வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா! முதலையை விழுங்குமா? விவரம் உள்ளே
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, July 13, 2019

சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா! முதலையை விழுங்குமா? விவரம் உள்ளே

அனகோண்டா பாம்பு மனுஷனை விழுங்கும் என்று தெரியும்.. ஆனால் மனுஷனை விட பல மடங்கு வலிமை வாய்ந்த முதலையை விழுங்குமா? அப்படி லபக்கென விழுங்கிய போட்டோக்கள்தான் உலகமெங்கும் வைரலாகி வருகிறது.

 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் மார்ட்டின் முல்லர் என்பவர் போட்டோ எடுத்து கொண்டிருந்தார். இவர் ஃபேமஸ் போட்டோகிராபர் ஆவார்.


அந்த நேரத்தில் இவர் கண்ணில் சிக்கிவிட்டது இந்த அற்புத காட்சி. அனகோண்டா பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அங்கு நீர்நிலையோரம் ஒரு முதலை படுத்திருந்தது. அந்த முதலையை சத்தமே இல்லாமல் நகர்ந்து வந்து சுற்றி வளைத்து..

 உடலை இறுக்கி.. அதன் எலும்புகளை நொறுக்கி, முக்கால் பாகம் முதலையை வாய்க்குள் விழுங்கிவிட்டது. இந்த அரிய காட்சியைதான் மில்லர் பார்த்ததுமே போட்டோ எடுத்துவிட்டார்.

கொடிய விலங்கான முதலையேயே இந்த அனகோண்டா விழுங்கிய இந்த போட்டோக்களை இணையத்தில் போடவும் எல்லாரும் வாயை பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.


பொதுவாக இந்த அனகோண்டா ஆலிவ் வகையை சேர்ந்தது என்பார்கள். ஆனால் போட்டோகிராபர் பார்த்த அனகோண்டா பாம்பானது, மேற்கு ஆஸ்திரிலேலியா பகுதியில் இருக்குமாம்.
 13 அடி நீளம் வளக்கூடியதாம்- 2-வது மிகப்பெரிய அனகோண்டா இது என்றும் இந்த அனகோண்டா பாம்புகளின் தாடைகள் இரண்டும் தனித்தனியாக இருப்பதால்தான் பெரிய பெரிய விலங்குகளை விழுங்க முடிகிறது என்றும் மில்லர் சொல்கிறார்.


No comments:

Post a Comment