வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: runworldmedia
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label runworldmedia. Show all posts
Showing posts with label runworldmedia. Show all posts

Thursday, February 20, 2020

பெண் பயணிகளுடன் ‛கடலைபோட' பஸ் டிரைவர்களுக்கு தடை | Bus Drivers are getting warning to talk with Ladies Passengers

பேருந்தில் முன் பக்கம் அமரும் பெண் பயணிகளிடம் பேசிக்கொண்டே ஓட்டுவதற்கு டிரைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




பயணம் என்றாலே பஸ், ரயில் தான் பாதுகாப்பானது என்ற நிலையில், அப்படியான பஸ் பயணத்தையும் சில டிரைவர்களும், அவருடன் முன் பக்கம் அமர்ந்து பேச்சு கொடுத்து வருபவர்களும் பரலோகத்திற்கு செல்லும் பயணமாக மாற்றுகின்றனர்.


தொலைதூர பயணத்தில் டிரைவர் அசதியாக இருந்து தூங்கி விடக்கூடாது என்பதற்காக அவருடன் அவ்வப்போது பேச்சு கொடுத்து வரலாம். ஆனால், அதையே வசதியாக வைத்துக்கொண்டு பெண்களிடம் டிரைவர்கள் கடலை போட்டுக் கொண்டே வருவதால் வண்டியில் இருக்கும் மற்றவர்களின் நிலை அதோகதியாகி விடுகிறது.
 

பேச்சில் கவனம் செலுத்தும் டிரைவர்கள், ரோட்டில் கவனம் செலுத்தாமல் வண்டியை எங்கேயோ கவிழ்த்து விடுகின்றனர். பெண்களுடன் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள், பெண்கள் முன்னே தனது ஹீரோயிசத்தை வெளிக்காட்ட, மொத்த பயணிகளின் உயிரையும் பணயம் வைப்பது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. இதனால், பஸ்சின் உள்ளே இருக்கும் சில பயணிகள் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.


இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், நேற்று (பிப்.,19) சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பஸ்சின் முன் பக்கம் அமரும் பெண்களிடம், பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் பேசக்கூடாது.


அவ்வாறு விதியை மீறி நடக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண் இமைக்கும் நேரத்தில் கூட விபத்து நிகழும் என்பதால், டிரைவர்கள் கவனத்தை திசை திருப்பும் தேவையற்ற விஷயங்களை ஒதுக்கிவிடுவது நல்லது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, February 18, 2020

பொண்டாட்டிக்கு 4 பேரோட தொடர்பு.. சந்தேகப்பட்ட கணவர்.. "கம்" போட்டு ஒட்டி.. ஷாக்கடிக்கும் சம்பவம்! Wife Husband Crime News

இப்படி ஒரு கொடுமை எந்த ஊரிலும் நடந்திருக்குமான்னு தெரியலை. மனைவிக்கு ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகப்பட்ட கணவர், ஒரு சூப்பர் க்ளூ கம்மை வாங்கி மனைவியின் பிறப்புறுப்பில் ஒட்டி விட்டார். இதனால் வலியில் துடித்து அலறிய அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்துள்ளனர். 
 

அந்த கிறுக்குப் பிடிச்ச கணவரின் பெயர் டென்னிஸ் முமோ. 36 வயதாகிறது. இவருக்கு எப்பப் பார்த்தாலும் தன்னோட மனைவி மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார். குறிப்பாக நான்கு ஆண்களுடன் உறவு இருப்பதாக அவரே நினைத்துக் கொண்டார்.


இதனால் கோபமடைந்த அவர் என்ன செய்யலாம் என்று யோசித்தார். இந்த நிலையில்தான் ருவாண்டா நாட்டுக்கு ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது. தான் போய் விட்டால் மனைவி என்னவெல்லாம் செய்வாளோ என்று பயந்த அவரது குறுக்குப் புத்தி வேறு விதமாக யோசித்தது. விலை உயர்ந்த சூப்பர் க்ளூ கம்மை வாங்கினார். 

பின்னர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி கம்மை அவரது பிறப்புறுப்பில் தடவி ஒட்டி விட்டார். பின்னர் ருவாண்டா கிளம்பிப் போய் விட்டார். கம் ஒட்டப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளானார் முமோ மனைவி. சிறு நீர் கழிக்கக் கூட முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டார். வலியில் அலறித் துடித்த அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். 

டாக்டர்கள் அவருக்கு அவசரமாக சிகிச்சை அளித்து கம்மை அகற்றி நிவாரணம் அளித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முட்டாள் முமோவைக் கைது செய்தனர். தற்போது முமோ வேறு மார்க்கமாக தனது மனைவியை பழி வாங்கக் கிளம்பியுள்ளாராம். 

அதாவது அந்த நாட்டுச் சட்டப்படி கணவருக்கு தெரியாமல் மனைவியோ அல்லது மனைவிக்குத் தெரியாமல் கணவரோ தகாத உறவு வைத்திருந்தால் 100 சவுக்கடி தண்டனையாக தரப்படும். அந்த தண்டனையை தனது மனைவிக்குத் தர வேண்டும் என்று இப்போது அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் முமோ. இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளாராம். 
இதுதொடர்பாக முமோ கூறுகையில், அவளது செல்போன் மெசேஜ் எல்லாம் ஆண்களுக்கே போயுள்ளது. பல ஆண்களுக்கு தனது நிர்வாணப் படத்தையும் அனுப்பியுள்ளார். எனவே அவர் என்னை ஏமாற்றி விட்டார். துரோகம் செய்து விட்டார். அதனால்தான் நான் கம் ஒட்டினேன். நான் ருவாண்டோ செல்லவிருந்த சமயத்தில் சில ஆண்களை சந்தித்து ஜாலியாக இருக்க திட்டமிட்டிருந்தார். 

இதனால்தான் வேறு வழி தெரியாமல் கம்மை ஒட்டினேன் என்று கூறியுள்ளார் முமோ. அதுக்காக இப்படியாப்பா பண்ணுவ.. என்னவோ போங்கடா!!

Sunday, February 16, 2020

காஞ்சிபுரத்தில் தாய், மகள் இருவர் துாக்கிலிட்டு தற்கொலை | Suside at Kancheepuram

காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம், டோல்கேட் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சீதா, 65. இவரது மகள் தனலட்சுமி, 30. மகன் பாலாஜி, 28; தனியார் நிறுவன ஊழியர்; தனியாக வசிக்கிறார்.சீனிவாசன், சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். 

தாயும், மகளும் தனியாக வசித்தனர்.இருவரும், பல ஆண்டுகளாக தனிமையில் இருந்ததால், மன நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் பழகுவதும் இல்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டுக்கு சென்ற பாலாஜி, அம்மா, அக்காவை பார்த்து விட்டு, பணிக்கு சென்றார். மாலையில், வீட்டுக்குசென்றபோது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. 

இவரது தகவலையடுத்து வந்த விஷ்ணு காஞ்சி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தாய், மகள் என, இருவரும், துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.இறந்தவர்கள் சடலத்தை மீட்ட போலீசார், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

Friday, February 14, 2020

செஞ்சி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் ஒருவர் பலி | இருவர் படுகாயம் | Accident Near Gingee

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் எனுமிடத்தில் இன்று காலை (14.02.2020) சுமார் 8 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் டாட்டா ஏசிஇ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் டாட்டா ஏசிஇ ஓட்டுநர் அன்பு (28) பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தார்.



செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதூர் கிராமத்தைச் சார்ந்தவர் வியாபாரி சீனிவாசன் உடையார். இவரது மகன் அன்பு என்பவர் இன்று காலை ஆடு விற்பனை செய்வதற்காக  டாட்டா ஏசிஇ வாகனம் மூலம் சென்று வீடு திரும்பியபோது செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலம் எனுமிடத்தில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.


 


இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகேயுள்ள வயல்வெளியில் கழிந்தது. டாட்டா ஏசியில் சென்ற மூவரில் ஓட்டுநர் அன்பு உயிரிழந்தார். உடன் சென்ற ஓட்டுநரின் சகோதரர் அருணகிரி மற்றும் ஏகாம்பரம் ஆகியோருக்கு காலில் பலத்த எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டது.


எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.


விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 



Friday, January 24, 2020

உத்திரமேரூர் மருத்துவமனையில் நர்ஸ்களுக்கு உடைமாற்ற அறை வேண்டும் | Nurses Want Dress Change News in Uthiramerur Hospital


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் உடை மாற்ற தனி அறை இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக செவிலியர்கள் வேதனைபடுகின்றனர்.



உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அரசு மருத்துவமனை, 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் இயங்கி வருகிறது. இங்கு, எட்டு செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினமும், 500 முதல் 700 நோயாளிகள் வந்து செல்கின்றனர்

இந்த மருத்துவமனையில்  உள் நோயாளிகள், புற நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு என  தனித்தனி கழிப்பறை வசதி உள்ளது. ஆனால், செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கு என  தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும், செவிலியர்கள் உடை மாற்றும் அறையும் இல்லை.
இதனால், பிரசவ வார்டில் செவிலியர்கள் உடைமாற்றி வருவதாகவும், அப்போது, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மார்களையும், பிறந்த குழந்தையையும் பார்க்க  ஆண்கள் யாராவது உள்ளே வந்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனே அவர்கள் உடையை மாற்றுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.  

எனவே, செவிலியர்கள் உடை மாற்றவும், ஊழியர்களுக்கும் என  தனி கழிப்பறையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.