ராக்கி சாவந்த் சாக்கடையில் கிடக்கும் பன்றி என்று நடிகை தனுஸ்ரீ 
தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும், தனுஸ்ரீ தத்தாவுக்கும் இடையே சண்டை 
நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து பேட்டி 
அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ராக்கி சாவந்தை பன்றி என்று விமர்சித்துள்ளார் தனுஸ்ரீ. இது 
குறித்து அவர் கூறியிருப்பதாவது,
   
  
பன்றி 
ராக்கி சாவந்த், நான் உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் எதை 
வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் 
விட்டுவிடுவேன். உங்களுடன் சண்டை போடுவது சாக்கடையில் இருக்கும் பன்றியுடன்
 மோதுவது போன்று உணர்கிறேன். பன்றிக்கு சாக்கடையை அள்ளி தன் மீது போட 
மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் அப்படித் தான் உள்ளது.
ராக்கி 
வளர்ந்து வரும் நடிகைகள் தான் மீ டூ புகார் தெரிவிப்பதாக கூறி ராக்கி 
கிண்டல் செய்துள்ளார். நீங்கள் யார் ராக்கி? நீங்களே சினிமாவில் ஒரு இடத்தை
 பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் தேவையில்லாமல் பேசுவதை 
நிறுத்தவும்.(தொடர்ச்சி கீழே...)
வங்கி
ராக்கி சாவந்த் தனது சொத்துக்களை வங்கிகளில் அடமானம் வைத்துள்ளதாக எனக்கு 
தகவல் கிடைத்துள்ளது. பண விஷயத்தில் அவரை சிலர் ஏமாற்றியுள்ளனர். உங்களிடம்
 பணமே இல்லை. அமெரிக்க விசாவும் ரத்தாகிவிட்டது. உங்களால் தற்போது 
அமெரிக்காவில் எங்கும் வேலை செய்ய முடியாது.
வருத்தம் 
ராக்கி சாவந்த், நான் உங்களை வெறுக்கவில்லை. நீங்கள் தவறான வழியில் 
செல்கிறீர்களே என்ற வருத்தம் தான் அதிகமாக உள்ளது என்று தனுஸ்ரீ தத்தா 
தெரிவித்துள்ளார். தனுஸ்ரீ தன்னை பன்றி என்றதால் அவரை கொழுத்த அசிங்கமான 
எருமைமாடு என்று விமர்சித்துள்ளார் ராக்கி சாவந்த் என்பது 
குறிப்பிடத்தக்கது.
 

No comments:
Post a Comment