வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Accident News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Accident News. Show all posts
Showing posts with label Accident News. Show all posts

Monday, April 21, 2025

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி | Bike Accident near Gurukulam | Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற தடம் எண் 81 M அரசு பேருந்து முதுகரை பகுதியில்  இருந்து  மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த மெக்கானிக் பழனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Friday, September 08, 2023

மதுராந்தகம் அருகே கார் வேன் மோதல்.! காரில் வந்த நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் செல்லும் சாலையில் எல்.என்.புரம் என்ற இடத்தில் செய்யூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்த வேனும் மதுராந்தகத்திலிருந்து செய்யூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி. ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலி.


மொத்தம் நான்கு பேர் இந்த விபத்தில் பலி ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆண்கள். விபத்து குறித்து  செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடந்தி வருகின்றனர்.

விபத்தில் பலியானவர்கள்.!





📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 11, 2022

[விபத்து] மதுராந்தகம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருங்குழி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்ற அரசு பேருந்து வேகமாக சென்றபோது நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் பேருந்தில் வந்த 40 பணிகளில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


இவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, December 10, 2022

சிங்கப்பெருமாள்கோவில் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு காதல் ஜோடி பலி.!

சிங்கப்பெருமாள்கோவில் அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு காதல் ஜோடி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவருடைய மகன் அலெக்ஸ்(வயது 21). ஐ.டி.ஐ. படித்து விட்டு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி இருந்தார்.

அவர் வேலை பார்த்த அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சேதுபுண்ணவாய்க்கால் நாடார் தெருவை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின்(18) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் இருவருக்கும் பழக்கமானது. நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஆரோக்கிய ஜெர்சலின் தங்கி இருந்த அறை அருகே உள்ள ெரயில்வே தண்டவாளம் பகுதியில் அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலினுடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இரவு நேர கடைசி மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி, ரெயில் மோதாமல் இருக்க தண்டவாளத்தின் ஓரமாக ஒதுங்கினர். அப்போது ரெயில் மோதியதில் அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலின் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் ெரயில்வே போலீசார், பலியான காதலர்கள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த அலெக்ஸ், ஆரோக்கிய ஜெர்சலின் இருவரும் காதலித்து வந்துள்ளனர். வேலை முடிந்த பிறகு இரவு நேரங்களில் அடிக்கடி இருவரும் தண்டவாளம் பகுதியில் சந்தித்து பேசி வந்துள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் வந்ததால் தண்டாளத்தை கடந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் பள்ளமாக இருந்ததால் தண்டவாளத்தைெயாட்டி ஓரமாக நின்றபோது மின்சார ரெயில் மோதி பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து மின்சார ரெயிலில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்து இறங்கினார். பின்னர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சார ரெயில் மோதியதில் அகிலன் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்