Run World Media: கணவர்களிடம் மறைத்த பரம ரகசியங்கள் - மனைவியர் கூறும் அதிர்ச்சி வாக்கு மூலம்!

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 3, 2018

கணவர்களிடம் மறைத்த பரம ரகசியங்கள் - மனைவியர் கூறும் அதிர்ச்சி வாக்கு மூலம்!கணவன் மனைவி உறவில் இருக்கும் பாலத்தை பலமாக்குவதே அவர்கள் இருவர் மத்தியில் இருக்கும் நம்பிக்கை தான். எந்த ஒரு உறவில் நம்பிக்கை இழக்கப்படுகிறதோ, அல்ல சந்தேகம் அதிகரிக்கிறதோ, அந்த உறவு பாலத்தில் விரிசல் அதிகரிக்க துவங்கும்.

ஒருவரை சங்கடத்திற்கு ஆளாக்கும் உண்மையை விட, சிரிக்க வைக்கும் பொய் மேலானது என்பார்கள். அதே போல, சில சமயம் உறவில் நிலைத்திருக்கும் அந்த நம்பிக்கை பாலத்தின் பலத்தை சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள சில உண்மைகளை மறைப்பது தவறில்லை. தெரியாமல் நடந்த தவறை மறைப்பது வேறு, தொடர்ந்து செய்யும் துரோகம் என்பது வேறு. அவ்வகையில், தாங்கள் கணவரிடம் மறைத்த / மறைத்து வரும் பரம இரகசியங்களை குறித்து மனைவியர் கூறும் அதிர்ச்சி வாக்கு மூலங்கள்...
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
#1
 தண்டனை பெற்று சிறை வாசத்தில் இருந்து வரும், என் முன்னாள் காதலனுக்கு நான் இன்னும் கடிதங்கள் எழுதி வருகிறேன். இதுக்குறித்து என் கணவர் ஒருபோதும் அறிந்ததில்லை.

#2
 நானும் என் தோழியும் மிகவும் நேசித்து வந்தோம். உண்மையில் எங்கள் இருவருக்கும் நடுவே பெரும் காதல் இருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்கு முன் அவள் இறந்துவிட்டால். என் கணவருக்கு இதுக்குறித் து எதுவும் தெரியாது.


#3 
விபத்துக்குள்ளாக கருக் கலைந்துவிட்டது என்று கணவரிடம் கூறினேன். ஆனால், நானாக தான் கருக்கலைப்பு செய்துக் கொண்டேன். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள உடல் அளவில், மனதளவில் எனக்கு தைரியமும், வலிமையும் இல்லை. இதை என் கணவர் புரிந்துக் கொள்ளவில்லை. ஆகையால், பொய் கூறி கருக்கலைப்பு செய்துக் கொண்டேன்.

#4
 ஆன்மீகம் என்பதை தாண்டி எனக்கு மாய, தந்திர விஷயங்கள், தகடு, மாந்திரீகம், வசியம் போன்ற விஷயங்களில் அதீத ஈடுபாடும், நாட்டமும் உண்டு. சிலமுறை இவற்றை நான் பயிற்சி செய்து பார்த்ததும் உண்டு. இதுக்குறித்து என் கணவர் இதுவரையிலும் அறிந்ததில்லை.


#5
 என் கணவருக்கு தெரியாமல் இதுவரை ஐந்து இலட்ச ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளேன். என்னிடம் இவ்வளவு சேமிப்பு இருக்கிறது. இதை பெரும் தவறாக நான் கருதவில்லை. என் சேமிப்பி நிச்சயம் தேவையான சமயத்தில் நல்வழியில் உதவும் என்றே நினைக்கிறேன்.

#6
 என் கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவர் செலவுக்கு அனுப்பும் பணத்தில் இருந்தே பெரும் சேமிப்பு செய்ய இயல்கிறது. அவரது பணத்தில் இருந்து நான் சேமித்த பணம் போக, என் அப்பா சொத்தில் இருந்து கிடைத்த பணத்தையும் சேர்ந்து மூன்று மாடி அடுக்கு குடியிருப்பு வீடு ஒன்றை என் பெயரில் வாங்கி வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் அவரிடம் சர்ப்ரைசாக கூறலாம் என்று தான் நினைத்தேன். ஆனால், ஒருமுறை அவருக்கு வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பு குறித்து அறிய வந்ததால், கடைசியில் அவருக்கு தெரியாமல் வாங்கிவிட்டேன். இப்போது அவர் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினாலும். ஏனோ, அவர் மீது அந்த பழைய நம்பிக்கை வரவில்லை.


#7
 திருமணத்திற்கு முன் ஒரே ஒருமுறை போதை உட்கொண்டிருக்கிறேன். கல்லூரிக் காலத்தில் சுவாரஸ்யமாக நினைத்து ஈடுபட்ட காரியம் அது. ஆனால், அதுக்குறித்து நான் கணவரிடம் இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட கூறியது இல்லை.

#8 
 நான் என் கணவருக்கு தெரியாமல் ஃபேக் அக்கவுண்ட் மூலம் சமூக தளங்களில் இயங்கி வருகிறேன். இதுநாள் வரை என் கணவர் இதுக்குறித்து எதுவும் கண்டுபிடித்தது இல்லை. அதில் எனக்கு நிறைய தோழர்கள் இருக்கிறார்கள்.


#9
 என் கணவரின் கள்ள உறவு குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னால் முடிந்த வரை அவருக்கான தகுந்த தண்டனை அளித்துவிட்டு, பிறகு, உறவில் இருந்து விலகலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்.

#10 
என் கணவரின் நண்பர் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்துக் கொள்ள முயன்றார். பிறகு, தெரியாமல் இப்படி நடந்துக் கொண்டேன், என்னை மன்னித்துவிடு என்று கெஞ்சினார். அவர்களது நீண்ட கால நட்பை மதித்து நான் இதுநாள் வரை அந்த சம்பவம் குறித்து என் கணவரிடம் எதுவும் கூறவில்லை.


#11
 திருமணம் செய்துக் கொள்ளும் போது, எனக்கு அவரிடம் எந்த ஈர்ப்பும், விருப்பமும் இல்லை. வெறுமென பெற்றோர் தூண்டுதல் காரணத்தால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த விஷயம் அவருக்கு தெரியாது. ஆனால், இன்று அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

#12
 எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் ஆசை. ஆனால், என் கணவருக்கு அதில் இஷ்டம் இல்லை. ஆகையால், அவருக்கு தெரியாமல் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டேன்.


#13
 நான் திருமணத்திற்கு முன்பே ஒரு காதல் உறவில் இருந்தேன். அப்போது, காதல் ஆசையில் எல்லை மீறி நடந்துக் கொண்டிருந்தேன். ஆனால், பெற்றோர் எதிர்ப்பால் அந்த காதல் பிரிவில் முடிந்தது. நான் காதலித்ததோ, அந்த காதல் உறவில் இருந்த போது உடலுறவில் ஈடுப்பட்டது குறித்தோ என் கணவருக்கு எதுவும் தெரியாது.

#14
 என் முன்னாள் காதலன் மிரட்டியதன் காரணமாக ஒருமுறை என் தங்க மோதிரத்தை அவனிடம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஆனால், கணவரிடம் மோதிரம் தொலைந்துவிட்டது என்று பொய் கூறினேன்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்