வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மருங்கூரில் எங்க திரும்பினாலும்.. யாரை பார்த்தாலும்.. மர்ம தேசமா.. இல்லை.. இல்லை.. ஒன்லி வெள்ளை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, July 22, 2019

மருங்கூரில் எங்க திரும்பினாலும்.. யாரை பார்த்தாலும்.. மர்ம தேசமா.. இல்லை.. இல்லை.. ஒன்லி வெள்ளை!

மருங்கூரில் எங்க திரும்பினாலும் வெள்ளை.. யாரை பார்த்தாலும் வெள்ளை.. பேய், பிசாசு, ஆவியெல்லாம் ஒன்னும் இல்லை.. எல்லாம் நம்ம மக்கள்தான்! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள ஊர்தான் மருங்கூர்.


சின்ன ஊர்தான்.. ஆனால் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். அங்கு வாழும் மக்கள் குல தெய்வமாக ஆகாச வீரனை வழிபட்டு வருகின்றனர். இந்த ஆகாச வீரனுக்குத்தான் எப்பேர்பட்ட வழிபாட்டு முறைகள்.. இதை பற்றி கேட்டாலே நமக்கு ஆச்சரியம் வாயை பிளக்கிறது.



ஆகாச வீரன் 
 பொதுவாக வழிபாட்டு இடங்களில் வேல், சிலை, மரம் என ஏதேனும் ஓர் அடையாளம் இருக்கும். ஆனால் இந்த ஆகாச வீரனுக்கு எவ்வித அடையாளமும் பூமியிலேயே இல்லையாம். இவர் வானத்தில் இருப்பதாக நம்புகின்றார்கள்.


 பங்காளிக் குழுவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வேண்டிக்கொண்டு ஆகாச வீரனுக்கு பூசை செய்வது வழக்கம். ஆடு, பன்றி ஆகிய உயிர்களை வீரனுக்கு வேண்டி விடுவார்கள்.


மஞ்சள், மிளகு 
 பொங்கல் மட்டும் பொங்குவார்கள். இதற்கு பால் பூசை என்று சொல்கிறார்கள். இந்த பொங்கலுக்கு கைக்குத்தல் அரிசியே பயன்படுத்தப்படுகிறது. மண்பானை, சட்டி, அகப்பை ஆகியவற்றை மட்டுமே சமைக்கப் பயன்படுத்துகின்றனர். மஞ்சள், மிளகு ஆகியவற்றைத் தவிர உப்பு, புளி, மிளகாய் என எதையும் பயன்படுத்துவது கிடையாது.



நெல் குத்துவது 
பொங்கல் வைப்பது யார் தெரியுமா.. ஆண்கள்தான்.. நெல்லைக் குத்துவது, மஞ்சள் அரைப்பது என அனைத்து வேலைகளையும் ஆண்களே செய்யவேண்டும்.


 பூஜைக்கு பொருள்களைக் கொண்டு போவது முதல், செல்லும் போதும், மஞ்சளரைத்து எடுத்துச்செல்லும் போது வரை யாருமே எதிரே வரக்கூடாதாம். யாரும் வராதீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து விடுவார்கள்.


காட்டுமல்லி 
சமைத்த உணவு வகைகளைப் படைப்பதற்கு வாழை இலை பயன்படுத்துவதில்லை. பொரச இலையை தைத்து தையல் இலையாகப் பயன்படுத்துவர். இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. காட்டுமல்லிப் பூவைத்தான் பூசைக்குப் பயன்படுத்துகின்றனர்.



வெள்ளை உடை
படைக்கும்போது பூசை செய்பவர் வாயை கட்டிக்கொள்வார். ஒவ்வொரு இலைக்கும் முன்பாக சூடத்தை கொளுத்தி எரியச்செய்வர். பூசையில் கலந்து கொள்ளும் ஆண், பெண், சிறுவர்கள் அனைவரும் வெள்ளை உடையில்தான் வர வேண்டும்.


 கறுப்பு நிற நாடாவோ, அறைஞாண்கயிரோ அணியக் கூடாது. ஆகாச வீரனுக்குக் கறுப்பு கலர் பிடிக்காதாம். பூசை முடிந்ததும் முதல் உணவை ஆகாயத்தை நோக்கி வீசுவது மரபு. ஆகாச வீரன் அவ்வுணவைப் பெற்றுக்கொள்வார் என நம்புகின்றனர்.


உப்பு இல்லை 
 பூசையன்று பெண்கள் தலையில் பூச்சூடுவதில்லை. அன்று தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்பதில்லை. உப்பின்றிச் சமைப்பது, பூசைப் பொருள்களைக் கூடையில் வைத்து எடுத்துச் செல்வது, அப்போது எதிரில் யாரும் வராமலிருப்பது, பெண்கள் வெள்ளை உடை அணிவது ஆகிய அனைத்தும் இறப்புச் சடங்கோடு தொடர்புடையவை. 


எனவே தங்கள் இல்லத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போரில் இறந்த வீரனையே இவர்கள் தெய்வமாக வழிபடுவதாகக் கருதுகின்றனராம்!


No comments:

Post a Comment