வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சினிமாவில் எடுக்கப்படும் விபத்து காட்சி போல் திண்டுக்கல் அருகே நிஜ விபத்து | Dindigul Nilakkottai Car Bike Accident | Electric Poll Dead | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 08, 2021

சினிமாவில் எடுக்கப்படும் விபத்து காட்சி போல் திண்டுக்கல் அருகே நிஜ விபத்து | Dindigul Nilakkottai Car Bike Accident | Electric Poll Dead | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதய விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 பேர் பலி.

மதுரை மாவட்டம், மதுரை ஏர்போர்ட், பெருங்குடி பகுதியைச் சேர்ந்த காமு என்ற காமராஜ் வயது 21. அஜித் கண்ணன் வயது 21. மற்றும் இவரது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 5ஆம் தேதி சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் இரண்டு தினங்கள் சுற்றிவிட்டு மீண்டும் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள சிலுக்குவார்பட்டி சிவன்கோயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து பண்ணைக்காடு நோக்கி சென்ற ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது.

இதில் அஜித் கண்ணன் சினிமா பட சம்பவம் போல் மோட்டார் சைக்கிளிலிருந்து சுமார் 10 அடி உயரம் பறந்து சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் தொங்கினார். அதேபோன்று காமு என்ற காமராஜ் அப்பகுதியில் காட்டுப் பகுதியில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் பரிதாபமாக இறந்து போனார். 

மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த வரை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார்கள் விரைந்து சென்று இரண்டுபேர் உடல்களையும் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment