வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Legend News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Legend News. Show all posts
Showing posts with label Legend News. Show all posts

Friday, November 30, 2018

என் பணியை இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன் - ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் உருக்கம்! IG Pon Manickavel Retirement



ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று அவருக்கு ரயில்வே காவல்துறை சார்பில் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது.


சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே கிடையாது. சமீபத்தில் சிலை கடத்தலைத் தடுக்க இவர் காட்டிய அதிரடியால் மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிட்டார். ஆனால், இவரின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத் துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம் காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


நீதிமன்றம், ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவைப் பிறப்பித்தது. கற்சிலைகள் மட்டுமல்லாது தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளையும் இவர் கண்டுபிடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள், சமீபத்தில் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது.


ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்தச் சிலை தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கொண்டுவரப்படும்போது ஊர் மக்கள் அனைவரும் கூடி விழாவாகக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஜி பொன்மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில்இன்றுடன் இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts