வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 17, 2019

நீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா?.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா (60). இவர் நேற்று சோள கதிர்களை ஏற்றும் லாரியின் அருகே நின்றுக் கொண்டிருந்தார். 
அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று இவரது கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் காலாவுக்கு பாம்பு மேல் ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாம்பை அலேக்காக பிடித்த காலா அந்த பாம்பை திருப்பி கடித்துள்ளார்.


மருத்துவமனை 
 கடும் ஆத்திரத்தில் கடித்ததால் அந்த பாம்பு இறந்துவிட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


பலி 
 அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கடைசியில் பாம்பினுடைய விஷம் கடுமையாக ஏறியதால் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி காலா உயிரிழந்தார்.

சிகிச்சை 
 இதையடுத்து அஜன்வா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கையிலும், முகத்திலும் பாம்பு கடித்தபோதே அவர் மருத்துவமனைக்கு வந்திருந்தால் ஏதேனும் சிகிச்சை அளித்து காப்பாற்ற முயற்சித்திருக்கலாம்.


உதாரணம் 
ஆனால் பாம்பையும் அவர் கடித்ததால் அதிலும் கோபத்தில் கடித்ததால் விஷம் எளிதில் ரத்தத்துடன் கலந்து விட்டது. மிருகங்களிடம் கோபத்தை காட்டினால் என்ன நடக்கும் என்பதற்கு காலாதான் உதாரணம்.


கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்.. என்ன ஆடைன்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க! l

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு திருமணமாகிவிட்டது. மனைவி அந்த மாநிலத்தில் போலீஸில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 
இந்த நிலையில் ஜிதேந்திர ராய்க்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சங்கீதா மீதிருந்த மயக்கத்தால் மனைவியை பிரிந்து விட்டு அவருடனேயே வாழ ராய் முடிவு செய்தார்.


சங்கீதா 
 ஆனால் வாழ்வதற்கு தேவையான பணத்துக்கு எங்கே போவது என்பது குறித்து ஜிதேந்திர ராய் யோசனை செய்தார். அப்போது அவருக்கு வித்தியாசமான யோசனை வந்தது. அதாவது மனைவியின் போலீஸ் சீருடையை திருடி சங்கீதாவுக்கு கொடுத்துவிட்டார்.


வாழ்க்கை 
 அத்தோடு விட்டாரா இந்த ஜிதேந்திர ராய், சங்கீதாவுக்கு போலி அடையாள அட்டைகளையும் ரெடி செய்து கொடுத்துவிட்டார். இதை பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்து இவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.

போலி சான்றிதழ்  
இதுகுறித்து மனைவிக்கு தெரியவந்தது. பின்னர் அவர் சங்கீதா மக்களை ஏமாற்றி பணம் பறித்த போது கையும் களவுமாக பிடித்தார். அப்படியே இதற்கு காரணமான ஜிதேந்திர ராயையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜிதேந்திர ராய்
கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவியின் டிரஸ்ஸை திருடி கொடுத்த சம்பவம் பெரும் சிரிப்பை வரவழைக்கிறது.மேலும் மனைவியின் உடையும் கள்ளக்காதலியின் உடையும் ஒரே அளவாக இருந்தது ஜிதேந்திர ராய்க்கு கிடைத்த லக் என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.


கட்டழகில் கவிழ்ந்த நகைக்கடை உரிமையாளர்! சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய இளம் பெண்! என்ன செய்தார் தெரியுமா? | Run World Media

திருச்சி மாவட்டம் முசிறி அருகில் இரண்டு பெண்கள் இருவர் தனியாக சந்தேகத்திற்க்கு இணையாக நடப்பதை கவனித்த போலீசார் அவர்களை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முசிறியில் காவல் துறை அருகில் சந்தோஷ் குமார் பல ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார், சில தினக்களுக்கு முன்னதாக அந்த கடையில் நகை வாங்க சென்ற இரண்டு பெண்கள், பின்னர் கடைக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகபடும் படியாக நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் தான், அவர்கள் இருவரும் ஜான்சி ராணி மற்றும் சாந்தி என தெரிய வந்தது மேலும் பெண் போலீசார் அவர்களை சோதித்த போது உடையில் 15 செட் வெள்ளி கொலுசுகள் மறைத்து வைக்கபட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. திடுக்கிட்ட போலீசார் , அருகில் இருந்த சந்தோஷிடம் நடந்த சம்பசத்தை கூறிய பின்னர் தான் திருட்டு நடந்ததை உணர்கிறார்.

மேலும் கைடயின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கட்டழகு பெண் ஒருவர் பேச்சு கொடுக்க, அதில் மயங்கிய நகைக்கடை உரிமையாளர் மற்றொரு பெண் கொலுசுகளை திருடியதை கவனிக்கவில்லை. அவர், மேலும் திருடப்பட்ட பொருட்களின் மொத்த விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கடைக்கு வாடிக்கையாளராக வந்த இளம் பெண் அழகாக இருந்ததால் கவனம் தடுமாறிய சந்தோஷ்க்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது இந்த திருட்டு சம்பவம்.


http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Sunday, July 14, 2019

அக்கா.. எங்களை விட்டுடுக்கா.. போட்றா முட்டியை.. செயின் பறித்த 2 பேருக்கு பெண்கள் தர்ம அடி

"முட்டி போடு.. முட்டி போடுங்கடா.. செயின் அறுக்கும்போது உயிர் போயிடுச்சுன்னா எங்கிருந்துடா வரும்? உங்களுக்கு சொந்தமா சம்பாதிச்சு சாப்பிட தெரியாதா" என்று செயின் பறிக்க முயன்ற 2 இளைஞர்களை பெண்கள் வெளுத்து எடுத்துள்ளனர்.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் போட்டிருக்கவும் முகம் சரியாக தெரியவில்லை. 
 தெய்வானையிடம் வண்டியை ஸ்லோ செய்த அவர்கள், அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர்.






இளைஞர்கள்
5 சவரன் செயின் என்பதால் அதை அவர்களால் பறிக்க முடியவில்லை. ஆனல் இதற்குள் தெய்வானை திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். இந்த சத்தத்தை கேட்டதும் அந்த பகுதி மக்கள் இரு இளைஞர்களையும் பின்னாடியே துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.


போடு முட்டியை 
 பிறகு அவர்களின் கைகளை பின்புறமாக கயிற்றால் கட்டி தர்ம அடி கொடுத்தனர். "யாருடா நீங்க.. எங்கிருந்து வர்றீங்க.. முட்டி போடு.. முட்டி போடு" என்று அங்கிருந்தோர் சொன்னார்கள். அதற்கு இளைஞர்கள், தண்டையார்பேட்டை என்றனர்.




வெளுத்தார் 
உடனே தெய்வானை கொதித்து போய் விட்டார்."ஏன்டா.. தண்டையார்பேட்டையில இருந்து இங்கே எதுக்கு வர்றீங்க.. செயின் அறுக்கும்போது உயிர் போயிடுச்சுன்னா எங்கிருந்துடா வரும்? முட்டி போடு... போட்றா முட்டியை..


இவங்களை கட்டி போடுங்க.. உங்களுக்கு சொந்தமா சம்பாதிச்சு சாப்பிட தெரியாதா" என்று சொல்லி இருவரையும் வெளுத்து எடுத்தார்.



அழுதனர் 
 "அக்கா.. எங்களை விட்டுடுங்க.." என்று இருவரும் கெஞ்சி அழுதார்கள். அதற்குள் மீஞ்சூர் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுக்கவே, விரைந்து வந்தனர். தெருவில் முட்டி போட்டுக் கொண்டிருந்த 2 மாணவர்களையும் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.




செலவுக்கு காசு 
 விசாரணையில், தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், பிரசாந்த் என்பதும், இவர்கள் 2 பேருமே கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் செலவுக்கு காசு இல்லையாம்.. அதனால் தான் செயின் பறிக்க முயற்சித்தோம் என்று போலீசாரிடம் சொல்லினர். இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடக்கிறது

Saturday, July 13, 2019

ஆபீஸில் லட்சுமியுடன் செம ஜாலி.. ரெய்டு வந்த போலீஸ்.. கூரை மேல் பதுக்கி வைத்ததால் களேபரம்! | Run World Media

போலீசை பார்த்ததும் லட்சுமியை கூரை மேலே ஏத்தி கொண்டு போய் பதுக்கி வைச்சிட்டார் இந்த அரசு அதிகாரி. இது சம்பந்தப்பட்ட செய்திகளும் போட்டோக்களும்தான் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன.


தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்ப்பவர் மாணிக்கியாராவ்.

 ராத்திரி நேரம் ஆகி விட்டால், ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில் மாணிக்கியாராவ் பெண்களுடன் ஜாலியாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.




செய்தியாளர்கள் 
 அதன்படி அதிரடியாக களம் இறங்கி, கையும் களவுமாக அதிகாரியை பிடிக்க போலீசார் திட்டம் போட்டனர். இதற்காக செய்தியாளர்களுடன் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்கு ராத்திரி நேரத்தில் சென்றனர்.
 லட்சுமி  
 அந்த சமயத்தில் மாணிக்கியாராவ் ரொம்ப பிஸியாக இருந்திருக்கிறார். ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை செய்யும் லட்சுமியை தன் ஆபீசுக்கு வரவழைத்து, உல்லாசத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.


 பதுக்கி வைத்தார் 
பதுக்கி வைத்தார் அப்போது, போலீசையும், செய்தியாளர்களையும் பார்த்துவிட்ட அதிகாரிக்கு ஒரு செகண்ட் ஒன்றுமே புரியவில்லை. பதட்டமடைந்த அதிகாரி, லட்சுமியை தன் அலுவலக கட்டிடத்தின் மேல் ஏற்றி, அங்கேயே பதுக்கியும் வைத்தார்.


 நடவடிக்கை 
 போலீசார் விடுவார்களா என்ன.. பில்டிங் மேலே ஏறி போய் தேடி பார்த்து, பதுங்கி கிடந்த லட்சுமியை கீழே இறக்கி அழைத்து வந்தனர்.


 நடந்த சம்பவம் பற்றி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவலும் அளித்தனர். சம்பவங்கள் அனைத்தையும் செய்தியாளர் படம் பிடித்தனர். வசமாக மாட்டிக் கொண்ட மாணிக்கியாராவ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே

"சார்.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க.. அவசரத்துல போய்ட்டு இருக்கிறவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்களா?" என்று கேட்டு 2 பேர் நடுரோட்டில் உருண்டு புரண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

 கோவை சாய்பாபாகோவில் பகுதி ரொம்பவும் டிராபிக்கான பகுதி. வாகனங்கள் ஏராளமாக சென்று கொண்டிருக்கும். இங்கு எந்நேரமும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவார்கள். 
அப்படித்தான் வழக்கமான டியூட்டியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் 2 பேருமே ஹெல்மெட் போடவில்லை




மதுபோதை 
ரத்தினபுரியை சேர்ந்த ஏசி மெக்கானிக் பழனி, பரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர்தான் பைக்கில் வந்தவர்கள். அந்த பைக் வரும்போதே தாறுமாறாக வந்தது. இருவரும் தண்ணி அடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் வண்டியை நிறுத்தினர் டிராபிக் போலீசார்.


ஐயா சாமி.. 
ஆனால் தங்களது வண்டியை நிறுத்தியதற்கும், சோதனையிடுவதற்கும் 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு நடுரோட்டில் போய் தரையில் உருண்டனர். அதில் ஒருவர் எழுந்து வந்து போலீசார் அருகில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்.


கேட்டீங்களா
 "வீடியோ எடுங்க.. என் கழுத்தை நெறிங்க.. ஐயா சாமி.. இவங்க டிராபிக்கை மதிக்கிறவங்க. அவசரத்துல போய்ட்டு இருக்கவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்க? எல்லாரையுமே செக் பண்ணனும்.

நான் சொன்னேனா இல்லையா.. செக் பண்ணிட்டு விட்டுடுங்கன்னு.. கேட்டீங்களா.. நாளைக்கு இது பேப்பர்ல வரணும்" என்று சொல்லிவிட்டு திரும்பவும் நடுரோட்டில் போய் படுத்து உருண்டார்.
வீடியோ 
 இப்படி படுத்து புரண்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போயின. சில வாகனங்கள் இவர்களை சுற்றி வந்து சென்று போயின. பிறகு ஒரு சிலர் அங்கிருந்த போலீசாரிடம், "எல்லாம் மப்புதான்.. இவங்கள போய் பிடிச்சு வெச்சிருக்கீங்க.. விடுங்க" என்று சொல்லிக் கொண்டே சென்றனர்.

 அவ்வளவு டிராபிக் இருந்தும், நடுரோட்டில் ரெண்டு பேரும் படுத்து புரளும் இந்த வீடியோதான் வைரலாகிறது.


திருமணம் நிச்சயமான பின்னும் அடுத்தவன் கூட பேசுவதா - காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் பிற ஆண்களுடன் செல்போனில் சாட்டிங் செய்வதை பிடிக்காமல் சந்தேகத்தில் பெட்ரோல் ஊற்றி அந்த பெண்ணையே எரித்து கொலை செய்து விட்டான்.

தெற்கு உக்ரேனில் ஜப்ரோசியா நகரத்தில் இதயத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எரித்துக்கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் அனஸ்தேஸியா என்பதாகும். இவர் விட்டாலி சைக்கோஸ்வ்சை என்ற நபரை காதலித்தார்.
இருவருக்கும் பெற்றோர் ஆசியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. காதலி மீது ஆரம்பத்தில் இருந்தே விட்டாலிக்கு சந்தேகம் இருந்தது. காரணம் அனஸ்தேஸியா தன்னைத்தவிர பிற ஆண்களுடன் பேசுவதை விட்டாலி விரும்பவில்லை. 
பொறாமை ஒரு பக்கம், சந்தேகம் மறுபக்கம் என ஆட்டிப்படைக்க அழகான அந்த இளம் பெண்ணை எரித்து கொலை செய்து விட்டு இப்போது சிறைக்கு போயிருக்கிறான் விட்டாலி.


காதலி மீது சந்தேகம் 
அனஸ்தேஸியா ஜாலியான பெண். அவருக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவ்வப்போது தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். பொறுத்து பொறுத்து பார்த்த விட்டாலி, ஜூலை 2ஆம் தேதி அனஸ்தேஸியாவை ஒரு அபார்ட்மெண்டிற்கு வரவழைத்தார். பேசிப்பார்த்தார் விட்டாலி, ஆனால் அனஸ்தேஸியா தனது வருங்கால கணவர் விட்டாலியை சமாதானம் செய்ய முயன்றார்.

பெண் எரித்துக்கொலை 
 பேசிக்கொண்டிருக்கும் போதே கோபத்தோடு அபார்ட்மெண்ட்டை விட்டு வெளியே வந்த விட்டாலி விடு விடு வென வெளியே போய் பெட்ரோல் பங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலை பாட்டிலில் வாங்கினார். 

அனஸ்தேஸியா இருந்த அபார்ட்மெண்ட்டிற்கு மீண்டும் வந்த விட்டாலி, தனது வருங்கால மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அனஸ்தேஸியா உடல் முழுவதும் எரிந்தது. தன்னை காப்பாற்றுங்கள் என்று கத்தி கதறினார். இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். போலீசிற்கு தகவல் அளித்தனர்.


தீயில் கருகி பலி 
 சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 90 சதவிகித தீக்காயங்களுடன் கருகிய நிலையில் இருந்த அனஸ்தேஸியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அனஸ்தேஸியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டாலியை காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டதைத் தவிர அந்தப்பெண் வேறொரு பாவமும் செய்யவில்லை.


கொலையாளி கைது
பெட்ரோல் நாற்றத்துடன் கையில் காயங்களுடன் இருந்த விட்டாலியை கைது செய்தனர். காதலியை எரித்தது ஏன் என்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த விட்டாலி, தான் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பிற ஆண்களுடன் பேசுவதை அவள் நிறுத்தவில்லை அந்த எரிச்சலில் கொலை செய்தேன் என்று கூறியுள்ளான்.

அதிகரித்த சந்தேகம்
அனஸ்தேஸியாவின் தோழிகள் இந்த கொடுர சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அழகான 22 வயதேயான இளம் பெண்ணிற்கு இப்படி கொடூரம் நடந்திருக்கக் கூடாது என்று ஆதங்கப்படுகின்றனர்.


 விட்டாலியை காதலிக்கும் போதும் சரி திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின்னரும் சரி நாளுக்கு நாள் விட்டாலிக்கு சந்தேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அனஸ்தேஸியாவின் செல்போனை எடுத்து அவர் யாருடன் சாட் செய்திருக்கிறாள் என்று ஆராய்வதே வேலையாக வைத்திருந்தான்.


சந்தேகத்தில் கொலை
நாளுக்கு நாள் சந்தேகப்பேய் ஆட்டிவைக்க, அழகான அந்தப்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து சண்டை போட்டிருக்கிறான். அந்தப் பெண் சமாதானம் செய்ய முயன்றும் அதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் கடைசியில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டான் அந்த கொடூரன்.


கொலையாளிக்கு சிறை 
 நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த போது கூட அதற்காக அவன் வருந்தவில்லை. அவளை காயப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துள்ளான். கடைசியில் அவள் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாகிப் போனாள். 

விட்டாலி போல ஒரு சந்தேகப்பேயை திருமணம் செய்து கொண்டு தினம் தினம் சாவதை விட ஒரே நாளில் எரிந்து செத்துப்போனாள் அந்த இளம் பெண். விட்டாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.