வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2018-09-16
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 26, 2018

பெண்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டால் என்ன தவறு?



பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் Being Me தொடரின் மூன்றாவது கட்டுரை இது.



முகநூல்

சமூகவலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றேன். நான் பார்த்த விதத்தில் பெண்களுக்கு சமூகவலைதளங்களில் நிகழும் சாதகமான விளைவுகளையும் எதிர்மறையான அனுபவங்களையும் ஒரு விவாதப் பொருளாக எடுத்து கொள்ளலாம். முதலில் சாதகமானவற்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். ஏனெனில் நேர்மறையான விளைவுகள் மிகக் குறைவு. எனவே அதை அடிக்கோடிட்டு முதன்மைப்படுத்துவது நல்லது.
எழுத்துகள் மூலம் கருத்து பரிமாற்றம்

சென்ற தலைமுறைப் பெண்களுக்குக் கிட்டாத ஒரு வாய்ப்பு எழுத்து மூலம் பொதுவெளியில் கருத்து பரிமாற்றம் நிகழ்த்துவது ஆகும். பெரும்பாலும் தோழிகளுக்குக் கடிதம் எழுதும் அளவிற்கு எழுதுபொருள் சுருங்கியதாக இருந்திருக்கும். பெண் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே இருந்தனர்.
ஆனால் சமூக வலைதளங்கள் வந்தபின் அத்தகைய இடர்கள் குறைந்து எழுத்துமொழி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பத்தில் ஆறு பெண்களாவது எழுதக்கூடியவர்களாக இருக்கின்றனர். இவ்விடத்தில் என்ன எழுதுகிறார்கள் என்பது முக்கியமன்று. எழுத்து மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது அதிகரித்திருக்கின்றது. மேலும் எழுதவேண்டும் என்கிற ஆர்வத்தினால் பல பெண்கள் புத்தகங்கள் வாசிக்கின்றனர்.



பிபிசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் அரசியல் பேசுவதும் இலக்கியம் பேசுவதும் கடந்த நான்காண்டுகளில் சரசரவென அதிகரித்ததில் சமூகவலைதளங்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. அதேபோல எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுவது சாதாரண விஷயமன்று. ஆனால் இன்று ஃபேஸ்புக்கில் எழுதியோ ப்ளாக்கில் எழுதியோ பின்பு அவற்றைத் தொகுத்து எளிதாக எழுத்தாளர் என்று அறியப்படலாம்.
நம் படைப்புகளை விளம்பரம் செய்வதற்கும் நம்முடைய துறைசார்ந்தவர்களை அணுகுவதற்கும் இத்தளங்கள் ஒரு தொலைதொடர்பு காரணியாக இருக்கின்றன. மேலும் எனக்கு வருகின்ற விமர்சனங்களையும் பாராட்டுகளையும் நான் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வளவு நன்மைகள் இருப்பினும் இதில் இரண்டுபங்கு எதிர்மறை அனுபவங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்திருக்கும்.
எதிர்மறை அனுபவங்கள் அதிகம்

எதிர்மறை அனுபவங்களில் முதலாம் இடம் வகிப்பது பாலியல் வசை. உடல் ரீதியான விமர்சனங்கள், பகடிகள், தவறாகச் சித்தரித்தல் போன்றவை பெண்கள் வழக்கமாக எதிர்கொள்பவை. முதன்முறையாகத் தாக்கப்படும்போது பல பெண்கள் இங்கிருந்து கணக்கை மூடிவிட்டு கிளம்பிவிடுகின்றனர். ஏனெனில் பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்கள் தங்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.



பீயிங் மீ

பெண்ணுக்கான பெயர் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும்போது அது அக்குடும்பச்சூழலை பெரிதும் பாதிக்கும் காரணியாக உள்ளது. திருமணமாகாத பெண்கள் எனில் அவர்களது தாய் தந்தையை பாலியல் ரீதியாகத் திட்டுவது, குடும்பப் பெண் எனில் அவள் சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குவது என்று இங்கு பாலியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம்.
இதைச் செய்பவர்கள் பெரும்பாலும் முகம் மறைத்துத் தாழ்வுணர்வில் போலிக்கணக்குகளில் இயங்கி வருபவர்கள். இவர்கள் ஏதேனும் ஒரு பெண் சுதந்திரமாக ஏதாவது கருத்தை முன்வைத்தால் அந்தக் கருத்தை நோக்கி எதிர்விவாதம் வைக்க மாட்டார்கள். உருவகேலி, ஒழுக்கப்பகடி, வசைகள் முதலியவற்றில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். இதற்குத் தீர்வாக ப்ளாக் செய்துவிடுங்கள் என்கிற அறிவுரைகளைப் பொதுவெளியில் கேட்கலாம். நாம் ப்ளாக் செய்வதால் அந்தப் போலிக்கணக்கர் அமைதியாகிவிடப்போவதில்லை.
இதேபோல மற்றொன்று, குழுவாக இணைந்து நம்மை வசைபாடுவது. இதில் பெண்களும் உள்ளடக்கம். காரணமற்ற வன்மங்கள் அல்லது சுயகழிவிரக்கம் முதலியவை இத்தகைய வசைபாடல்களுக்கு இவர்களை அழைத்துச்செல்கிறது. பெண்கள் இங்கு ஓரளவு இவற்றைப் புரிந்துகொண்டு தன்விருப்பத்தின் பேரில் தொடர்ந்து இயங்கிவந்தால் மனிதர்கள் எத்தனை கேவலமானவர்கள் என்பதை அறியலாம்.


சமூக வலைதளங்கள் மானுடம் மீது அசூயை கொள்ள வைக்கும். ஒவ்வொருவரிடமும் இருக்கின்ற நஞ்சை ஒவ்வொரு தருணத்தில் அறியலாம். மேலும் பெண்களுக்கு எதிராக இப்படியோர் உலகம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறதா என்கிற வியப்பும் ஏற்படும்.



பிபிசிபடத்தின் காப்புரிமைBBC SPORT

பெண் என்கிற காரணத்தினால் வரும் மற்றொரு எதிர்விளைவு ஃபாலோயர்களின் விருப்பம். அவர்களது விருப்பம் வெறும் தற்படங்களும் புகைப்படங்களும் மட்டுமே. ஒரு கனமான இலக்கியம்சார் கட்டுரையோ கவிதையோ எழுதினால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண் பொதுவெளிக்கு வந்தால் அவள் அழகைக் கடந்து படைப்புகளை கவனிக்கத் தவறுகின்றனர். இது லாபமான விஷயம்தானே என்று கருதக்கூடும். மேலோட்டமாகப் பார்த்தால் அவ்வாறு தோன்றும். ஆழமாகச் சிந்திக்கும்போது பெண்களை அறிவுசார் தளத்தில் சுதந்திரமாக இயங்கிட மறைமுக எதிர்ப்புதான் இத்தகைய அழகு சார்ந்த ஆராதனைகளும் பாராட்டுகளும்.
இப்போது புதிதாக உருவாகியிருக்கும் மோசமான தாக்கம் ட்ரெண்டிங்கும் கொள்கைசார் சண்டைகளும். இன்றைய டிரெண்டிங் ஓர் அரசியல்வாதியின் பேச்சு என்றால் அதுகுறித்து கட்டாயம் பகடியோ எள்ளலோ செய்திருக்க வேண்டும். இல்லை அந்நேரத்தில் கவிதையோ வேறு ஏதோ எழுதினால் வசைக்குள்ளாவோம்.

அடுத்து அடிப்படைவாதம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளால் இரண்டு பிரிவாக நின்று எந்தக் கருத்தையும் ஆராயாமல் முட்டாள்தனமாக ஒருவரையொருவர் சாடி எழுதும் வழக்கம். உதாரணமாக நம் வழியில் சுதந்திரமாக எழுதிக்கொண்டிருப்போம். நம்மிடம் வந்து ஒரு கொள்கையைத் திணித்து இதுதான் சுதந்திரம் என வகுப்பெடுக்க ஆரம்பிப்பார்கள். நாம் கேட்கவில்லை எனில் அடிப்படைவாதியாக முத்திரை குத்தப்பட்டு ஒவ்வொருமுறையும் மோசமாக சித்தரிக்கப்படுவோம். இதுதான் உங்கள் கருத்தியலா என்று கேள்வி கேட்டால் அந்தப் பெரிய மனிதரின் படத்தை முகப்புப் படமாக வைத்துக்கொண்டு நம் குடும்பத்தையும் சேர்த்து வசைபாடுவார்கள்.



being me

இதிலிருந்து மீள்வது எப்படி என்கிற கேள்வி அனைவருக்கும் எழும். உங்களை வசைபாடத் துவங்கினால் பதிலுக்கு நாமும் அதேமாதிரி கெட்டவார்த்தையில் அவர்களது குடும்பத்தை இழுத்தால் போதும் அடங்கிவிடுவார்கள். ஏனெனில் இங்கு பெண்கள் கெட்டவார்த்தை பேசமாட்டார்கள் என்கிற மூடநம்பிக்கை ரொம்பக்காலமாக இருக்கின்றது. அதிலும் நல்ல குடும்பத்துப் பெண்கள் என்று ஓர் உயர்வு நவிற்சியினை உருவாக்கிக்கொள்வர்.
மேலும் இங்கு சைபர் குற்றப்பிரிவு, பணமோசடிகளில் துரிதமாக இயங்கிக் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் அளவிற்கு பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக உருவகேலியாகத் தவறாகப் பேசுவதற்கோ எழுதுவதற்கோ பயப்படும் அளவிற்குச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். போலிக்கணக்குகளை முடக்குவதில் அரசு தீவிரம் காட்டினால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறையும். பெண்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் சமூகவலைதளங்களிலேயே கேள்விக்குள்ளாகும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் இந்தியா இருப்பதில் வியப்பேதும் இல்லை.


தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning

பாடல் - 1.

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.

அர்த்தம் :
ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று. 

தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning

 தினம் ஒரு குறள் :

குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.

 அர்த்தம் :

 எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

Tuesday, September 25, 2018

நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்?



18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக விளங்கிய ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.


108 நாட்கள் கழிந்த பிறகு, கர்நாடக - தமிழக அரசுகள் நடத்திய பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நவம்பர் 15ஆம் தேதியன்று ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் 14 பேரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டில் வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனுடன் இருந்தவர்கள் என கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, நாகராஜ், முத்துசாமி, கல்மண்டி ராமன், மாறன், சத்தியா, அமிர்தலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ரமேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.


18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நீதிபதி கே. மணி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராஜ்குமார் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் என அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்திருக்கக்கூடிய நடிகர் ராஜ்குமாரிடமுமோ அவருடைய மனைவி பார்வதம்மாவிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லையென்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்தபோதும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.


பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, பிற ஆதாரங்களும் பத்து மாதங்கள் கழித்தே அளிக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் கூறினார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது வீரப்பனுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய அரசுத் தூதர்களின் (நக்கீரன் கோபால், பழ.நெடுமாறன், பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) புதுவை சுகுமாரன்) சாட்சியங்களும் பெறப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.


மேலும், இந்த ஒன்பது பேர்தான் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் ஏதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளித்து அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

Saturday, September 22, 2018

உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?



மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும்.
உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.
ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

Friday, September 21, 2018

பொம்மையை வைத்து விபச்சாரம் செய்த கடைக்காரர் கைது! ஏன் தெரியுமா?


வெளிநாடுகளில் செக்ஸ் பொம்மைகளை உடலுறவுக்கு வாடகைக்கு விடும் நிலையங்கள் அதிகரித்து வருகிறது. சிலிக்கானால் செய்யப்பட்ட இந்த பொம்மைகள் ஒரிஜினல் பெண்கள் போன்று இருப்பதாலும் செக்ஸின்போது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதாலும் அதிக நபர்கள் இதனை வாடைகை எடுத்து செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.


இந்த நிலையில் இத்தாலியில் கடந்த ஒன்பது நாட்களுகு முன் ஒருவர் செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் கடை ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒன்பதே நாட்களில் போலீசார் இந்த கடையை ரெய்டு செய்து கடையை இழுத்து சீல் வைத்ததோடு கடை ஓனரையும் கைது செய்தனர்.

செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு விடும் அந்த நபர் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளரிடம் சென்று வந்த பின்னர் சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் இந்த பொம்மையை பயன்படுத்துபவர்களுக்கு தொற்று வியாதி வருவதற்கு வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டதால் அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா...?


முருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது.
பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர்.

கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும். எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்.
தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300 மிலி. குடித்து வந்தால் புற்றுநோய் கட்டிகளை எளிதில் உடலில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலிமையாக்கி வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இதில் உள்ள நியாஸிமிஸின் என்ற மூல பொருள் ஆரம்ப கட்டத்தில்  இருக்கும் புற்றுநோய் செல்களை சிறிது சிறிதாக அழிக்கவும், செல்கள் வளர்ச்சியை முற்றிலுமாக தடை செய்கிறது.
உங்கள் தோல் சார்ந்த அனைத்திற்கும் ஒரு மிக சிறந்த மருந்து முருங்கையே. முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால், உங்கள் சருமத்தை எப்போதும்  சுத்தமாகவும், கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கலாம்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவிகளின் துப்பட்டா பறிப்பு: பெரும் பரபரப்பு



மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த கல்லூரி மாணவிகள் சிலரின் துப்பட்டாவை போலீசார் பறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்ட அரசு விழா ஒன்றில் மகாத்மா காந்தி சிதரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருசில மாணவிகள் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தனர். இந்த துப்பட்டாவை முதல்வர் பேசும்போது மாணவிகள் கருப்புக்கொடி காட்ட பயன்படுத்துவார்கள் என கருதிய போலீசார் துப்பட்டாவை பறித்து வைத்து கொண்டு நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


கல்லூரி மாணவிகளின் துப்பட்டாவை போலீசார் பறித்தது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மபி மாநில காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காவல்துறையினர்களின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி போராட பெண்கள் அமைப்புகளும் திட்டமிட்டு வருகின்றன.

இளம்பெண்ணுடன் ஜல்ஷா செய்யும் கல்லூரி நிர்வாகி - அதிர்ச்சி வீடியோ


கோவையை சேர்ந்த கல்லூரி நிர்வாகி அங்கு பணிபுரியும் இளம் பெண்களுடன் கூத்தடிக்கும் புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அறையில் அவர் காத்திருக்க, அங்கு அவரும் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அவர் கூத்தடிக்கும்  காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


அவர் கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(64) எனவும், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மொத்தம் 2 வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டிலும் இருப்பது ஒரு பெண்தானா? இல்லை வேறு வேறானவர்களா என்பது தெரியவில்லை. அந்த நபர் இளம்பெண்களுடன் ஜல்ஷா செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Thursday, September 20, 2018

நாப்கினுக்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்கள்


மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானட்டரி நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்வது கென்யாவில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கென்யாவில் சமீபத்தில் யுனிசெப் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் இருக்கும் 65% சதவீத பெண்கள் வறுமையின் காரணமாக சானிட்டரி நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு வைத்துக்கொள்கின்றனராம். 

கென்யாவில் உள்ள கிராமங்களில் நாப்கின் எளிதாக கிடைப்பதில்லை. அதோடு அதை வாங்க மேற்கொள்ளும் பயணத்திற்கும் பணமில்லை, போக்குவரத்தும் இல்லை. எனவே, கிராமத்தில் இருந்து வெளியே போகும் டிரைவர்களிடம் உடலுறவு வைத்துக்கொண்டு, அவர்களை நாப்கின் வாங்கி வரும் படி கூறுகின்றனர். இந்நிலையில், இதற்கு முடிவு கொண்டுவர கென்யா அரசும், யுனிசெப்பும் சேர்ந்து இந்த பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.