Run World Media: மகளை எரித்து கொன்று.. சாம்பலை நீரில் கரைத்த பெற்றோர்..

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

மகளை எரித்து கொன்று.. சாம்பலை நீரில் கரைத்த பெற்றோர்..காதல் திருமணம் செய்துகொண்ட மகளை புருஷனிடமிருந்து பிரித்து இழுத்து வந்ததோடு மட்டுமல்லாமல், அவரை அடித்து கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்துள்ளனர் இந்த பெற்றோர்! தமிழகத்தை போலவே ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் இடங்களில் தெலங்கானாவும் ஒன்றாகி வருகிறது.

 
2 மாதங்களுக்கு முன்பு கூட தெலங்கானாவில் அம்ருதா என்பவர் காதல் திருமணம் செய்ததால், கூலிப்படையினரால் அவரது கணவரை நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அதேபோல இப்போதும் ஒரு ஆணவ கொலை நடந்துள்ளது. மஞ்சிரியாலா மாவட்டத்திலுள்ள ஜன்னாரம் மண்டலம் தலமடுகு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த அனுராதா, லட்சுமி ராஜன் ஆகியோர் 2 வருஷங்களாக காதலித்து வந்தனர். வீட்டுக்கு இந்த விஷயம் தெரியவந்தது. ரெண்டு பேருமே வேற வேற சாதி என்பதால் காதலை ஏற்கவில்லை. அதோடு, அனுராதாவை மிரட்டி, 2 மாதங்களுக்கு முன்பு, காதலன் லக்ஷ்மி ராஜன் மீது ஜன்னாரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க செய்தனர்.

அட்வைஸ்  
இந்த புகாரின் பேரில் போலீசார் அனுராதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அனுராதாவை காதலனிடமிருந்து பிரிக்க இப்படி ஒரு பொய் புகாரை மிரட்டி தர சொல்லி இருக்கிறார்கள் என்பதை போலீசார் கண்டு கொண்டனர். இதனால் போலீசார் அனுராதாவின் பெற்றோரை கூப்பிட்டு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தார்கள்.

முறைப்படி திருமணம்  
எப்படியும் காதலுக்கு வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, கடந்த 3-ம் தேதி காதலர்கள் இருவரும் ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜத்தில் இந்து முறைப்படி இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தவிஷயம் அனுராதா வீட்டுக்கு தெரியவந்தது.

அடித்து உதைத்தனர்  
உடனே அனுராதாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அனுராதாவை அடித்து அங்கிருந்து வீட்டுக்கு இழுத்து வந்து சரமாரியாக அடித்து வெளுக்க ஆரம்பித்தனர். விஷயம் ஊருக்குள் பரவி கிராம மக்களும் விரைந்து வந்து, பெற்றோரிடம் மகளை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார்கள். கிராம மக்கள் பேசுவதும், கெஞ்சுவதும் பெற்றோர் காதில் ஏறவே இல்லை.

பெட்ரோல் ஊற்றினர்  
ஒரு கட்டத்தில் அடி, உதை தாங்காமல் அனுராதா நேற்றிரவு உயிரிழந்துவிட்டார். அப்போதும் அவர்கள் மனம் கரையவில்லை. உடனே மகளின் உடலை ஒரு சாக்குப்பையில் மூட்டைகட்டி அருகிலுள்ள வயலுக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கு குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து சாக்கு பையோடு அனுராதா உடலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். அப்போதும் அவர்கள் அடங்கவில்லை.

சாம்பலை கரைத்தனர்  
அனுராதாவின் உடல் எரியும் வரை அங்கேயே நின்றனர். கடைசியில் அவரது சாம்பலை எடுத்துகொண்டு போய் அருகில் இருக்கும் நீர் நிலையில் கரைத்து வீட்டுக்கு சென்று விட்டனர். இது சம்பந்தமான தகவல் கிடைத்ததும்ஜன்னாரம் போலீசார் விரைந்து சென்று அனுராதாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவருடைய பெற்றோர், சகோதரர் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணை 
இதைதவிர, "தங்களுக்கு கொலை மிரட்டலை பெற்றோர் விடுப்பதாகவும், தங்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் தனது பெற்றோரே காரணம்" என்றும் அனுராதா இறப்பதற்கு முன் வீடியோவும் வெளியிட்டுள்ளதால், வலுவான இந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைதானவர்களிடம் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே பிரணய், அம்ருதா தம்பதி ஆணவ கொலையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஆணவ கொலையை கண்டு தெலுங்கானா மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்