வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்க.... டிசம்பர் 28ம் தேதி 'பேட்ட' டிரைலர்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 26, 2018

ரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்க.... டிசம்பர் 28ம் தேதி 'பேட்ட' டிரைலர்!

ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28 தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. பேட்ட படத்தின் புரோமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. 

இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினி பிறந்தநாளை யொட்டி வெளியாக டீசர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment