வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நாகப்பாம்பை பைக்கில் வைத்து 90 கி.மீட்டர் கொண்டு வந்த நபரால் பரபரப்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

நாகப்பாம்பை பைக்கில் வைத்து 90 கி.மீட்டர் கொண்டு வந்த நபரால் பரபரப்பு



நாகப்பாம்பை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஒருவர் நுழைந்ததை பார்த்ததும் எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

 
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வாட்ச் மேனாக உள்ளார். 2 நாளுக்கு முன்னாடி, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அப்போது ரோடில் ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. இதைப்பார்த்ததும் சுரேந்திரன் ஷாக் ஆனார். பிறகு அப்படியே கடந்து செல்ல அவருக்கு மனசே வரவில்லை.
90 கி.மீ. தூரம் 
அதனால் பைக்கை விட்டு கீழே இறங்கி வந்து, அந்த பாம்பை லபக்கென லாவகமாக பிடித்து கொண்டார். பிறகு ஒரு பையை எடுத்து, அந்த பாம்பை உள்ளே போட்டுவிட்டு, அதனை பைக்கில் மாட்டிக் கொண்டு கிளம்பினார். இப்படியே 90 கி.மீ. தூரம் போனார்.


அலறினர் 
பின்னர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு பாம்பை கொண்டு வந்தார். பாம்பை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அலறினார்கள். அங்கு டாக்டர் அசோகன் பாம்பை பரிசோதனை செய்து பார்த்தார்.
கண் தெரியவில்லை 
அப்போது, பாம்புக்கு 2 கண்களும் தெரியவில்லை என்றும், இரை கிடைக்காமல் சோர்ந்திருப்பதாகவும் டாக்டர் சொன்னார். பின்னர் சத்தியமங்கலம் தனியார் கண் மருத்துவமனை டாக்டரின் ஆலோசனையின் படி பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் பாம்புக்கு கண் தெரியும் என்று சொல்லப்படுகிறது.


குவிகிறது பாராட்டு  
பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்கிறபோது, பாம்பை பார்த்ததும் ஒதுங்கி போய்விடாமல் அதனை பையில் எடுத்து கொண்டு 90 கி.மீட்டருக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த சுரேந்திரனின் இந்த செயலுக்கு வனத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment