வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 19, 2018

தாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்!



தாயின் திவசத்துக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும் தந்தவர் யார் தெரியுமா? 2 தினங்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 


பெற்ற தாயின் நினைவு நாளை மகன் கொண்டாடும் வீடியோதான் அது. ஒரு டேபிள் மீது கோழி பிரியாணி பொட்டலங்கள் வரிசையாக வைக்க, அதன் அருகே குவார்ட்டர் பாட்டில்கள் குவிக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 
குழப்ப உணர்வு  
தன் வீட்டுக்கு வந்திருந்த ஆட்களின் பெயர்களை ஒவ்வொருவராக சொல்லி அந்த மகன் அழைக்க, அவர்களும் வந்து கோழி பிரியாணியையும், குவார்ட்டரையும் பெற்றுக் கொண்டு போகிறார்கள். இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு ஒரு புறம் சிரிப்பு, மற்றொரு புறம் கோபம், இன்னொரு புறம் குழப்பம் என எத்தனையோவித உணர்வுகள் வந்து போயின.


குவார்ட்டரா? 
முதலில் தாயின் நினைவு நாளை அனுசரிக்காமல், கொண்டாடுவார்களா? என்பதுதான் முதல் சந்தேகம். இரண்டாவது, திவசத்தின்போது அன்னதானம் தராமல், இப்படி யாராவது குவார்ட்டரை தருவார்களா என்பது அடுத்த சந்தேகம். இவர் என்ற யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை என்றாலும் தற்போது வெளியாகி உள்ளது. இவர் பெயர் அந்தோணி. புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியை சார்ந்தவர்.

புதுச்சேரி  
இவருக்கு அவருடைய அம்மா என்றால் அவ்வளவு இஷ்டமாம். தன்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு வளர்த்து, ஒரு அரசு வேலையில் சேர்த்து விட்டதே அம்மாதானாம். அந்தோணி இப்போது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மைய உதவியாளராக பணி புரிந்து வருகிறாராம். அதனால்தான் அம்மாவின் திவசத்துக்கு அன்னதானம் வழங்க முடிவெடுத்து குவார்ட்டரும் கோழிப் பிரியாணியும் தந்துள்ளார்.


வறுமை கோடு 
கிட்டத்தட்ட 500 பேருக்கு இதனை வினியோகித்துள்ளார். பிரியாணி, குவார்ட்டரை வாங்கி கொண்ட போனவர்கள் எல்லாருமே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தானாம். அதனால்தான் அவர்கள் உற்சாகமடைய வேண்டும் என்று குவார்ட்டரும் கோழிப் பிரியாணியும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment