Run World Media: காதலனுடன் ஓடிய மகள்.. ராத்திரியோடு ராத்திரியாக கொன்று.. தீவைத்து எரித்து .. ஒரு தாயின் கொடூர செயல்!

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 19, 2020

காதலனுடன் ஓடிய மகள்.. ராத்திரியோடு ராத்திரியாக கொன்று.. தீவைத்து எரித்து .. ஒரு தாயின் கொடூர செயல்!

ராத்திரியோடு ராத்திரியாக மகளின் சடலத்துக்கு தீ வைத்து இறுதி சடங்கையும் செய்துவிட்டார் பெற்ற தாய்.. இந்நிலையில், தன்னுடைய காதலி சாவித்ரி, ஆணவ கொலை செய்யப்பட்டுவிட்டதாக, காதலன் அளித்த புகாரின்பேரில் தாய் உள்ளிட்ட 7 பேரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் விவேக்.. இவர் ஒரு பெயிண்ட்டர்.. 

திருவரங்குளம் பகுதியை சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணை காதலித்தார்.. சாவித்திரி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் திருவரங்குளம் அரசுப்பள்ளியில் பத்தாம் கிளாஸ் வரை ஒன்றாக படித்தவர்கள்.. 8 வருஷமாகவே உயிருக்கு உயிராக நேசித்து வந்துள்ளனர்.. இருவருக்கும் இப்போது 20 வந்துள்ளனர்.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. இந்த காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.கண்டிப்பு 
அதனால் அவரது அம்மா மகளை கண்டித்துள்ளார்.. மேலும் அவசர அவசரமாக சாவித்திரிக்கு அறந்தாங்கியை சேர்ந்த ஒருவருடன் கல்யாணமும் பேசி முடித்துள்ளதாக தெரிகிறது.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த சாவித்திரி, விவேக்கிடம் அழுதுள்ளார்.. தன்னை எங்காவது அழைத்து சென்றுவிடும்படியும், ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளும்படியும் கதறி உள்ளார்.


சாவித்ரி
இதனால் விவேக்கும் சாவித்திரியை கோவைக்கு அழைத்து வர திட்டமிட்டு ஒரு வாடகை காரையும் ஏற்பாடு செய்தார். பின்னர் கடந்த 7ஆம் தேதி இரவு 2 பேரும் அந்த காரில் புறப்பட்டுள்ளனர். ஆனால், வழியில் குளித்தலையில் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.. அப்போது விவேக்கிற்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்று சொல்லி, சாவித்திரியை அவரது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்தனர்.


மர்ம மரணம் 
மேலும் விவேக்கிற்கு திருமண வயது எட்டும் வரை, வேறொருவரை திருமணம் செய்ய சாவித்திரியை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவாதத்தினை பெற்றோரிடம் போலீசார் வாங்கி கொண்டு அனுப்பினர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சாவித்திரி பிணமாக கிடந்தார்... அவரது மர்ம மரணத்துக்கு காரணமும் தெரியவில்லை.. மேலும் சொந்தக்காரர்களுக்கும் தெரியப்படுத்தாமல், இரவோடு இரவாக சாவித்திரியின் உடலை ஒருசில உறவினர்களே சேர்ந்து எரித்து இறுதி சடங்குகளையும் முடித்து விட்டனர்.


விசாரணை 
இதை பற்றி அக்கம் பக்கத்தில் கேட்டதற்கு தூக்கு போட்டு இறந்து விட்டார் என்று உறவினர்கள் சொல்லி உள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் தெரிந்து ஆவேசமடைந்த விவேக், காதலியை ஆணவ கொலை செய்து விட்டதாக புதுக்கோட்டை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. அதனடிப்படையில் விசாரணை ஆரம்பமானது.

7 பேர் மீது வழக்கு 
இதனிடையே சாவித்திரியின் சடலத்தை வருவாய்த் துறையினருக்குகூட தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் விஏஓ இளையராஜா மற்றொரு புகார் தந்தார். இதன்பேரில்தான் சாவித்ரியின் பெற்றோரிடம் விசாரணை ஆரம்பமானது.. பின்னர், சாவித்திரியின் தாயார் சாந்தி, பெரியம்மா விஜயா, மாமா முருகேசன், பெரியப்பா நடேசன், முருகேசன், தாய்மாமா சிதம்பரம் என 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தமிழகம் 
காதலி ஆணவ கொலை செய்யப்பட்டதாக காதலர் புகார் அளித்த நிலையில், பெண்ணின் தாய் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மட்டுமில்லாமல் தமிழகம் முழுதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் மாதர் சங்கமும் தலையிட்டுள்ளது.. எப்படியாவது இறந்துபோன பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்