வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Vellerukkampoo Special
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Vellerukkampoo Special. Show all posts
Showing posts with label Vellerukkampoo Special. Show all posts

Saturday, December 25, 2021

அதிர்ஷ்டம் தரும் இந்த பூவை எங்கு பார்த்தாலும் விட்டுவிடாதீர்கள்! ஒரு பூ கிடைத்தாலும் இல்லத்தில் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும்!

ஒவ்வொரு உயிரினத்திற்கும், ஒவ்வொரு தாவரத்திற்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில தாவரங்கள் எதிர்மறை ஆற்றல்களையும், சில தாவரங்கள் நேர்மறை ஆற்றல்களையும் வெளியிடுவதாக அமையப் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த ஒரு அதிர்ஷ்டம் தரும் பூ, சிலருக்கு பார்த்தாலே ஒரு பயம் வருகிறது. 


ஆனால் உண்மையில் அதன் மகத்துவங்கள் என்னென்ன? இந்த பூவை என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
அதிர்ஷ்டம் தரும் இந்த பூவின் பெயர் வெள்ளெருக்கன் பூ! எருக்கம் பூவில் விதவிதமான நிறங்கள் இருந்தாலும், வெள்ளை எருக்கம் பூவிற்கு அதிக சக்தி உண்டு.


வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்டால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வெள்ளருக்கன் மரத்தைக் கொண்டு செய்யப்படும் அந்த விநாயகருக்கு அவ்வளவு அதீத சக்திகள் உண்டு. அது போல பல சித்தர்களும் தங்கள் சித்து வேலைகளைக்கும், மூலிகை ஆராய்ச்சிகளுக்கும் அதிகம் பயன்படுத்திய இந்த எருக்கம்பூ ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.

எருக்கம் பூ இருக்கும் இடத்தில் பாம்புகள் அதிகம் இருக்கும் என்பார்கள். எனவே எருக்கம்பூ இருக்கும் இடத்திற்கு செல்ல பலரும் அச்சப்படுகின்றனர். எருக்கம் பூவை உடைத்து அதில் வரும் சத்தத்தைக் கேட்டு குழந்தைகள் மகிழ்வது உண்டு. இந்த எருக்கம்பூ நேர்மறை ஆற்றல்களை அதிகம் வெளியிடும் தன்மை கொண்டுள்ளது எனவே இந்த பூவை ஒன்று கிடைத்தாலும் விட்டுவிடாமல் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். எருக்கம் பூவை வைத்து மாலை தொடுத்து விநாயகருக்கு சாற்றி வழிபட்டால் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது தீவிரமான நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதனால் தான் பிள்ளையார் சதுர்த்தி அன்று தவறாமல் எருக்கம்பூ மாலை, அருகம்புல் சாற்றி வழிபடுகிறோம். விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல் தினம்தோறும் நீங்கள் விநாயகர் படத்திற்கு எருக்கம்பூ மாலையை சாற்றி வழிபட்டு வந்தால் சகல பிரச்சனைகளும் நிவர்த்தியாகும். மேலும் தொழில் வளர்ச்சி காணவும், வியாபாரம் சூடு பிடிக்கவும் ஒரு கண்ணாடி டம்ளரில் சில எருக்கம் பூக்களைப் போட்டு வைக்கவும். குறிப்பாக வெள்ளை எருக்கம் பூக்களைப் போட்டு வைப்பது சிறந்தது. அது வெளியிடும் நேர்மறை ஆற்றல் ஆனது உங்களுக்கு அள்ள அள்ள குறையாத அதிர்ஷ்டத்தை ஈர்த்து தரும்.

வீட்டிலும், பூஜை அறையில் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அதில் எருக்கம் பூக்களை மிதக்க விட்டால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் துவங்கும். அதனால் அங்கு உள்ள எதிர்மறை ஆற்றல்கள் தானாகவே விலகி சென்று விடும். எருக்கம் பூ, துளசிச்செடி, கற்றாழை போன்றவை நேர்மறை ஆற்றல்களை அதிகம் வெளியிட கூடியவை. மேலும் எருக்கன் பூக்களை எல்லா வகையான கடவுளுக்கும் தாராளமாக மாலையாக கோர்த்து பயன்படுத்தலாம்.
எருக்கன் பூவில் அத்தகைய சக்திகள் உண்டு என்பதால் தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வந்தனர் சித்தர்கள். சித்தர்கள் எழுதிய நூல்களில் பல இடங்களில் எருக்கம் பூவைப் பற்றிய குறிப்புகளும் உண்டு எனவே எருக்கம் பூவை எடுக்க இனி பயப்பட தேவையில்லை, ஜாக்கிரதையாக அவ்விடத்திற்கு சென்று அதனை பறித்துக் கொண்டு வந்து நம் இல்லத்தில் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


முந்தைய ஆன்மீக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


வேலைவாய்ப்பு செய்திகள் 


சினிமா செய்திகள் 


தலைப்பு வாரியாக செய்திகள்