
சுதாரித்து சிறுவனின் கால்களை பிடித்து கொள்ள குழந்தை காயம் ஏதுமின்றி
தப்பித்து விட்டான். மேலும் தாய் மெதுவாக அந்த குழந்தையை இழுத்து
காப்பிற்றி விட்டார்.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தி
சிசிடிவி காட்சியினை பலரும் பகிர்ந்து தாயின் சமயோசிதமான செயலை
பாரட்டியுள்ளனர். சிலர் அம்மாவினால் மட்டும் தான் நொடியில் செயல்படமுடியும்
என்று கருத்து
தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தாய் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது தான் துறுதுறுவென
அங்குமிங்கும் ஓடிய குழந்தை விளையாட்டாக பால்கனியை எட்டிப்பார்த்தது.
பின்பு யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென குழந்தை தவறி கீழே விழுச்
சென்ற நொடியில், சிறிதும் தாமதிக்காமல் தாய் பாய்ந்து குழந்தையின்
காலைப்பிடித்து காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.