வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: city bus transport start after corona
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label city bus transport start after corona. Show all posts
Showing posts with label city bus transport start after corona. Show all posts

Saturday, May 30, 2020

சென்னையில் ஓட ரெடியாகும் பஸ்கள் | என்னென்ன கட்டுப்பாடுகள் | City Bus Transport will be start soon

சென்னை மாநகர பேருந்து தொழில்நுட்ப பணியாளர்களில் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சென்னையில், பேருந்து சேவைகள் துவங்க உள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சென்னை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர், கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள்: நமது மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 3554 பேருந்துகளில், அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படுகின்ற சுமார் 300 பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து பேருந்துகளும், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளதால், பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில், 1775 பேருந்துகளில், ஹெச்எஃப்சி மற்றும் எஃப் சி ஆகியவை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு உள்ளாக காலாவதி ஆகின்றன. எனவே மேற்கண்ட பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்து ஃபிட்னஸ் சான்றிதழ் வாங்க வேண்டி உள்ளதால், எம்டிசி (டபிள்யூ) எஃப்சி யூனிட்டுகள் மற்றும் ஆர்சி யூனிட்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள், இரண்டு நாளுக்கு ஒருமுறை 50% அடிப்படையில் உடனடியாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும், பணியாளர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நடை முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். 
  • முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் 
  • கை உறை கட்டாயம் அணிய வேண்டும் 
  • கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் 
  • கை சானிடைசர் பயன்படுத்த வேண்டும் 
  • தொழிற்கூடங்கள், பணி செய்யும் இடங்கள், கேன்டீன், ஓய்வு நேரக் காப்பாளர் அறை, மற்றும் பண்டக சாலைகளில் கட்டாயம் 3 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.